அல்-குர்ஆன் வசனங்களை மஸ்ஜிதின் சுவர்களில் எழுதுவது மற்றும் பதிப்பது தொடர்பான மார்க்க விளக்கம்

ஜூலை 08, 2024

ACJU/FTW/2024/27-559/ORG-01
2024.07.08 (1446.01.01)

 

கேள்வி: அல்-குர்ஆன் வசனங்களை மஸ்ஜிதின் சுவர்களில் எழுதுவது மற்றும் பதிப்பது தொடர்பான ஃபத்வாக்களையும், மார்க்க வழிகாட்டல்களையும் அறியத்தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே! ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

மஸ்ஜித்களை நிர்மாணிப்பதும் அவற்றை சிறந்த முறையில் பராமரிப்பதும் மார்க்கத்தில் ஆர்வமூட்டப்பட்டுள்ள நன்மையான காரியங்களாகும்.

மஸ்ஜிதின் சுவர்களில் அல்-குர்ஆன் வசனங்களைப் பதிப்பது மற்றும் எழுதுவது தொடர்பாக மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் கருத்துவேறுபாடு நிலவுகின்றது.

அல்-குர்ஆன் வசனங்களின் கண்ணியத்திற்கு பங்கம் ஏற்படாத வகையில் அவற்றை சுவர்களில் பதிப்பதற்கு முடியும் என ஒரு சில மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுள்ளனர்.1

எனினும், சுவர்களில் அல்-குர்ஆன் வசனங்களைப் பதிப்பதன் மூலம் அதனை வுழூ இன்றி தொடுதல், கட்டிட வேலைகளின் போது அதனை மிதித்தல் போன்ற அதன் கண்ணியத்திற்கு பங்கம் ஏற்படுவதற்கு இடம்பாடு உள்ளதால் ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்கள் உட்பட பெரும்பான்மையான மார்க்க அறிஞர்கள் அவ்வாறு பதிப்பது மக்ரூஹ் (வெறுக்கத்தக்கது) என குறிப்பிட்டுள்ளனர்.2

ஷாபிஈ மத்ஹபின் மிக முக்கிய இமாம்களில் ஒருவரான இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்:

சுவர்களிலும் ஆடைகளிலும் அல்-குர்ஆன் வசனங்கள் மற்றும் அல்லாஹ்வின் பெயரைப் பதிப்பது மக்ரூஹ் (வெறுக்கத்தக்கது). (நூல்: அல்-மஜ்மூஃ - 2 : 70) 3

இமாம் ஸகரிய்யா அல்-அன்ஸாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்:

அல்-குர்ஆன் வசனங்களை சுவரில் எழுதுவது மக்ரூஹ் (வெறுக்கத்தக்கது). அச்சுவர் மஸ்ஜிதுடைய சுவராக இருந்தாலும் சரியே. (நூல்: அஸ்னல் மதாலிப் 1 : 62) 4

அல்-குர்ஆன் வசனம் அல்லாத இஸ்லாமிய எழுத்தணிக் கலையைப் பொருத்தவரையில் அவை தொழக்கூடியவர்களின் கவனத்தைத் திசை திருப்பாத வகையில் எழுதுவதற்கு அல்லது பதிப்பதற்கு அனுமதியுள்ளது. எனினும், தொழக்ககூடியவரின் கவனத்தைத் திசை திருப்பும் வகையில் பதிப்பது மக்ரூஹ் (வெறுக்கத்தக்கது) என ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.5

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்

செயலாளர் - ஃபத்வாக் குழு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

 

அஷ்-ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி

தலைவர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

 

-------------------

 

[1] وَلَوْ كُتِبَ الْقُرْآنُ عَلَى الْحِيطَانِ وَالْجُدَرَانِ بَعْضُهُمْ قَالُوا: يُرْجَى أَنْ يَجُوزَ، وَبَعْضُهُمْ كَرِهُوا ذَلِكَ مَخَافَةَ السُّقُوطِ تَحْتَ أَقْدَامِ النَّاسِ، كَذَا فِي فَتَاوَى قَاضِي خَانْ.  (الفتاوى الهندية ٥/‏٣٢٣ — محمد أورنك عالم كير (ت ١١١٨)

 

[2] وَلَوْ كُتِبَ الْقُرْآنُ عَلَى الْحِيطَانِ وَالْجُدَرَانِ بَعْضُهُمْ قَالُوا: يُرْجَى أَنْ يَجُوزَ، وَبَعْضُهُمْ كَرِهُوا ذَلِكَ مَخَافَةَ السُّقُوطِ تَحْتَ أَقْدَامِ النَّاسِ، كَذَا فِي فَتَاوَى قَاضِي خَانْ.  (الفتاوى الهندية ٥/‏٣٢٣ — محمد أورنك عالم كير (ت ١١١٨)

[وليس بمُستَحْسَنٍ كتابةُ القرآن على المحاريب والجدران؛ لِمَا يُخاف من سقوط الكتابة وأن تُوطَأ] اهـ. "الفتاوى الهندية" (1/ 109، ط. دار الفكر)

 

[3] لَا يَجُوزُ كِتَابَةُ الْقُرْآنِ بشئ نَجِسٍ ذَكَرَهُ الْبَغَوِيّ وَغَيْرُهُ قَالَ الْبَغَوِيّ وَغَيْرُهُ يُكْرَهُ نَقْشُ الْحِيطَانِ وَالثِّيَابِ بِالْقُرْآنِ وَبِأَسْمَاءِ اللَّهِ تَعَالَى قَالَ الْقَاضِي حُسَيْنٌ وَالْبَغَوِيُّ وَغَيْرُهُمَا وَإِذَا كَتَبَ قُرْآنًا عَلَى حَلْوَى وَطَعَامٍ فَلَا بَأْسَ بِأَكْلِهِ قَالَ الْقَاضِي فَإِنْ كَانَ عَلَى خَشَبَةٍ كُرِهَ إحْرَاقُهَا    (المجموع شرح المهذب ٢/‏٧٠)

 

[4] (وَيُكْرَهُ كَتْبُهُ) أَيْ الْقُرْآنِ (عَلَى حَائِطٍ) وَلَوْ لِمَسْجِدٍ (وَعِمَامَةٍ) لَوْ قَالَ وَثِيَابٌ كَمَا فِي الرَّوْضَةِ كَانَ أَوْلَى (وَطَعَامٌ) وَنَحْوُهَا…..وَلَا يُكْرَهُ كَتْبُ شَيْءٍ مِنْ الْقُرْآنِ فِي إنَاءٍ لِيُسْقَى مَاؤُهُ لِلشِّفَاءِ فِيمَا يَقْتَضِيهِ الْمَذْهَبُ انْتَهَى. وَوَقَعَ فِي فَتَاوَى ابْنِ عَبْدِ السَّلَامِ تَحْرِيمُهُ لِمَا يُلَاقِي مِنْ النَّجَاسَةِ الَّتِي فِي الْمَعِدَةِ،  (أسنى المطالب في شرح روض الطالب ١/‏٦٢ - زكريا الأنصاري (ت ٩٢٦)

 

[5] فَإِنْ قُلْت: قَدْ قَالَ الْمُتَوَلِّي مِنْ الشَّافِعِيَّةِ لَوْ وَقَفَ عَلَى تَجْصِيصِ الْمَسْجِدِ وَتَلْوِينِهِ وَنَقْشِهِ هَلْ يَجُوزُ؟ عَلَى وَجْهَيْنِ: أَحَدُهُمَا يَجُوزُ لِأَنَّ فِيهِ تَعْظِيمَ الْمَسْجِدِ وَإِعْزَازَ الدِّينِ، وَالثَّانِي لَا لِأَنَّ النَّبِيَّ ﷺ ذَكَرَ تَزْيِينَ الْمَسَاجِدِ فِي أَشْرَاطِ السَّاعَةِ وَأَلْحَقَهُ بِتَرْكِ الْأَمْرِ بِالْمَعْرُوفِ وَالنَّهْيِ عَنْ الْمُنْكَرِ. قُلْت: أَمَّا كَوْنُهُ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ فَلَا يَدُلُّ عَلَى التَّحْرِيمِ وَأَمَّا كَوْنُهُ أَلْحَقَهُ بِتَرْكِ الْأَمْرِ بِالْمَعْرُوفِ وَالنَّهْيِ عَنْ الْمُنْكَرِ فَاَلَّذِي وَرَدَ «لَتُزَخْرِفُنَّهَا ثُمَّ لَا تَعْمُرُونَهَا إلَّا قَلِيلًا» فَالْمَذْمُومُ عَدَمُ الْعِمَارَةِ بِالْعِبَادَةِ أَوْ الْجَمْعُ بَيْنَهُ وَبَيْنَ الزَّخْرَفَةِ أَوْ الزَّخْرَفةِ الْمُلْهِيَةِ عَنْ الصَّلَاةِ فَهِيَ الْمَكْرُوهَةُ أَمَّا التَّجْصِيصُ فَفِيهِ تَحْسِينٌ لِلْمَسَاجِدِ وَقَدْ فَعَلَهُ الصَّحَابَةُ: عُثْمَانُ رضي الله عنه فَمَنْ بَعْدَهُ، وَلَا شَكَّ أَنَّ بِنَاءَ الْمَسَاجِدِ مِنْ أَفْضَلِ الْقُرَبِ، وَتَحْسِينُهَا مِنْ بَابِ اخْتِيَارِ الْأَعْمَالِ الصَّالِحَةِ فَهُوَ صِفَةُ الْقُرْبَةِ وَقَدْ رَآهُ الْمُسْلِمُونَ حَسَنًا وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ: «مَا رَآهُ الْمُسْلِمُونَ حَسَنًا فَهُوَ عِنْدَ اللَّهِ حَسَنٌ» فَكُلُّ ذَلِكَ حَسَنٌ وَلَا يُكْرَهُ مِنْهُ إلَّا مَا يُشْغِلُ خَوَاطِرَ الْمُصَلِّينَ فَلَا شَكَّ أَنْ يُكْرَهَ كَرَاهَةَ تَنْزِيهٍ لَا تَحْرِيمٍ.  ( فتاوى السبكي ١/‏٢٧٦ — تقي الدين السبكي (ت ٧٥٦)

Last modified onதிங்கட்கிழமை, 11 நவம்பர் 2024 08:56

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.