2025.03.25 (1446.09.24)
கண்ணியத்துக்குரிய கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
2025.03.28ஆம் திகதி நடைபெறவுள்ள ஜுமுஆப் பிரசங்கம் தொடர்பாக
அல்லாஹுத்தஆலா எம் அனைவரது தீன் பணிகளை ஏற்று இறுதி வரை அவனது தீனுக்காக பணிவிடை செய்வதற்கு அனுகூலம் புரிவானாக! ஆமீன்.
எதிர்வரும் 2025.03.28ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜுமுஆ குத்பா பிரசங்கத்தில் 'ஸகாத்துல் பித்ர், ஈதுல் பித்ர் பெருநாளை கொண்டாடுதல் மற்றும் அத்தினத்தில் குடும்ப உறவுகளை சேர்ந்து நடத்தல்' ஆகிய விடயங்களை உள்ளடக்கியதாக அமைத்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைத்து கதீப்மார்களையும் மஸ்ஜித் இமாம்களையும் கேட்டுக்கொள்கிறது.
அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
பதில் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எச். உமர்தீன்
செயலாளர் - பிரச்சாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா