2024.08.24ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரச்சாரக் குழு மற்றும் ஜம்இய்யாவின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளின் பதவி தாங்குனர்கள் ஆகியோரிடையில், ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு நிகழ்ச்சிகளை நடாத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கான விஷேட ஒன்றுகூடலொன்று ZOOM தொழில்நுட்பம் வாயிலாக நடைபெற்றது.
குறித்த ஒன்றுகூடலில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் உள்ள ஜம்இய்யாவின் கிளைகளுக்குட்பட்ட மஸ்ஜித்களில் 'ஷமாஇலுத் திர்மிதியினை' மக்கள் மயப்படுத்தும் முகமாக விஷேட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதோடு அதற்கான வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.
இதில், ஜம்இய்யாவின் உப தலைவர் அஷ்-ஷைக் எச். உமர்தீன், அஷ்-ஷைக் பஸால் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
- ACJU Media -