2025.03.27
1446.09.26
2024 ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவு பெற்றுள்ள நிலையில் அதில் தோற்றிய மாணவர்களுக்கு சிறந்த பெறுபேறுகளை அல்லாஹு தஆலா வழங்க வேண்டும் என ஜம்இய்யா பிரார்த்திக்கின்றது.
அத்துடன் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்துமாறு ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.
1. பரீட்சையை பூர்த்தியாக எழுதுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கிய அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துதல்.
2. பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றிட இப்புனித நாட்களில் நல் அமல்களில் ஈடுபட்டு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தல்.
3. தமது எதிர்கால கல்வி நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நம்பகமான துறைசார்ந்தவர்களுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளல்.
4. புனித ரமழான் மாதத்தின் இறுதிப்பத்தை அடைந்திருக்கும் இந்நேரத்தில் மீதமுள்ள நாட்களில் சந்தோஷங்களை வெளிப்படுத்தும் வகையில் இரவில் விழித்திருந்து வீண் விளையாட்டுக்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து இரவு வணக்கங்களில் ஈடுபடல்.
5. உங்களுக்குக் கிடைத்திருக்கும் இவ்விடுமுறை நாட்களை நீங்கள் உங்களது எதிர்கால நடவடிக்கைகளுக்குப் பயனளிக்கும் வகையில் நல்ல விடயங்களைக் கற்றுக் கொள்ளப் பயன்படுத்துவதோடு வல்ல அல்லாஹ்வுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவதற்காக ஆன்மிக ரீதியான முயற்சிகளையும் மேற்கொள்ளல்.
எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களது எதிர்காலத்தை அவனுக்குப் பொருத்தமான செயல்களில் ஈடுபடுத்துவானாக. ஆமீன்!
அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
பதில் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். நாழிம்
செயலாளர் - கல்விக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா