கோவிட் 19 தொற்று காலப்பகுதியில் ஜனாஸாக்கள் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டமைக்கு நீதிகோரி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரார்த்திக்கும் விஷேட நிகழ்வொன்று 2025.04.06ஆம் திகதி கொழும்பு, மெரைன் கிராண்ட் மண்டபத்தில் நடைபெற்றது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உள்ளிட்ட 15 முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் ஏற்பாட்டுக் குழுவின் தலைவராக ஜம்இய்யாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான் அவர்கள் தலைமை வகித்ததுடன், பிரதான ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்களாக ஜம்இய்யாவின் உப செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம் மற்றும் ஊடகக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன் ஆகியோர் பங்குவகித்தனர்.
இந்நிகழ்வில் ஏற்பாட்டுக் குழுவின் அழைப்பின் பேரில் விஷேட அதிதிகளாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர், பொதுச் செயலாளர், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
குறித்த நிகழ்வில் ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் முக்கிய உரையொன்றை நிகழ்த்தினார்.
இறுதியாக நன்றியுரையினை ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான் அவர்கள் நிகழ்த்தியதுடன் மரணித்தவர்களுக்காகவும், அவர்களது குடும்பத்தினரது ஆறுதலுக்காகவும் ஜம்இய்யாவின் உப தலைவர் அஷ்-ஷைக் எம்.ஜே.எம். அப்துல் காலிக் அவர்கள் விஷேட துஆ பிரார்த்தனையும் மேற்கொண்டார்.
இதில், சிவில் சமூக அமைப்புகளின் பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், சமூக முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
- ACJU Media -