வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரியுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது

ஆக 02, 2022

ACJU/NGS/2022/250

2022.08.02 (1444.01.03)


وَاَنْفِقُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا تُلْقُوْا بِاَيْدِيْكُمْ اِلَى التَّهْلُكَةِ وَاَحْسِنُوْا ۚ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ‏


அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்;. உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்;. இன்னும், நன்மை செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை (நன்மை செய்வோரை) நேசிக்கின்றான். (2:195)


عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : ( قال الله : أَنْفِق يا ابن آدم أُنْفِق عليك ) رواه البخاري ومسلم

''ஆதமின் மகனே! (மனிதனே! மற்றவர்களுக்காகச்) செலவிடு. உனக்கு நான் செலவிடுவேன்' என்று அல்லாஹுதஆலா கூறுவதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)


நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்நிலையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தினாலும் மண்சரிவினாலும் பாதிக்கப்பட்டிருப்பது யாவரும் அறிந்ததே. இவ்வாறான நிலையில் எம்மால் முடியுமான உதவிகளை பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு வழங்குவது அல்லாஹ்வின் பொருத்தமும், உதவியும் எமக்குக் கிடைப்பதற்கும், ஆபத்துகளிலிருந்து பாதுகாப்புப் பெறவும் காரணமாக அமைகின்றன.


ஆதலால், சிறப்பான இம்முஹர்ரம் மாதத்தில் வசதி படைத்தோர் மற்றும் பாதிக்கப்படாத பிரதேசங்களில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு அப்பிரதேசங்களில் உள்ள ஜம்இய்யாவின் பிரதேசக் கிளைகள் மற்றும் மஸ்ஜித் நிர்வாகங்கள் ஊடாக தங்களது உதவிகளை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் வேண்டிக் கொள்கின்றது.


அத்துடன், தங்களது உதவிகளை பண ரீதியாக மேற்கொள்ள விரும்புபவர்கள் கொழும்பு மாவட்ட மஸ்ஜித்கள் சம்மேளனம் அல்லது கண்டி மாவட்ட மஸ்ஜித்கள் சம்மேளனம் மற்றும் ஜம்இய்யாவின் கண்டி மாவட்டக் கிளை ஆகியவற்றைத் தொடர்பு கொண்டு அப்பிரதேசங்களுக்கு உதவிகளை வழங்குமாறு ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.


மேலதிக தகவல்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம்.பவாஸ் (0777-571876) அவர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

 


முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Last modified onபுதன்கிழமை, 03 ஆகஸ்ட் 2022 04:23

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.