சூரிய கிரகணம்

ஜூன் 09, 2021

ACJU/NGS/2021/093

 

நாளை (2021.06.10) வியாழக்கிழமை இன்ஷா அல்லாஹ் வலைய சூரிய கிரகணம் (Annular Solar Eclipse) ஏற்படவுள்ளதாக வானியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நிகழவிருக்கும் இச்சூரிய கிரகணம் உலகில் சில இடங்களில் வலைய சூரிய கிரகணமாகவும் இன்னும் சில இடங்களில் பகுதி சூரிய கிரகணமாகவும் தென்படும் எனவும், இலங்கையில் இக்கிரகணம் தென்படமாட்டாது எனவும் அவ்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.


சூரியன் அல்லது சந்திரன் முழுமையாக அல்லது அவற்றில் ஒரு பகுதி மறைவதைக் காணும் போதுதான் கிரகணத் தொழுகை சுன்னத்தாகும். குறித்த கிரகணம் எமது நாட்டில் தென்படமாட்டாது என்பதால் நமக்கு கிரகணத் தொழுகை ஸுன்னத்தாக மாட்டாது.


சூரியன் மற்றும் சந்திரன் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். ஒருவருடைய மரணத்திற்காகவோ அல்லது ஒருவரின் பிறப்பிற்காகவோ அவை மறைவதில்லை. அவற்றை மறையக் கண்டால் அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள், தக்பீர் சொல்லுங்கள், தொழுகையில் ஈடுபடுங்கள், தர்மம் செய்யுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி - 1044)

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர் - ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொது செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Last modified onபுதன்கிழமை, 09 ஜூன் 2021 12:18

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.