2024.08.24 மற்றும் 25ஆம் திகதிகளில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழுவின் வழிகாட்டலில் ஜம்இய்யாவின் ஆலிம்கள் விவகாரக் குழுவின் ஏற்பாட்டில் கதீப்மார்களின் திறன்களை மேம்படுத்தல் மற்றும் அவர்களின் குத்பாக்களின் தரத்தை உயர்த்தல் எனும் தொனிப்பொருளிலான இருநாள் செயலமர்வு ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் ஏ.சீ. அகார் முஹம்மத் அவர்களின் நெறிப்படுத்தலில் ஜாமிஆ நளீமிய்யாவின் ADRT மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பமாக அஷ்-ஷைக் அல்-ஹாபிழ் என்.எம்.எஸ் அஹ்மத் பாரி அவர்களினால் கிராஅத் ஓதப்பட்டது.
அதனையடுத்து, ஜம்இய்யாவின் ஆலிம்கள் விவகாரக் குழுவின் உறுப்பினர் அஷ்-ஷைக் இஸட்.எம். நுஃமான் அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்தினார்கள்.
வரவேற்புரையினை தொடர்ந்து, 'குத்பாக்களை வினைத்திறனும் விளைதிறனும் கொண்டவையாக நிகழ்த்துவது எப்படி?' எனும் தலைப்பில் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் ஏ.சீ. அகார் முஹம்மத் அவர்களினால் முக்கிய குறிப்புக்கள் அடங்கிய விளக்கவுரையொன்று நிகழ்த்தப்பட்டது.
அடுத்த நிகழ்வாக ஜம்இய்யாவின் ஆலிம்கள் விவகாரக் குழுவின் உப செயலாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். யஹ்யா அவர்கள் 'கதீபின் ஆளுமைப் பண்புகள்' எனும் தலைப்பில் உரையொன்றை நிகழ்த்தினார்கள்.
அவ்வுரையினை அடுத்து, குத்பாக்களின் பலம், பலவீனங்கள் குறித்து பார்வையாளர்கள் கண்ணோட்டத்தில் இருந்து குழுக் கலந்துரையாடலொன்று நடைபெற்றதோடு அவை சுட்டிக்காட்டப்பட்டு விளக்கங்களும் வழங்கப்பட்டன.
அதனை தொடர்ந்து, 'குத்பாக்களைத் திறம்படத் தயாரிப்பதற்கு இணைய தளங்களை எவ்வாறு பயன்படுத்துவது? எனும் தலைப்பில் அஷ்-ஷைக் ஹஸ்ஸான் சுலைமான் அவர்கள் விளக்கப் படங்களுடன் தெளிவுகளை வழங்கினார்கள்.
அதன் பின்னர், ஆலிம்கள் விவகாரக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர், அஷ்-ஷைக் ஏ.சீ. அகார் முஹம்மத், அஷ்-ஷைக் எம்.எச்.எம். யஹ்யா ஆகியோரது மேற்பார்வையில் 'குத்பாவை எவ்வாறு தயாரிப்பது?' எனும் தொனிப்பொருளில் குறித்த செயலமர்வில் கலந்து கொண்டிருந்த ஆலிம்கள் 05 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிற்கும் தலா ஒவ்வொரு தலைப்பு வழங்கப்பட்டு செயற்பாடுகள் வழங்கப்பட்டதோடு சில வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.
செயலமர்வின் இரண்டாம் நாளின் ஆரம்ப நிகழ்வாக, ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் ZOOM தொழில்நுட்பம் வாயிலாக கலந்துகொண்டு நிகழ்வில் பங்குபற்றியிருந்த ஆலிம்களுக்கு விஷேட உரையொன்றை வழங்கினார்கள்.
அவர் தனது உரையில் கதீப்மார்களது முன்னேற்றத்திற்கான சில முக்கிய ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை முன்வைத்ததோடு குத்பா உரைகளுக்கான குறிப்புகளை ஹயாத்துஸ் ஸஹாபா போன்ற நபித்தோழர்களது வாழ்க்கை வரலாறுகளை எடுத்துக்கூறும் சிறந்த நூல்களிலிருந்து பெறுமாறும் ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்டுள்ள வெளியீடுகளை பயன்படுத்துவது தொடர்பிலும் சில வழிகாட்டல்களை வழங்கினார்கள்.
தலைவரது விஷேட உரையினை தொடர்ந்து, அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர், அஷ்-ஷைக் ஏ.சீ. அகார் முஹம்மத், அஷ்-ஷைக் எம்.எச்.எம். யஹ்யா ஆகியோரினால் மாதிரி குத்பா முன்வைப்புக்கள் 02 அமர்வுகளாக நடாத்தப்பட்டன.
நிகழ்வின் இறுதியாக ஜம்இய்யாவின் ஆலிம்கள் விவகாரக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர் அவர்களது நன்றியுரையினை அடுத்து நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
இதில் ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, ஆலிம்கள் விவகாரக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர், ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் ஏ.சீ. அகார் முஹம்மத், உப செயலாளர் அஷ்-ஷைக் ஏ.சீ.எம். பாஸில் ஹுமைதி, ஆலிம்கள் விவகாரக் குழுவின் உப செயலாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். யஹ்யா மற்றும் குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் இஸட்.எம். நுஃமான், அஷ்-ஷைக் ஹுஸ்னி, அஷ்-ஷைக் கே.ஆர்.ஐ. ஸஅத், அஷ்-ஷைக் ஹைதர் அலி, அஷ்-ஷைக் நிஸாம், அஷ்-ஷைக் எம்.எம்.எம். ரிஸா, அஷ்-ஷைக் எம். சிராஜ், ஆலிம்கள் விவகாரக் குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். பவாஸ், ஃபத்வாக் குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் மபாஹிம், அஷ்-ஷைக் எம். ஹலீமுல்லாஹ், சகோதரர் நுபைல் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
- ACJU Media -