இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் நடாத்தப்படவுள்ள இஃப்தார் நிகழ்விற்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுப்பதாக குறித்த உயர்ஸ்தானிகராலய ஆலோசகர் சஞ்சீவ் அரோரா 2024.03.27ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமையகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
அவரது வருகையினையிட்டு இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பின் பின்னர் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களிடம் சஞ்சீவ் அரோரா அவர்களினால் இஃப்தாருக்கான அழைப்பு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்த சந்திப்பில் ஜம்இய்யா சார்பில் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம், என்.ஏம். ஷைபுல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
- ACJU Media -