Print this page

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரும் விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்

ஆக 26, 2021

 

1) 20219.04.21 - இன்று எங்கள் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் ஈஸ்டர் கொண்டாட்டத்தில் இருக்கும் போது தேவாலயங்கள் மற்றும் பிற இடங்களில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது

இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன் இந்த தாக்குதல்கள் தொடர்பான உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும், புரிந்துணர்வையும் பாதுகாக்க முன்வர வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.

https://acju.lk/news-ta/acju-news-ta/item/1613-2019-04-21-07-44-55 

 

2) 2020.04.21 - சென்ற வருடம் (2019) இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு தின மிலேச்சத்தனமான தாக்குதல் தொடர்பாக

இந்த வேளையில் அக்கோர நிகழ்வுகள் காரணமாக உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் கவலையையும் தெரிவித்துக் கொள்வதோடு சொந்தங்களை இழந்து தவிக்கும் உறவுகளுக்கு உள அமைதியும் வாழ்வில் அனைத்து வகையான நலன்களும் நிறைவாக கிடைக்கவேண்டுமென எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றோம்.


தமது வணக்கஸ்த் தலங்களில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த அப்பாவி பக்தர்களையும் ஏனைய பொது மக்களையும் படுகொலை செய்தமை இஸ்லாமிய போதனைகளுக்கு முற்றிலும் முரணான செயலாகும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமிருக்க முடியாது. இதனைச் செய்தவர்கள் மனித குலத்தின் எதிரிகளாவர். இக்காரியத்தில் ஈடுபட்டோர் யாராக இருப்பினும் அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவர்களாவர்.

https://acju.lk/news-ta/acju-news-ta/item/1918-2020-04-20-06-40-18


3) 2020.04.21 - சென்ற வருடம் (2019) இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு தின மிலேச்சத்தனமான தாக்குதல் தொடர்பாக.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களின் காணொளி - https://youtu.be/bT_7zg3VDaE

 

4) 2021.02.21 - இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளும் அடையாளங்களும் கௌரவமும் பாதுகாக்கப்படல் வேண்டும்.

மேலும், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை வெளிப்படுத்தவும், அவர்களை சட்டத்தின் முன் கொண்டு வரவும், குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்படுவதை உறுதி செய்யவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

https://acju.lk/news-ta/acju-news-ta/item/2090-protecting-the-rights-signs-of-muslims-of-sl

 

5) 2021.03.04 - உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்கான வேண்டுகோளுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆதரவை தெரிவிக்கின்றது.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி அப்பாவி வழிபாட்டாளர்கள் மற்றும் பலர் மீது உயிர்த்த ஞாயிறு தினமன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளை அடையாளம் காட்டி, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு முன்வைக்கப்படும் பாதிக்கப்பட்டவர்களின் வேண்டுகோளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் ஆதரிக்கின்றது. இந்த மோசமான தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட சகல மதங்களைச் சேர்ந்த சகோதர சகோதரிகளின் வருத்தத்திலும் வேதனையிலும் நாமும் பங்கு கொள்கின்றோம்.


உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதற்காகவும், பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதற்காகவும் நாங்கள் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கின்றோம். ஆகவே, பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் வேண்டுகோளை நேர்த்தியாக சிந்திக்கக்கூடிய மக்கள் அனைவரும் முழு மனதுடன் ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பாதிக்கப்பட்டவர்களின் இவ்வுணர்வுகளுடன் நாங்கள் முழு மனதுடன் இணைந்துகொள்வதோடு, குற்றவாளிகளை வெளிப்படுத்துமாறு மேற்கொள்ளப்படும் இவ்வேண்டுகோளில் அனைத்து இலங்கையர்களும் ஒன்றுபடுமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் உரிய பரிகாரம் வழங்குவதன் மூலம் அவர்களுக்கு தேவையான ஆறுதலையும் வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

https://acju.lk/news-ta/acju-news-ta/item/2098-2021-03-05-08-59-05


6) 2021.04.02 - எங்கள் பிரார்த்தனைகளும் எண்ணங்களும் கிறிஸ்தவ சமூகத்துடன் உள்ளன.

இந்த மனிதாபிமானமற்ற கொடூர செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். மேலும் உயிர் இழந்த அனைவரின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தங்கள் அன்புக்குரியவர்களின் இழப்பால் கஷ்டப்படும் அனைவருக்காகவும் அவர்கள் ஆறுதலுடன் ஆசீர்வதிக்கப்பட வேண்டுமென்றும், வாழ்க்கையில் அனைத்து வகையான நல்ல அதிர்ஷ்டங்களும் ஈடுசெய்யப்படல் வேண்டுமென்றும் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்.

உண்மையான குற்றவாளிகள் மற்றும் பிரதம் சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் நிறுத்தாட்டப்பட வேண்டுமென்றும், நீதி நிலைநாட்டப்படல் வேண்டுமென்றும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

https://acju.lk/en/news/acju-news/item/2123-our-prayers-and-thoughts-are-with-the-christian-community

 

7) 2021.04.21 – அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் இலங்கையின் முஸ்லிம் சமூகம் தமது ஆழ்ந்த துயரத்தையும் உணர்வுபூர்வமான வருத்தையும் ஒட்டுமொத்த தேசத்துடனும் வெளிப்படுத்துகின்றன.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நடந்த காட்டுமிராண்டித்தனமான தற்கொலைத் தாக்குதல்களின் நினைவாக கொழும்பு பேராயரின் அழைப்பை ஆதரிக்குமாறு அனைத்து இலங்கையர்களையும் நாங்கள் வேண்டிக்கொள்கின்றோம்.

உண்மையான குற்றவாளிகள் மற்றும் முக்கிய சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் நிறுத்தாட்டப்பட வேண்டுமென்றும், நீதி நிலைநாட்டப்படல் வேண்டுமென்றும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

https://acju.lk/en/news/acju-news/item/2141-easter-attack-message 

 

8) 2021.05.14 – நோன்புப் பெருநாள் செய்தி

இந்த புனித நாளில், அநியாயத்தை எதிர்கொண்டவர்கள், ஈஸ்டர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உடனடியாக நீதி மற்றும் நிவாரணம் கிடைக்க பிரார்த்திக்கிறோம்.

https://acju.lk/news-ta/acju-news-ta/item/2158-eid-day-message-tamil


9) 2021.06.18 - மாண்புமிகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதம் - ஈஸ்டர் தாக்குதல்களின் விசாரணையை துரிதப்படுத்தவும், உண்மையான சூத்திரதாரியை அடையாளம் கண்டு நீதியை நிலைநாட்டவும் கோரிக்கை. (சிங்களம்)

https://acju.lk/en/news/acju-news/item/2252-letter-to-he-gotabaya-rajapakse

 

10) 2021.06.18 – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் - ஈஸ்டர் தாக்குதல்களின் விசாரணைகளை துரிதப்படுத்தவும், உண்மையான சூத்திரதாரியை அடையாளம் கண்டு நீதியை நிலைநாட்டவும் கோரிக்கை. (சிங்களம்)

https://acju.lk/en/news/acju-news/item/2254-letter-to-pm-mahinda-rajapakse

 

11) 2021.06.18 – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் (டாக்டர்) சரத் வீரசேகர அவர்களுக்கு கடிதம் - ஈஸ்டர் தாக்குதல்களின் விசாரணைகளை துரிதப்படுத்தவும், உண்மையான சூத்திரதாரியை அடையாளம் கண்டு நீதியை நிலைநாட்டவும் கோரிக்கை. (சிங்களம்)

https://acju.lk/en/news/acju-news/item/2253-letter-to-minister-of-public-security

 

12) 2021.06.18 - பாதுகாப்பு செயலாளர், ஜனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்களுக்கு கடிதம் - ஈஸ்டர் தாக்குதல்களின் விசாரணைகளை துரிதப்படுத்தவும், உண்மையான சூத்திரதாரியை அடையாளம் கண்டு நீதியை நிலைநாட்டவும் கோரிக்கை. (சிங்களம்)

https://acju.lk/en/news/acju-news/item/2255-letter-to-secretary-of-defence

 

ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா