பெண்கள் தலைமுடிக்கு சாயம் பூசுவது தொடர்பான மார்க்க விளக்கம்

ஏப் 22, 2024

ACJU/FTW/2022/15-458

2022.06.29 (1443.11.28) அன்று வெளியிடப்பட்ட பத்வா

 

தலைமுடிக்கு சாயம் பூசுவது தொடர்பான சட்டங்கள்:

1. பெண்கள் தலைமுடிக்கு ஹின்னா (மருதாணி), யமன் நாட்டு கரும் சிவப்பு நிறத்தைக் கொண்ட 'கதம்' எனும் சாயச் செடி போன்றவற்றைக் கொண்டு நிறம் பூசுவது சுன்னத்தாகும்.1

"உங்களில் நரை முடியை நிறம் மாற்றிக் கொள்ள (ஏற்ற அழகான பொருட்கள் மருதாணியும் 'கதம்' எனும் (யமன் நாட்டு கரும் சிவப்பு நிறத்தைக் கொண்ட சாயச் செடியின்) மூலிகையும் ஆகும்" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ தர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல் : ஸுனனு அபீ தாவூத் : 5077)

2. அவ்வாறே நரை முடிக்கு ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ள சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தின் மூலம் சாயம் பூசிக் கொள்வது வரவேற்கத்தக்கதாகும். இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தாடி முடிக்கு மஞ்சள் நிற சாயம் பூசக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள்.2

3. மேலும் முடிக்கு வேறு நிறங்களின் மூலம் மார்க்க வரையறைகளைப் பேணி சாயம் பூசிக் கொள்வதற்கும் அனுமதியுள்ளது. எனினும் ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டு வந்துள்ள நிறங்களைக் கொண்டு சாயம் பூசிக் கொள்வது மிகவும் சிறந்ததாகும்.

மேற்கூறப்பட்ட இச்சட்டம் அனைவருக்கும் பொதுவான சட்டமாகும் என மார்க்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.3

4. கருப்பு நிறத்தைக் கொண்டு சாயம் பூசுவது தடுக்கப்பட்டதாகும் என மார்க்கச் சட்டக்கலை வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.4

وَلَا فَرْقَ فِي الْمَنْعِ مِنْ الْخِضَابِ بِالسَّوَادِ بَيْنَ الرجل والمرأة هذا مذهبنا. (المجموع شرح المهذب - 1 :294)

"கறுப்பு நிறத்தால் முடிக்கு சாயம் பூசுவது தடைசெய்யப்பட்டுள்ளது என்ற விடயத்தில் ஆண், பெண் இருபாலாருக்கும் மத்தியில் எந்த வேறுபாடும் கிடையாது" என இமாம் நவவி றஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது அல்-மஜ்மூஃ எனும் நூலில் குறிப்பிடுகின்றார்கள். (பக்கம் : 294:1)

இதற்குப் பின்வரும் ஹதீஸை ஆதாரம் காட்டுகின்றனர்.

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رضي الله عنه، قَالَ: أُتِيَ بِأَبِي قُحَافَةَ يَوْمَ فَتْحِ مَكَّةَ وَرَأْسُهُ وَلِحْيَتُهُ كَالثَّغَامَةِ بَيَاضًا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: "غَيِّرُوا هَذَا بِشَيْءٍ، وَاجْتَنِبُوا السَّوَادَ" (صحيح مسلم- 1663)

(அபூ பக்ர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தை) அபூ குஹாபா அவர்கள் மக்கா 'வெற்றி ஆண்டில்' அல்லது 'வெற்றி நாளில்' நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் 'வந்தார்கள்'. அல்லது 'கொண்டுவரப்பட்டார்கள்'. அவர்களது தலை முடியும் தாடியும் தும்பைப் பூவைப் போன்று (தூய வெள்ளை நிறத்தில்) இருந்தன. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "இ(ந்த வெள்ளை நிறத்)தை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள்" என்றும் கறுப்பைத் தவிர்ந்து கொள்ளுங்கள் என்றும் உத்தரவிட்டார்கள். என ஜாபிர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள். (நூல் - ஸஹீஹ் முஸ்லிம் 3:1663)

عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وآله وسلم قال: «يَكُونُ قَوْمٌ فِي آخِرِ الزَّمَانِ يَخْضِبُونَ بِالسَّوَادِ كَحَوَاصِلِ الْحَمَامِ، لَا يَرِيحُونَ رَائِحَةَ الْجَنَّةِ» (رواه أبو داود- 4212)

இறுதிக் காலத்தில் ஒரு கூட்டம் புறாவின் நெஞ்சுப் பகுதியின் நிறத்தைப் போன்ற கறுப்பு நிறத்தைக் கொண்டு சாயம் பூசுவார்கள். அவர்கள் சுவனத்தின் வாடையை நுகரமாட்டார்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல் : ஸுனன் அபீ தாவூத் : 4212)

5. மார்க்க அறிஞர்கள் சில ஹதீஸ்களை அடிப்படையாக வைத்து கறுப்பு நிறத்தைக் கொண்டு சாயம் பூசுவதற்கு சில சந்தர்ப்பங்களில் அனுமதியுண்டு எனக் குறிப்பிடுகின்றனர்.5

• தமக்கு எதிராக வரும் எதிரிகளுடன் போரிடும் பொழுது தன்னை கம்பீரமான வாலிப தோற்றத்தில் காட்டிக் கொள்வதற்காக கறுப்பு நிறத்தால் சாயம் பூசுவதாகும். இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதாகும்.6

• ஒரு பெண் தனது கணவருக்கு தன்னை அலங்கரித்துக் காட்டுவதற்காக கணவருடைய அனுமதியுடன் கறுப்பைக் கொண்டு சாயம் பூசுவதற்கு அனுமதி உள்ளது என ஷாபிஈ மத்ஹபுடைய மார்க்க அறிஞர்கள் குறிப்பிட்டாலும் அது மக்ரூஹாகும் என்ற கருத்து ஷாபிஈ மத்ஹபில் சொல்லப்பட்டுள்ளது.7

6. கணவனின் மரணத்துக்காக இத்தா இருக்கக்கூடிய பெண்கள் முடிக்கு நிறம் பூசுவது, சுர்மா போடுவது, கை அலங்காரங்கள் செய்வது போன்ற விடயங்களை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும் என மார்க்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.8

எனவே திருமணம் முடித்த, முடிக்காத பெண்கள் தலைமுடிக்கு ஹின்னா (மருதாணி), யமன் நாட்டு கரும் சிவப்பு நிறத்தைக் கொண்ட 'கதம்' எனும் சாயச் செடி போன்றவற்றைக் கொண்டு நிறம் பூசுவது இன்னும் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தைக் கொண்டு நிறம் பூசுவது சுன்னத்தாகும். கறுப்பு நிறத்தினால் சாயம் பூசுவது தடுக்கப்பட்டதாகும். எனினும் திருமணம் முடித்த ஒரு பெண்ணுக்கு தன்னை கணவனுக்கு அலங்கரித்துக் காட்டுவதற்காக கணவனுடைய அனுமதியுடன் கறுப்பு நிறத்தைக் கொண்டு சாயம் பூசுவதற்கு அனுமதியுள்ளது.

அத்துடன் ஒரு பெண் தனது கணவன் மற்றும் மஹ்ரமானவர்களுக்கு முன்னிலையில் மாத்திரம் தனது தலை முடியை வெளிப்படுத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது.

முடிக்கு நிறம் பூசும் விடயத்தில் வுழூ மற்றும் கடமையான குளிப்பை நிறைவேற்றக்கூடிய சந்தர்ப்பத்தில் கட்டாயமாக தண்ணீர் சென்றடைய வேண்டிய பகுதிகளைத் (முடியின் அடிப்பகுதி) தடுக்கக்கூடிய பதார்த்தங்களைப் பாவிப்பதை விட்டும் கட்டாயமாக தவிர்ந்திருப்பதுடன் அப்பதார்த்தங்கள் சுத்தமாக இருப்பதும் அவசியமாகும்.

ஏதாவது ஓர் உறுப்பில் மெழுகு அல்லது குழைத்த மா அல்லது மருதாணி அல்லது அது போன்ற ஏதாவது ஒரு பதார்த்தம் இருந்து அப்பதார்த்தம் தண்ணீர் அந்த உறுப்பில் சென்றடைவதைத் தடுத்தால் அது குறைவாக அல்லது கூடுதலாக இருந்தாலும் (வுழூ அல்லது குளிப்பு) நிறைவேறமாட்டாது. கையில் அல்லது வேறு உறுப்புக்களில் தண்ணீர் சென்றடைவதைத் தடுக்காத மருதாணியின் அடையாளம் போன்றவை இருந்தால் (வுழூ அல்லது குளிப்பு) நிறைவேறும் என இமாம் நவவி றஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.9

அவ்வாறே பெண்கள் அலங்காரத்துக்காக கை நகங்களுக்கு (நகப் பூச்சு, Nail Polish) ஜெல் போன்றவைகளை பூசும் வழமை உள்ளது. இவை வுழூவுடைய அல்லது கடமையான குளிப்புடைய சந்தர்ப்பத்தில் அந்த இடங்களுக்கு தண்ணீர் சென்றடைவதை தடுக்குமானால் வுழூ அல்லது கடமையான குளிப்பு நிறைவேற மாட்டாது. இது விடயத்தில் கவனம் செலுத்திக் கொள்ள வேண்டும்.

முடிக்கு சாயம் பூசும் போது பாவிக்கக்கூடிய பதார்த்தங்கள் சுத்தமானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதுடன் குறித்த பதார்த்தங்களைப் பயன்படுத்துவதன் மூலம் பக்கவிளைவுகள் ஏற்படாது என்பதையும் துறைசார்ந்தவர்களிடம் உறுதிப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர்-பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச்செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா



அஷ்-ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

-------------------------------------------------------------------------------

 

[1] - حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ سَعِيدٍ الْجُرَيْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِي الْأَسْوَدِ الدِّيْلِيِّ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَحْسَنَ مَا غُيِّرَ بِهِ هَذَا الشَّيْبُ الْحِنَّاءُ، وَالْكَتَمُ»  (رواه أبوداود ,باب الخضاب : 5077)

 

[2] فَقَدْ جاءَتْ آثارٌ عن بن عمر بين فيها تصفير بن عُمَرَ لِحْيَتَهُ واحْتَجَّ بِأنَّ النَّبِيَّ ﷺ كانَ يُصَفِّرُ لِحْيَتَهُ بِالوَرْسِ والزَّعْفَرانِ رَواهُ أبُو داوُدَ وذَكَرَ أيْضًا فِي حَدِيثٍ آخَرَ احْتِجاجَهُ بِأنَّ النَّبِيَّ ﷺ كانَ يَصْبُغُ بِها ثِيابَهُ حَتّى عِمامَتَهُ)     شرح النووي على مسلم ٨/‏٩٦ — النووي (ت ٦٧٦)

 

[3] وَيُسَنُّ خَضْبُهُ بِالْحِنَّاءِ وَنَحْوِهِ وَيُسَنُّ لِلْمَرْأَةِ الْمُزَوَّجَةِ وَالْمَمْلُوكَةِ خَضْبُ كَفِّهَا وَقَدَمِهَا بِذَلِكَ تَعْمِيمًا؛ لِأَنَّهُ زِينَةٌ وَهِيَ مَطْلُوبَةٌ مِنْهَا لِحَلِيلِهَا (حاشية الشرواني)

 وَيُسَنُّ خَضْبُ الشَّيْبِ بِالْحِنَّاءِ وَنَحْوِهِ لِلِاتِّبَاعِ، وَيُسَنُّ لِلْمَرْأَةِ الْمُزَوَّجَةِ أَوْ الْمَمْلُوكَةِ خَضْبُ كَفَّيْهَا وَقَدَمَيْهَا بِذَلِكَ تَعْمِيمًا لِأَنَّهُ زِينَةٌ وَهِيَ مَطْلُوبَةٌ مِنْهَا لِزَوْجِهَا أَوْ سَيِّدِهَا. (مغني المحتاج)

 "اتفق الفقهاء على أن تغيير الشيب بالحناء أو نحوه : مستحب للمرأة ، كما هو مستحب للرجل " - الموسوعة الفقهية الكويتية (2/281)

 

[4] وَيَحْرُمُ عَلَى الْمَرْأَةِ وَصْلُ شَعْرِهَا بِشَعْرٍ طَاهِرٍ مِنْ غَيْرِ آدَمِيٍّ وَلَمْ يَأْذَنْهَا فِيهِ زَوْجٌ أَوْ سَيِّدٌ وَيَجُوزُ رَبْطُ الشَّعْرِ بِخُيُوطِ الْحَرِيرِ الْمُلَوَّنَةِ وَنَحْوِهَا مِمَّا لَا يُشْبِهُ الشَّعْرَ وَيَحْرُمُ أَيْضًا تَجْعِيدُ شَعْرِهَا وَوَشْرُ أَسْنَانِهَا، وَهُوَ تَحْدِيدُهَا وَتَرْقِيقُهَا وَالْخِضَابُ بِالسَّوَادِ... (تحفة المحتاج في شرح المنهاج)

 اخْتَلَفَ الْفُقَهَاءُ فِي حُكْمِ الاِخْتِضَابِ بِالسَّوَادِ: فَالْحَنَابِلَةُ وَالْمَالِكِيَّةُ وَالْحَنَفِيَّةُ - مَا عَدَا أَبَا يُوسُفَ - يَقُولُونَ: بِكَرَاهَةِ الاِخْتِضَابِ بِالسَّوَادِ فِي غَيْرِ الْحَرْبِ ... (الموسوعة الفقهية الكويتية)

 

[5]  عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ صَيْفِيٍّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ صُهَيْبِ الْخَيْرِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَحْسَنَ مَا اخْتَضَبْتُمْ بِهِ لَهَذَا السَّوَادُ، أَرْغَبُ لِنِسَائِكُمْ فِيكُمْ، وَأَهْيَبُ لَكُمْ فِي صُدُورِ عَدُوِّكُمْ. (سنن ابن ماجه : 3625) [تعليق محمد فؤاد عبد الباقي] وفي الزوائد إسناده حسن.

"நீங்கள் சாயம் பூசுவதில் மிகவும் அழகானது கறுப்பு நிறமாகும். அது உங்களது பெண்களுக்கு மிகவும் விருப்பமாக இருக்கும். மேலும், உங்களது விரோதிகளை எச்சரிக்கக்கூடியதாக இருக்கும்" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல் ஹமீத் இப்னு ஸைபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸுனன் இப்னு மாஜஹ் - 3625)

 

[6] اتَّفَقُوا عَلى ذَمِّ خِضابِ الرَّأْسِ أوْ اللِّحْيَةِ بِالسَّوادِ، ثُمَّ قالَ الغَزالِيُّ فِي الإحْياءِ والبَغَوِيُّ فِي التَّهْذِيبِ وآخَرُونَ مِن الأصْحابِ هُوَ مَكْرُوهٌ: وظاهِرُ عِباراتِهِمْ أنَّهُ كَراهَةُ تَنْزِيهٍ: والصَّحِيحُ بَلْ الصَّوابُ أنَّهُ حَرامٌ: ومِمَّنْ صَرَّحَ بِتَحْرِيمِهِ صاحِبُ الحاوِي فِي بابِ الصَّلاةِ بِالنَّجاسَةِ: قالَ إلّا أنْ يَكُونَ فِي الجِهادِ: وقالَ فِي آخِرِ كِتابِهِ الأحْكامِ السُّلْطانِيَّةِ يَمْنَعُ المُحْتَسِبُ النّاسَ مِن خِضابِ الشَّيْبِ بِالسَّوادِ إلّا المُجاهِدَ (المجموع شرح المهذب ١/‏٢٩٤ — النووي (ت ٦٧٦) شرح النووي←الجزء الأول←كتاب الطهارة←باب السواك)

ஜிஹாத் தொடர்பான விளக்கம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட சமூகங்களுக்கிடையிலான கலந்துரையாடல் என்ற புத்தகத்தில் பார்வையிடலாம். https://acju.lk/published/item/1701-5

 

[7] وقال النووي في روضة الطالبين: خضاب المرأة بالسواد إن كانت خلية من الزوج وفعلته فهو حرام، وإن كانت زوجة وفعلته بإذنه فجائز على المذهب، وقيل: وجهان كوصل الشعر. وقال الرملي: يحرم على المرأة الخضاب بالسواد، فإن أذن لها زوجها في ذلك جاز؛ لأن له غرضا في تزينها له، كما في الروضة وأصلها، وهو الأوجه.

 خاتِمَةٌ يُسَنُّ لِكُلِّ أحَدٍ مِن النّاسِ………وأنْ يُخَضِّبَ الشَّعْرَ الشّائِبَ بِالحُمْرَةِ والصُّفْرَةِ، وهُوَ بِالسَّوادِ حَرامٌ، لِقَوْلِهِ - ﷺ -: «اجْتَنِبُوا السَّوادَ إلّا لِمُجاهِدٍ فِي الكُفّارِ فَلا بَأْسَ بِهِ  (مغني المحتاج إلى معرفة معاني ألفاظ المنهاج ٦/‏١٤٤ — الخطيب الشربيني - كتاب الأطعمة)

 وَيَحْرُمُ عَلَى الْمَرْأَةِ وَصْلُ شَعْرِهَا بِشَعْرٍ طَاهِرٍ مِنْ غَيْرِ آدَمِيٍّ وَلَمْ يَأْذَنْهَا فِيهِ زَوْجٌ أَوْ سَيِّدٌ وَيَجُوزُ رَبْطُ الشَّعْرِ بِخُيُوطِ الْحَرِيرِ الْمُلَوَّنَةِ وَنَحْوِهَا مِمَّا لَا يُشْبِهُ الشَّعْرَ وَيَحْرُمُ أَيْضًا تَجْعِيدُ شَعْرِهَا وَوَشْرُ أَسْنَانِهَا، وَهُوَ تَحْدِيدُهَا وَتَرْقِيقُهَا وَالْخِضَابُ بِالسَّوَادِ وَتَحْمِيرُ الْوَجْنَةِ بِالْحِنَّاءِ وَنَحْوِهِ وَتَطْرِيفُ الْأَصَابِعِ مَعَ السَّوَادِ وَالتَّنْمِيصُ، وَهُوَ الْأَخْذُ مِنْ شَعْرِ الْوَجْهِ وَالْحَاجِبُ الْمُحَسَّنُ فَإِنْ أَذِنَ لَهَا زَوْجُهَا أَوْ سَيِّدُهَا فِي ذَلِكَ جَازَ؛ لِأَنَّ لَهُ غَرَضًا فِي تَزَيُّنِهَا لَهُ كَمَا فِي الرَّوْضَةِ، (تحفة المحتاج في شرح المنهاج)

 ويَحْرُمُ أيْضًا تَجْعِيدُ شَعْرِها، ووَشْرُ أسْنانِها، وهُوَ تَحْدِيدُها وتَرْقِيقُها، والخِضابُ بِالسَّوادِ وتَحْمِيرُ الوَجْنَةِ بِالحِنّاءِ ونَحْوُهُ، وتَطْرِيفُ الأصابِعِ مَعَ السَّوادِ، والتَّنْمِيصُ، وهُوَ الأخْذُ مِن شَعْرِ الوَجْهِ والحاجِبِ المُحَسِّنِ، فَإنْ أذِنَ لَها زَوْجُها أوْ سَيِّدُها فِي ذَلِكَ جازَ؛ لِأنَّ لَهُ غَرَضًا فِي تَزْيِينِها لَهُ كَما فِي الرَّوْضَةِ، وأصْلِها، وهُوَ الأوْجَهُ، وإنْ جَرى فِي التَّحْقِيقِ عَلى خِلافِ ذَلِكَ فِي الوَصْلِ والوَشْرِ فَألْحَقَهُما بِالوَشْمِ فِي المَنعِ مُطْلَقًا.      (نهاية المحتاج إلى شرح المنهاج ٢/‏٢٥ — الرملي، شمس الدين (ت ١٠٠٤) [كتاب الصلاة]←[باب يشتمل على شروط الصلاة وموانعها]←[من شروط الصلاة طهارة النجس في الثوب والبدن والمكان]

 قَوْلُهُ: ولا يُسَنُّ لَها نَقْشٌ إلَخْ) عِبارَةُ الكُرْدِيِّ عَلى بافَضْلٍ وأمّا النَّقْشُ والتَّسْوِيدُ وخَضْبُ أطْرافِ الأصابِعِ فَمَكْرُوهٌ حَيْثُ كانَ لَها حَلِيلٌ وأذِنَ لَها فِيهِ وإلّا حَرُمَ حَيْثُ لَمْ تَعْلَمَ رِضاهُ ويَجْرِي ذَلِكَ فِي التَّنْمِيصِ كَما فِي الأسْنى وكَلامِ الشّارِح حَجّ فِي الزَّواجِرِ يُفِيدُ كَراهَتَهُ مُطْلَقًا ويَجْرِي التَّفْصِيلُ المَذْكُورُ فِي وشْرِ الأسْنانِ أيْ تَحْدِيدِها وفِي الوَصْلِ اهـ (حاشية الشرواني على تحفة المحتاج)

 

[8] المتوفى عنها زوجها لا تلبس المعصفر من الثياب ولا الممشق ولا الحلى، ولا تختضب ولا تكتحل ... ، ومن لزمها الاحداد حرم عليها أن تكتحل بالاثمد والصبر .. ، ويحرم عليها أن تختضب .. (المجموع شرح المهذب 18/ 181)

 

[9]  يقول الإمام النووي رحمه الله: "إذا كان على بعض أعضائه شمع أو عجين أو حناء وأشباه ذلك، فمَنَعَ وصولَ الماء إلى شيء من العضو؛ لم تصحَّ طهارته، سواء كثر ذلك أم قلَّ، ولو بقي على اليد وغيرها أثر الحناء ولونه دون عينه أو أثر دهن مائع بحيث يمس الماء بشرة العضو ويجري عليها لكن لا يثبت؛ صحَّت طهارته" )المجموع شرح المهذب - 1/ 529).

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.