பெருநாள் தினம் தொடர்பான வழிகாட்டல்கள்

மே 11, 2021

ACJU/NGS/2021/069

2021.05.11 (1442.09.28) இம்முறை நெருக்கடியானதொரு சூழலில் நோன்புப் பெருநாளை கொண்டாட இருக்கின்றோம் என்ற உணர்வுடன் தன்னையும் தனது குடும்பத்தையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்காக வழங்கப்படுகின்ற அனைத்து சுகாதார வழிகாட்டல்களையும் உரிய முறையில் பேணி பெருநாள் தினத்தில் நடந்துக் கொள்ள வேண்டும்.


 பெருநாள் தொழுகையை பள்ளிவாசலிலோ அல்லது திடலிலோ கூட்டாக தொழுவதை முற்றாகத் தவிர்ந்துக் கொள்ள வேண்டும். மாறாக, எமது வீடுகளிற்குள்ளேயே எமது குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் இணைந்து பெருநாள் தொழுகையை தொழுது கொள்ள வேண்டும். (தொழும் முறையை பின்வரும் இணைப்பில் பார்க்கவும்)

https://acju.lk/news-ta/acju-news-ta/item/2149-eid-prayer-and-kuthba-guidance-tamil

 

 இம்முறை பெருநாளை வீட்டிலுள்ளவர்களுடன் மாத்திரம் பாதுகாப்பான முறையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளல். அத்துடன் பிரயாணங்களையும் ஒன்று கூடல்களையும் முற்றாக தவிர்ந்துக் கொள்ள வேண்டும். தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து துஆச் செய்து கொள்ளல்.


 பெருநாள் தினத்திலும் ஏனைய தினங்களிலும் மற்றவர்களுடன் முஸாபஹா, முஆனகா செய்வதை முற்றாகத் தவிர்ந்துக் கொள்ள வேண்டும்.


 ஷவ்வால் மாதம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பெருநாள் தொழுகை வரை அதிகமதிகம் தக்பீரை ஓதிக் கொள்ளல்.


 பெருநாள் தினங்களில் ஏழை எளியவர்கள் விடயத்திலும் கரிசணை காட்டி தம்மாலான உதவிகளை செய்து கொள்ள வேண்டும்.


எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா இவ்வைரஸின் தாக்கத்திலிருந்து முழு உலக மக்களையும் பாதுகாப்பானாக. ஆமீன்.
வஸ்ஸலாம்.


அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.