2024.10.27ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழுவின் வழிகாட்டலில் ஜம்இய்யாவின் கிளைகள் விவகாரக் குழு மற்றும் 'பயிற்சி மற்றும் மேம்பாட்டுக் குழு' ஆகியவற்றின் ஏற்பாட்டில் குருநாகல் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளை ஜம்இய்யாக்களின் புதிய நிர்வாகிகளுக்கான பயிற்சி மற்றும் பதவி நியமனங்கள் வழங்கும் விஷேட செயலமர்வுகள் குருநாகல் நகர் மலாய் ஜுமுஆ மஸ்ஜித் மற்றும் சியபலாகஸ்கொடுவ ஜலாலிய்யா மஸ்ஜித் ஆகிய பள்ளிவாயல்களில் இரு அமர்வுகளாக நடைபெற்றன.
குறித்த இரு நிகழ்வுகளிலும், 'ஜம்இய்யா கிளைகளின் பதவி தாங்குனர்களுக்கான பொறுப்புக்கள், கடமைகள் தொடர்பில் தெளிவுகள் வழங்கப்பட்டதோடு பணிகளை திறம்பட மேற்கொள்வதற்கான சில ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன.
குருநாகல் நகர் மலாய் ஜுமுஆ மஸ்ஜிதில் இடம்பெற்ற செயலமர்வில் குருநாகல் மாவட்டக் கிளை மற்றும் அதன் 07 பிரதேசக் கிளைகளில் இருந்து 15 ஆலிம்களும், சியபலாகஸ்கொடுவ ஜலாலிய்யா மஸ்ஜிதில் இடம்பெற்ற செயலமர்வில் மாவட்டம் மற்றும் 13 பிரதேசக் கிளைகளிலிருந்து 49 ஆலிம்களும் கலந்து பயன்பெற்றதோடு உறுதிமொழியளித்து பதவிப் பிரமாணமும் செய்துகொண்டனர்.
இச்செயமர்வுகளில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பில் கிளைகள் விவகாரக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான், அஷ்-ஷைக் இர்பான் முபீன், பயிற்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவின் தலைமை அதிகாரி அஷ்-ஷைக் அர்ஷத் அதாஉர் ரஹ்மான், கிளைகள் விவகாரக் குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் அப்துல் காதர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
- ACJU Media -