ACJU/NGS/2024/400
2024.10.25 (1446.04.21)
பண்டாரவளை – ஹீல்ஓயா பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அஷ்-ஷைக் எம்.ஏ.எம். மும்தாஸ் ரஹ்மானி (اللهم اغفر له وارحمه) அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் கடந்த வியாழக்கிழமை 2024.10.24ஆம் திகதி வபாத்தானார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!
அன்னார் அக்குரனை ரஹ்மானிய்யாஹ் அரபுக் கல்லூரியில் 1999ஆம் ஆண்டு ஆலிமாக பட்டம்பெற்று கஹகொல்லை அல்-மதனிய்யா அரபுக் கல்லூரியில் நீண்ட காலமாக உஸ்தாத் ஆகவும் 2002 முதல் இறுதி மூச்சு வரை அக்கல்லூரியின் அதிபராகவும் கல்விப்பணியாற்றினார்கள்.
04 பிள்ளைகளின் தந்தையான அன்னார் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பதுளை மாவட்டக் கிளையின் முன்னாள் உப தலைவராக பதவிவகித்ததோடு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா - அரபுக் கல்லூரிகள் விவகாரப்பிரிவின் உறுப்பினராகவும் சேவையாற்றியுள்ளார்கள்.
இவ்வேளையில் அன்னாருடைய மனைவி, மக்கள், குடும்பத்தினர்கள், உறவினர்கள், மாணவர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு சார்பிலும் அனைத்து ஆலிம்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அல்லாஹு தஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, அவர்களுடைய குற்றங் குறைகளை மன்னித்து பரிசுத்தப்படுத்தி, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக!
அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ரிழா
பதில் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா