கல்வி அமைச்சர் கெளரவ சுசில் பிரேமஜயந்த அவர்களுடனான கலந்துரையாடல்

நவ 02, 2022

2022.11.01 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயலகத்தின் ஏற்பாட்டில் கல்வி அமைச்சர் கெளரவ சுசில் பிரேம ஜயந்த அவர்களுடனான கலந்துரையாடல் கல்வி அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் இஸ்லாம் பாடத்திட்டம் பற்றியும் பாடசாலை மாணவர்களுக்கான இஸ்லாம் பாடநூல் விநியோகத்தின் தாமதநிலை குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதில் ஜம்இய்யா சார்பாக பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், பொருளாளர் கலாநிதி ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர், நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் எம். ரிபா ஹஸன் ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ றிஷாத் பதியுத்தீன் மற்றும் கல்முனை நீதிக்கான மையத்தின்  (Centre for Justice) பிரதிநிதிகள் சிலரும் கலந்துகொண்டனர்.

 

Last modified onபுதன்கிழமை, 02 நவம்பர் 2022 03:22

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.