துருக்கி மற்றும் சிரியா நாட்டில் பூமியதிர்ச்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம்

பிப் 21, 2023

ACJU/SOC/2023/01

2023-02-21

1444-07-29

 

அனைத்து விதமான சோதனைகளிலிருந்தும் எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா எம்மனைவரையும் பாதுகாத்தருள்வானாக!


2023 பெப்ரவரி 06 ஆம் திகதி துருக்கி நாட்டில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியினால் பல்லாயிரக்கணக்கான உயிர்சேதங்களும் பொருட்சேங்களும் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயலுமான உதவிகளையும் உபகாரங்களை வழங்குவதும், அவர்களுக்காக பிரார்த்திப்பதும் இஸ்லாத்தின் வழிகாட்டலாகும். சிரமத்தில் இருக்கும் மனிதனுக்கு உதவி புரிவதனூடாக அல்லாஹு தஆலா எமது சிரமங்களை நீக்குவான் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.


துருக்கி நாட்டுத் தூதுவராலயத்தின் வழிகாட்டலின் அடிப்படையில் அவர்களால் வழங்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கு விபரம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவி செய்ய விரும்புவோர் இக் கணக்கு இலக்கம் ஊடாக தமது உதவிகளை செய்து கொள்ளுங்கள். மேலும் அதனது ஒரு தகவலை எமது தலைமையகத்திற்கு அனுப்பிவையுங்கள்.


ஒவ்வொருவரும் தம்மால் முடியுமான உதவிகளை செய்து அவர்களின் கஷ்ட துன்பங்களில் பங்கு கொள்வோம். வல்ல அல்லாஹ் எமது சிரமங்களை கூடிய சீக்கிரம் நீக்குவானாக!

 

உதவிகளை மேற்கொள்ள வேண்டிய வங்கிக் கணக்கு விபரத்தை கீழுள்ள இணைப்பினூடாக பெற்றுக்கொள்ளவும்

https://twitter.com/TR_Emb_Colombo/status/1623999065313939458

 

 

சமூக சேவைப் பிரிவு 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Last modified onபுதன்கிழமை, 22 பிப்ரவரி 2023 06:54

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.