அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மத்திய குழுக்கூட்டம் குழு உறுப்பினர்களின் பங்கேற்புடன் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் இடம்பெற்றது

நவ 07, 2024

2024.11.07ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மத்திய குழுக்கூட்டம் பதில் தலைவர் அஷ்-ஷைக் எச். உமர்தீன் அவர்களது தலைமையில் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களது நெறிப்படுத்தலில் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஒவ்வொரு மாவட்டக் கிளையிலிருந்தும் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன், கடந்த மாதங்களில் தத்தமது கிளைகளினால் முன்னெடுக்கப்பட்ட பணிகள், வேலைத்திட்டங்கள் தொடர்பில் அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டன.

மேலும், இக்கூட்டத்தில் முஸ்லிம் சமூகம் தொடர்பிலான பல்வேறு விவகாரங்கள் கலந்துரையாடப்பட்டு சில முக்கிய தீர்மானங்களும் எட்டப்பட்டன.

இதில், ஜம்இய்யாவின் பதில் தலைவர், பொதுச் செயலாளர் ஆகியோருடன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

- ACJU Media -

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.