2024.11.07ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழுக்கூட்டம் பதில் தலைவர் அஷ்-ஷைக் எச். உமர்தீன் அவர்களது தலைமையில் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களது நெறிப்படுத்தலில் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் இடம்பெற்றது.
இதில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினால் கடந்த மாதம் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள், பணிகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
பிற்பகல் இரண்டு மணி தொடக்கம் மாலை ஐந்து மணிவரை இடம்பெற்ற இக்கூட்டத்தில், ஜம்இய்யாவின் பதில் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- ACJU Media -