நாட்டின் தற்போதைய சுகாதார நிலையை கருத்திற் கொண்டு ஆரோக்கியமானவர்கள் முன்வந்து இரத்த தானம் செய்வது பற்றிய வழிகாட்டல்

செப் 06, 2021

ACJU/NGS/2021/188

2021.09.06 (1443.01.27)

 

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

முழு உலகத்திலும் குறிப்பாக எமது நாட்டிலும் தற்போது கொவிட் - 19 பரவல் வேகமாக இருப்பதுடன் அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலைகளில் நிரம்பி வழிவதனையும் நாம் அறிவோம்.


இக்கட்டான இந்நிலையில் இஸ்லாம் சமூகப் பணிகளில் ஈடுபடுமாறும் பாதிக்கப்பட்டோர், நோயுற்றோர் என தேவையுடையோர்களை இனங்கண்டு உதவி செய்யுமாறும் எமக்கு வழிகாட்டியிருக்கின்றது.


'எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்.' (அல்-குர்ஆன் : 5-32)


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். 'யார் ஒரு சகோதரனின் ஒரு துன்பத்தை நீக்குகிறாரோ அதற்குப் பகரமாக அவரை விட்டு அல்லாஹ் மறுமை நாளில் அவருடைய துன்பங்களில் ஒன்றை நீக்குகிறான்.' (ஸஹீஹு முஸ்லிம் : 2699)


அந்த வகையில் மனிதனுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாக இரத்தம் காணப்படுகின்றது. தற்போதைய இச்சூழ்நிலையில் எமது நாட்டில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு வைத்தியசாலைகளில் இரத்தப் பற்றாக்குறை நிலவுவதாக உரிய அதிகாரிகளின் மூலம் அறியக் கிடைத்துள்ளது.


இரத்த தானம் வழங்குவது தொடர்பான வழிகாட்டல்களையும் நிபந்தனைகளையும் அகில இலங்கை ஜம்யஇய்யத்துல் உலமாவின் ஃபத்வாப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள பின்வரும் மார்க்க விளக்கத்தில் பார்வையிடலாம்.

(இணைப்பு - https://acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/746-2016-08-04-06-22-09)


எனவே, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதேசக்கிளைகள் மஸ்ஜித் நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன் இரத்ததானம் வழங்கும் விடயத்தில் சுகாதார வழிகாட்டல்களைப் பேணி அதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.


வஸ்ஸலாம்.

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.