அகில இலங்கை முஸ்லிம் பாடசாலைகளுக்கு மத்தியில் நடைபெறவிருக்கின்ற இஸ்லாமிய கலாசார போட்டி நிகழ்ச்சிகளுக்கான சுற்றறிக்கை தயாரிக்கும் கலந்துரையாடல் 2023.10.26 ஆம் திகதி கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளையின் அலுவலகத்தில் அதன் பணிப்பாளர் மேஜர். என்.ரீ. நஸ்முதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் இஸ்லாமிய கலாசார போட்டி நிகழ்ச்சிகளை நடாத்துவது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் பெற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக்கலந்துரையாடலில் ஜம்இய்யாவின் தலைமையகம் சார்பாக முஸ்லிம்கள் விவகாரக் குழுவின் பிரதான இணைப்பாளர் அஷ்-ஷைக் மபாஹிம் மற்றும் பிரசாரக் குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் பஸால் ஆகியோர் கலந்துகொண்டனர்.