ACJU/FTW/2025/06-588/ORG - 02
2025.03.19 - 1446.09.18
அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறக்காத்துஹூ
கேள்வி: பெண் ஜனாஸாவை அடக்கம் செய்யும் போது மஹ்ரமில்லாத ஒருவர் கப்ரில் இறங்கி நல்லடக்க விடயங்களை மேற்கொள்ளவது பற்றிய மார்க்க விளக்கத்தைத் தந்துதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்?
பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
மரணித்த முஸ்லிமான ஒருவரின் உடலை குளிப்பாட்டி, கபன் செய்து, தொழுகை நடத்தி, முஸ்லிம்களின் மையவாடியில் கண்ணியமாக நல்லடக்கம் செய்வது பர்ளு கிபாயாவாகும். இக்கடமைகளை முஸ்லிம்களில் சிலர் நிறைவேற்றி விட்டாலும் போதுமானதாகும்.1 நிர்ப்பந்த நிலைகளிலே தவிர இக்கடமைகளில் ஏதேனுமொன்று விடப்படுமேயானால் முஸ்லிம்கள் அனைவரும் அல்லாஹ்விடத்தில் குற்றவாளிகளாகிவிடுவர்.2
மரணித்தவருக்கு செய்யவேண்டிய நான்கு முக்கிய கடமைகளில் அடக்கம் செய்வது இறுதி கடமையாகும். ஜனாஸாவை அடக்கம் செய்யும் பொழுது, அடக்கத்திற்கான பணிகளை ஆண்கள் மேற்கொள்வது சுன்னத் ஆகும்.3
ஒரு பெண் ஜனாஸாவின் கணவர் உயிருடன் இருப்பின், அவரே அவளை அடக்கம் செய்ய முற்படுதல் வேண்டும். ஏனெனில், கப்ரில் மரணித்தவரை வைக்கும் போது, மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் தென்படும் வாய்ப்பு உள்ளதால், இதனை கணவன் மேற்கொள்வதே பொருத்தமானதாகும்.4
ஒரு பெண் ஜனாஸாவின் கணவர் அடக்கம் செய்யும் இடத்தில் சமுகமளிக்காத போது, அவளுக்குத் மஹ்ரமான ஆண்கள் பின்வரும் ஒழுங்கு முறையில் அடக்கம் செய்யும் பொறுப்பை மேற்கொள்ள வேண்டும்.5
1. தந்தை
2. தந்தையின் தந்தை
3. மகன்
4. மகனின் மகன்
5. சகோதரர்
6. சகோதரரின் மகன்
7. தந்தைவழிச் சகோதரர்
8. தந்தைவழிச் சகோதரரின் மகன்
9. தந்தையின் சகோதரர்
மேற்கூறப்பட்டவர்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் பெற்றோரின் சகோதர சகோதரிகளின் ஆண் பிள்ளைகள் போன்ற மஹ்ரமில்லாத உறவினர்கள் முற்படுத்தப்பட வேண்டும்.6
மஹ்ரமில்லாத உறவினர்களும் இல்லாதபோது, நல்லொழுக்கமுள்ள உறவினரல்லாத ஆண் ஒருவர் ஜனாஸாவை அடக்கம் செய்ய முடியும்.7 என்றாலும், அவர் பெண் ஜனாஸாவின் முகம் மற்றும் ஏனைய உடற்பகுதிகளைப் பார்ப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பெண் ஜனாஸாவை அடக்கம் செய்யும் போது மேற்கூறப்பட்ட ஒழுங்கு முறையைப் பேணுவது ஸுன்னத்தாகும்.8
மேலும், பெண் ஜனாஸாவின் கணவர் மற்றும் மஹ்ரமான ஆண்கள் இருக்கும் போது, மஹ்ரமில்லாத உறவினர் அல்லது அந்நிய ஆண் ஒருவர் அந்தப் பெண்ணை அடக்கம் செய்யும் செயலில் ஈடுபடுவது மக்ரூஹ் (வெறுக்கத்தக்க செயல்) ஆகும் என மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
அவ்வகையில், ஒரு பெண்ணுடைய ஜனாஸாவை கப்ரினுல் வைத்து அடக்கம் செய்வதை கணவர், மஹ்ரமான ஆண்கள் மேற்கோள்ள வேண்டும். கணவர், மஹ்ரமான ஆண்கள் மற்றும் மஹ்ரமில்லாத உறவினர்கள் இல்லாத போது நன்னடத்தையுள்ள ஒரு ஆண், ஜனாஸாவின் முகம் மற்றும் ஏனைய உடற்பகுதிகளைப் பார்ப்பதைத் தவிர்த்து இப்பணியை மேற்கொள்வதற்கு அனுமதியுள்ளது.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். 9
அஷ்ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர் - ஃபத்வாக் குழு பொதுச்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
------------------------------------------------------------------------------------------------
[1] وَغُسْلُه أَيْ الْمَيتِ وَتَكْفِينُه وَالصَّلَاة عَلَيْهِ وَحَمْلُه (وَدَفْنُه فُرُوضُ كِفَايَة) لِلْإجْمَاع عَلَى مَا حَكَاه فِي أَصْلِ الرَّوْضَةِ وَلِلْأمَرِ بِهِ فِي الْخْبَارِ الصَّحِيحَة.(مغني المحتاج)
[2] (وَغُسْلُهُ) أَيْ الْمُسْلِمِ غَيْرِ الشَّهِيدِ (وَتَكْفِينُهُ وَالصَّلَاةُ عَلَيْهِ) وَحَمْلُهُ وَكَانَ سَبَبُ عَدَمِ ذِكْرِهِ لَهُ - وَإِنْ ذَكَرَهُ غَيْرُهُ - أَنَّهُ قَدْ لَا يَجِبُ بِأَنْ يُحْفَرَ لَهُ عِنْدَ مَحَلِّهِ ثُمَّ يُحَرَّكَ لِيُنْزَلَ فِيهِ (وَدَفْنُهُ) وَمَا أُلْحِقَ بِهِ كَإِلْقَائِهِ فِي الْبَحْرِ وَبِنَاءِ دَكَّةٍ عَلَيْهِ عَلَى وَجْهِ الْأَرْضِ بِشَرْطِهِمَا الْآتِي (فُرُوضُ كِفَايَةٍ) إجْمَاعًا عَلَى كُلِّ مَنْ عَلِمَ بِمَوْتِهِ أَوْ قَصَّرَ لِكَوْنِهِ بِقُرْبِهِ وَيُنْسَبُ فِي عَدَمِ الْبَحْثِ عَنْهُ إلَى تَقْصِيرٍ (تحفة المحتاج في شرح المنهاج وحواشي الشرواني والعبادي ٣/٩٨ — ابن حجر الهيتمي)
[3] (وَيُدْخِلُهُ الْقَبْرَ الرِّجَالُ) مَتَى وُجِدُوا وَإِنْ كَانَ الْمَيِّتُ أُنْثَى...) نهاية المحتاج إلى شرح المنهاج ٣/٦ — الرملي، شمس الدين) (وَيُدْخِلُهُ) وَلَوْ أُنْثَى نَدْبًا (الْقَبْرَ الرِّجَالُ).... (تحفة المحتاج في شرح المنهاج وحواشي الشرواني والعبادي ٣/١٦٩ — ابن حجر الهيتمي)
[4] (وَيُدْخِلُهُ الْقَبْرَ الرِّجَالُ) مَتَى وُجِدُوا وَإِنْ كَانَ الْمَيِّتُ أُنْثَى،…..(وَأَوْلَاهُمْ) أَيْ الرِّجَالِ بِذَلِكَ (الْأَحَقُّ بِالصَّلَاةِ) عَلَيْهِ دَرَجَةً…..(إلَّا أَنْ تَكُونَ) (امْرَأَةً مُزَوَّجَةً فَأَوْلَاهُمْ) أَيْ الرِّجَالِ بِإِدْخَالِهَا الْقَبْرَ (الزَّوْجُ) وَإِنْ لَمْ يَكُنْ لَهُ فِي الصَّلَاةِ عَلَيْهَا حَقٌّ (وَاَللَّهُ أَعْلَمُ) لِنَظَرِهِ فِي الْحَيَاةِ مَا لَا يَنْظُرُ إلَيْهِ غَيْرُهُ وَيَلِيهِ الْأَفْقَهُ وَالْأَشْبَهُ كَمَا قَالَهُ الشَّيْخُ تَقْدِيمُ مَحَارِمِ الرَّضَاعِ وَمَحَارِمِ الْمُصَاهَرَةِ عَلَى عَبِيدِهَا. ) نهاية المحتاج إلى شرح المنهاج ٣/٦ — الرملي، شمس الدين)
[5] (وَأَوْلَاهُمْ) بِالدَّفْنِ (الْأَحَقُّ بِالصَّلَاةِ) عَلَيْهِ وَقَدْ مَرَّ لَكِنْ مِنْ حَيْثُ الدَّرَجَةُ وَالْقُرْبُ دُونَ .... (قُلْت إلَّا أَنْ تَكُونَ امْرَأَةً مُزَوَّجَةً فَأَوْلَاهُمْ الزَّوْجُ) وَإِنْ لَمْ يَكُنْ لَهُ حَقٌّ فِي الصَّلَاةِ (وَاَللَّهُ أَعْلَمُ) وَبَعْدَهُ الْمَحَارِمُ الْأَقْرَبَ فَالْأَقْرَبَ كَالصَّلَاةِ (تحفة المحتاج في شرح المنهاج وحواشي الشرواني والعبادي ٣/١٦٩ — ابن حجر الهيتمي (ت ٩٧٤)
فَرْعٌ: الْجَدِيدُ أَنَّ الْوَلِيَّ أَوْلَى بِإِمَامَتِهَا مِنْ الْوَالِي، فَيُقَدَّمُ الْأَبُ، ثُمَّ الْجَدُّ وَإِنْ عَلَا، ثُمَّ الِابْنُ، ثُمَّ ابْنُهُ وَإِنْ سَفَلَ، ثُمَّ الْأَخُ، وَالْأَظْهَرُ، تَقْدِيمُ الْأَخِ لِأَبَوَيْنِ عَلَى الْأَخِ لِأَبٍ، ثُمَّ ابْنُ الْأَخِ لِأَبَوَيْنِ، ثُمَّ لِأَبٍ، ثُمَّ الْعَصَبَةُ عَلَى تَرْتِيبِ الْإِرْثِ، ثُمَّ ذَوُو الْأَرْحَامِ (منهاج الطالبين وعمدة المفتين في الفقه ١/٦٠ — النووي (ت ٦٧٦)
[6]. ثُمَّ الْأَقْرَبُ فَالْأَقْرَبُ مِنْ الْمَحَارِمِ، ثُمَّ عَبْدُهَا؛ لِأَنَّهُ كَالْمَحْرَمِ فِي النَّظَرِ وَنَحْوِهِ، ثُمَّ الْمَمْسُوحُ ثُمَّ الْمَجْبُوبُ ثُمَّ الْخَصِيُّ لِضَعْفِ شَهْوَتِهِمْ، وَرُتِّبُوا كَذَلِكَ لِتَفَاوُتِهِمْ فِيهَا، ثُمَّ الْعَصَبَةُ الَّذِي لَا مَحْرَمِيَّةَ لَهُ كَبَنِي عَمٍّ وَمُعْتَقٍ وَعَصَبَتِهِ كَتَرْتِيبِهِمْ فِي الصَّلَاةِ، (نهاية المحتاج إلى شرح المنهاج)
[7]. ثُمَّ الْأَقْرَبُ فَالْأَقْرَبُ مِنْ الْمَحَارِمِ،.....ثُمَّ الْعَصَبَةُ الَّذِي لَا مَحْرَمِيَّةَ لَهُ كَبَنِي عَمٍّ وَمُعْتَقٍ وَعَصَبَتِهِ كَتَرْتِيبِهِمْ فِي الصَّلَاةِ، ثُمَّ مَنْ لَا مَحْرَمِيَّةَ لَهُ كَذَلِكَ كَبَنِي خَالٍ وَبَنِي عَمَّةٍ ثُمَّ الْأَجْنَبِيُّ الصَّالِحُ لِخَبَرِ أَبِي طَلْحَةَ، ثُمَّ الْأَفْضَلُ فَالْأَفْضَلُ، ثُمَّ النِّسَاءُ كَتَرْتِيبِهِنَّ فِي الْغُسْلِ وَالْخَنَاثِي كَالنِّسَاءِ. (نهاية المحتاج إلى شرح المنهاج)
. 8 (وَيُدْخِلُهُ الْقَبْرَ الرِّجَالُ) مَتَى وُجِدُوا وَإِنْ كَانَ الْمَيِّتُ أُنْثَى،….. (إلَّا أَنْ تَكُونَ) (امْرَأَةً مُزَوَّجَةً فَأَوْلَاهُمْ) أَيْ الرِّجَالِ بِإِدْخَالِهَا الْقَبْرَ (الزَّوْجُ) وَإِنْ لَمْ يَكُنْ لَهُ فِي الصَّلَاةِ عَلَيْهَا حَقٌّ (وَاَللَّهُ أَعْلَمُ) لِنَظَرِهِ فِي الْحَيَاةِ مَا لَا يَنْظُرُ إلَيْهِ غَيْرُهُ.... ثُمَّ الْأَقْرَبُ فَالْأَقْرَبُ مِنْ الْمَحَارِمِ، ثُمَّ عَبْدُهَا؛ لِأَنَّهُ كَالْمَحْرَمِ فِي النَّظَرِ وَنَحْوِهِ..... ثُمَّ الْعَصَبَةُ الَّذِي لَا مَحْرَمِيَّةَ لَهُ كَبَنِي عَمٍّ وَمُعْتَقٍ وَعَصَبَتِهِ كَتَرْتِيبِهِمْ فِي الصَّلَاةِ، ثُمَّ مَنْ لَا مَحْرَمِيَّةَ لَهُ كَذَلِكَ كَبَنِي خَالٍ وَبَنِي عَمَّةٍ ثُمَّ الْأَجْنَبِيُّ الصَّالِحُ لِخَبَرِ أَبِي طَلْحَةَ،.... وَقَضِيَّةُ كَلَامِهِمْ أَنَّ التَّرْتِيبَ مُسْتَحَبٌّ لَا وَاجِبٌ ) نهاية المحتاج إلى شرح المنهاج ٣/٦ — الرملي، شمس الدين)
(وَيُدْخِلُهُ) وَلَوْ أُنْثَى نَدْبًا (الْقَبْرَ الرِّجَالُ) (تحفة المحتاج في شرح المنهاج وحواشي الشرواني والعبادي ٣/١٦٩ — ابن حجر الهيتمي (ت ٩٧٤)
قَالَ م ر: وَقَضِيَّةُ كَلَامِهِمْ أَنَّ التَّرْتِيبَ مُسْتَحَبٌّ لَا وَاجِبٌ اهـ. (حاشية البجيرمي على الخطيب = تحفة الحبيب على شرح الخطيب ٢/٢٩٥ — البجيرمي (ت ١٢٢١)
9 (قَوْلُهُ وَأَنْ يُدْخِلَهُ الْأَحَقُّ إلَخْ) أَيْ نَدْبًا اهـ. م ر وحج أَيْ فَلَوْ فَعَلَهُ غَيْرُهُمْ كَانَ مَكْرُوهًا خُرُوجًا مِنْ خِلَافِ مَنْ حَرَّمَهُ كَالْأَذْرَعِيِّ وَتَبِعَهُ الْخَطِيبُ اهـ. ع ش حاشية الجمل على شرح المنهج = فتوحات الوهاب بتوضيح شرح منهج الطلاب ٢/١٩٧ — الجمل (ت ١٢٠٤)