2024.04.17ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோரிடையிலான சந்திப்பு திணைக்கள காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில் ஜம்இய்யாவினால் வெளியிடப்படவுள்ள 'பீதிகாவ' - அல்-குர்ஆனின் 30 வசனங்களுக்கான தெளிவுகள் அடங்கிய பிரதி, குறித்த திணைக்களத்தின் பணிப்பாளர் இசட்.ஏ.எம். பைஸல் அவர்களிடம் கையளிக்கப்பட்டதோடு எதிர்காலத்தில் வெளிவரக்கூடிய அல்-குர்ஆன் மொழிபெயர்ப்புகளுடன் அப்பிரதியினையும் இணைத்து வெளியிடுவது தொடர்பிலும் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் குறுகிய காலத்திற்குள் இவ்வெளியீட்டிற்கான ஆசிச்செய்தியினை வழங்குவதோடு இதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக ஜம்இய்யாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களிடம் பணிப்பாளர் அவர்களினால் உறுதியளிக்கப்பட்டது.
இச்சந்திப்பில் ஜம்இய்யா சார்பாக நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம், அஷ்-ஷைக் என்.டி.எம். ளரீஃப், ஊடக்குழுவின் இணைப்பாளரான அஷ்-ஷைக் பஸால் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
- ACJU Media -