2024.11.04ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் கிளைகள் விவகாரக் குழுவினால் ஜம்இய்யாவின் கண்டி மாவட்டக் கிளை மற்றும் பிரதேசக் கிளைகளுக்கான நிர்வாகக் குழு தெரிவுகள் அந்தந்த கிளைகளின் காரியாலயங்களில் நடைபெற்றன.
குறித்த நிர்வாகக் குழுத் தெரிவுகள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் என்.ரீ.எம். ளரீஃப், அஷ்-ஷைக் என்.எம். ஸைபுல்லாஹ் ஆகியோரது தலைமையிலும், ஜம்இய்யாவில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் மேற்பார்வையிலும் இரகசிய வாக்கெடுப்பு முறையில் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
- ACJU Media -