ACJU/NGS/2024/316
2024.04.16 (1445.10.07)
கிண்ணியா பிரதேசத்தை பிறப்பிடமாகவும், அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அஷ்-ஷைக் ஏ.சீ. முஹம்மத் பாகவி (اللهم ارحمه و اغفر له) அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் கடந்த திங்கட்கிழமை (2024.04.15ம் திகதி) வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இந்தியா வேலூரில் உள்ள பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியில் மார்க்கக் கல்வி பயின்று கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியின் அதிபராகவும், விரிவுரையாளராகவும் நீண்ட காலம் பணி செய்த அன்னார் இலங்கைத் திருநாட்டில் மார்க்கப் பணிகளை மேற்கொள்ளக்கூடிய பல ஆலிம்களை உருவாக்கிய ஒரு மூத்த ஆலிமாவார்கள். மேலும், அன்னார் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முன்னாள் ஃபத்வாக் குழு உறுப்பினர்களில் ஒருவருமாவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வேளையில் அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள், மாணவர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு மற்றும் அனைத்து உலமாக்கள் சார்பிலும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அல்லாஹு தஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, அவர்களுடைய குற்றங் குறைகளை மன்னித்து பரிசுத்தப்படுத்தி, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக!
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா