2024.08.07ஆம் திகதி, அரபிக் கல்லூரிகளுக்கான சட்டவரைபு தொடர்பில் கலந்துரையாடுவதற்கான விஷேட ஒன்றுகூடலொன்று கொழும்பு மென்டரினா ஹோட்டல் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்த சட்டத்தரணிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் துறைசாந்தவர்களுடன் அரபுக் கல்லூரிகளுக்கான சட்ட உருவாக்கம் குறித்து பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு அவர்களிடமிருந்து ஆலோசனைகளும் பெறப்பட்டன.
இதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஸாத் சாலி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், பிரதிப் பணிப்பாளர் சகோதரர் நிலூபர் மற்றும் திணைக்களத்தின் அரபுக் கல்லூரிகளுக்கான பொறுப்பதிகாரி ஹாரிஸ், சட்டத்தரணிகளான சகோதரர் பீ.சீ. இல்யாஸ், சகோதரர் ஸப்ரி ஹலீம்தீன், சகோதரர் நத்வி பஹாஉத்தீன், சகோதரர் என்.எம்.எம். ஷஹீத் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
- ACJU Media -