மொரோக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினாலும் லிபியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலும் மரணித்தவர்களுக்காக (Gஙாஇப்) மறைவான ஜனாஸாத் தொழுகை நடாத்துவது தொடர்பாக ஜம்இய்யாவின் வேண்டுகோள்

செப் 17, 2023

ACJU/FRL/2023/72-362

2023.09.17 (1445.03.01)

2023.09.08 ஆம் திகதி மொரோக்கோவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தினாலும் 2023.09.10 ஆம் திகதி லிபியாவின் வடகிழக்குப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக இரண்டு அணைகள் உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலும் ஆயிரக்கணக்கானோர் மரணித்துள்ளதோடு பலர் கடும் காயமுற்றிருப்பதையும் நாம் அறிவோம்.

இவ்விரண்டு நிகழ்வினால் மரணித்த எமது அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹு தஆலா அவனது சுவனத்தை வழங்க வேண்டும் என்றும் அவர்களது குடும்பத்தார்களுக்கு பொறுமையைக் கொடுக்க வேண்டும் எனவும் காயமுற்றிருப்பவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றோம்.

இவ்வாறான அனர்த்தங்கள், வெள்ளப்பெருக்குகள், சோதனைகள், சிரமங்கள் ஏற்படும் போது அவை நீங்க தொழுகை, நோன்பு, துஆ, திக்ர், இஸ்திஃபார் மற்றும் ஸதகா போன்ற நல்லமல்களில் ஈடுபடுவதும், இதுபோன்ற நிகழ்வுகளின் போது மரணிக்கும் எமது சகோதரர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவதும் அவர்களுக்காக ஜனாஸாத் தொழுகை நடாத்துவதும் இஸ்லாமிய வழிகாட்டலாகும்.

அந்தவகையில் இவ்வனர்த்தம் மற்றும் வெள்ளப்பெருக்கினால் மரணித்த எமது சகோதரர்களுக்காக 2023.09.18 ஆம் திகதி திங்கட்கிழமை இஷாத் தொழுகையைத் தொடர்ந்து (Gஙாஇப்) மறைவான ஜனாஸாத் தொழுகை நடாத்துமாறு மஸ்ஜித் நிர்வாகிகளையும் இமாம்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.

 


அஷ்ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் ஸுரி 
பதில் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 


அஷ்ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர் - ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Last modified onஞாயிற்றுக்கிழமை, 17 செப்டம்பர் 2023 10:02

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.