பலஸ்தீன் - காஸாவில் இடம்பெற்றுவரும் மனிதாபிமானமற்ற தாக்குதல் நிறுத்தப்பட குனூத்துன் நாஸிலாவில் பிரார்த்திப்போம்

ஏப் 08, 2025

ACJU/FRL/2025/09-427

2025.04.08 (1446.10.09)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

பலஸ்தீன் - காஸாவில் பல மாதங்களாக தொடர்ந்து நடாத்தப்பட்டு வரும் கொடூரமான தாக்குதலில், அக்டோபர் 07 முதல் இன்று வரை 62,614 அப்பாவி முஸ்லிம்கள் உயிரிழந்தும், 118,958 பேர் காயமுற்றும் உள்ளனர் என ஊடகங்கள் வாயிலாக அறியக்கிடைக்கின்றன.

எனவே, அப்பகுதியில் இடம் பெற்றுவரும் மனிதாபிமானமற்ற தாக்குதல் நிறுத்தப்படவும் அமைதி, சமாதானம் மற்றும் நீதி நிலை நாட்டப்படுவதற்கும் அனைத்து மஸ்ஜித்களிலும் பஜ்ர் தொழுகையில் ஓதக்கூடிய குனூத்துடைய துஆவை ஐவேளைத் தொழுகைகளில் மஃமூம்களுக்கு சடைவில்லாமல் ஒரு மாதகாலத்திற்கு ஓதிவருமாறும் அதில் பின்வரும் துஆக்களை சேரத்துக் கொள்ளுமாறும் மஸ்ஜிதுடைய இமாம்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வேண்டிக் கொள்கின்றது.

அத்துடன் தொழுகை, நோன்பு, ஸதகா, தௌபா மற்றும் இஸ்திஃபார் போன்ற நல்லமல்களைச் செய்வதில் கூடிய கவனம் செலுத்தி துஆப் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் அனைத்து முஸ்லிம்களையும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கிறது.

 

اللَّهُمَّ اكْتُبِ الأمْنَ والسَّلَامَةَ عَلَى العِبَادِ والبِلَادِ خَاصَّةً فِيْ فِلَسْطِيْنَ

اللَّهُمَّ حَرِّرِ الْمَسْجِدَ الأَقْصَى مِنْ كَيْدِ الغَاصِبِيْنَ وَالظَّالِمِيْنَ

اللهُمَّ اكْفِنَا شَرَّ الظَّالِمِينَ

اللَّهُمَّ إنَّا نَجْعَلُكَ في نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ

اللهُمَّ اكْفِهِمْ بِمَا شِئْتَ يَا رَبَّ الْعَالَمِيْنَ

 

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்

செயலாளர் - ஃபத்வா குழு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

 

முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி

தலைவர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

Last modified onசெவ்வாய்க்கிழமை, 08 ஏப்ரல் 2025 07:38

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.