2024.09.05ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு மற்றும் அரபுக் கல்லூரிகள் விவகாரக் குழு ஆகியற்றின் உறுப்பினர்களிடையிலான விஷேட ஒன்றுகூடலொன்று ஜம்இய்யாவின் உப தலைவர் அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் சூரி அவர்களது தலைமையில் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதில், அரபுக் கல்லூரிகளுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடாத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
குறித்த நிகழ்வில் ஜம்இய்யாவின் உப தலைவர் அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் சூரி, பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி. ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர், அரபுக் கல்லூரிகளுக்கான குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம். ஜவ்பர், குழுவின் துணைச் செயலாளர் அஷ்-ஷைக் என்.எம். ஷைபுல்லாஹ், குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் ஹலீமுல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
- ACJU Media -