அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பயிற்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவினால் நடாத்தப்பட்ட செயலமர்வுகளில், கம்பஹா மாவட்ட ஜம்இய்யா சார்பில் பங்குபற்றி, இளைஞர் விவகாரம் தொடர்பிலான பயிற்சிநெறிக்கு தெரிவு செய்யப்பட்ட ஆலிம்களுக்கான விஷேட வழிகாட்டல் செயலமர்வு, 2024 அக்டோபர் 28 மற்றும் 27ஆம் திகதிகளில் வத்தளை, மஸ்ஜிதுல் பத்ரிய்யாஹ்வில் நடைபெற்றது.
குறித்த செயலமர்வில், ஜம்இய்யாவின் வத்தளை, மினுவாங்கொடை, திஹாரி ஆகிய பிரதேசக் கிளைகளில் இருந்து ஆலிம்கள் பலர் கலந்துகொண்டதோடு இளைஞர் விவகாரம் தொடர்பிலான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டு தெளிவுகளும் நடாத்தப்பட்டன.
இதில், வளவாளராக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் துணை இணைப்பாளர் சகோதரர் ரம்ஸி அவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- ACJU Media -