உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக ஜம்இய்யாவின் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளின் கௌரவ தலைவர் / செயலாளர்கான வேண்டுகோள்

மார் 28, 2025

ACJU/NGS/2025/050

28.03.2025 - 1446.09.27

கௌரவ தலைவர் ஃ செயலாளர்
மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகள்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

பேரன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹ்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது...

எதிர்வரும் மே மாதம் 06 ஆம் தேதி உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. நமது தாய் நாட்டில் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு இந்நாட்டு மக்களுக்கு கிடைத்துள்ள ஓர் அரிய சந்தர்ப்பமாக நடைபெறவுள்ள ஜனநாயக முறையிலான உள்ளுராட்சி சபைத் தேர்தலையும் குறிப்பிடலாம்.

அதே வேளையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நடவடிக்கைகள் அன்று முதல் இன்று வரையில் கட்சி அரசியல் சார்பற்றவையாகவே அமைந்து வருகின்றன என்பது தாங்கள் அறிந்த விடயமேயாகும். அந்த அடிப்படையில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் காலப் பகுதியில் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளின் பதவிதாங்குனர்கள் ஜம்இய்யாவின் கோட்பாடுகளைப் பாதுகாக்கும் வகையில் செயற்பட்டு, கட்சி அரசியல் நடவடிக்கைகளில் இருந்தும் அதற்கான பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுவதில் இருந்தும் தவிர்ந்து பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவீர்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கிறோம்.

அவ்வாறு தாங்கள் நடந்துகொள்வதானது, எமது எதிர்கால மார்க்க ரீதியிலான செயற்பாடுகளுக்கு பெரிதும் துணையாக அமையும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் எமது செயற்பாடுகளை ஏற்று ஈருலகிலும் நலவுகளை ஏற்படுத்துவானாக!

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
பதில் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்
பதில் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

 

 

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.