2024.11.24ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் சமூக சேவைக் குழுவின் ஏற்பாட்டில் கண்டி மாவட்ட மற்றும் பிராந்திய கிளைகளின் ஒத்துழைப்புடன் 09ஆவது இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் மூக்குக் கண்ணாடி வழங்கல் நிகழ்வு கண்டி, கட்டுகலை ஜுமுஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.
சமய மற்றும் சமூகப் பணிகளில் நூற்றாண்டை கடந்து பயணிக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையானது இன, மத பேதமின்றி பல்லின மக்களையும் ஒன்றிணைக்கும் உயரிய நோக்கில் இவ்வாறான மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
குறித்த நிகழ்வில், சுமார் 500க்கும் மேற்பட்ட பயனாளர்கள், நிபுணத்துவம் வாய்ந்த கண் பரிசோதனையாளர்களினால் பரிசோதிக்கப்பட்டதுடன் பெறுமதியான மூக்குக் கண்ணாடிகளையும் இலவசமாக பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கண்டி மாவட்ட செயலகத்தின் பிரதி செயலாளர் நிலுகா புலத்கே அவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் சகல மதத் தலைவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இதில், ஜம்இய்யாவின் சமூக சேவைப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம், குழுவின் பிரதம ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். பவாஸ் மற்றும் திட்டமிடல் அதிகாரி சகோதரர் எம்.என்.எம். நுபைல், கண்டி மாவட்ட ஜம்இய்யா கிளையின் செயலாளர் அஷ்-ஷைக் எம். அப்துல் கப்பார், கண்டி மஸ்ஜித் சம்மேளன செயலாளர் அல்-ஹாஜ் கே.ஆர்.ஏ. ஸித்தீக் ஆகியோருடன் கண்டி மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளின் நிர்வாகிகள், கண்டி மாவட்ட மஸ்ஜித் சம்மேளன உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- ACJU Media -