ஜனநாயக ரீதியாக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருவோர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது

மே 09, 2022

Ref: ACJU/NGS/2022/109

2022.05.09

ஜனநாயக ரீதியாக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருவோர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலை தொடர்பாக தமது எதிர்ப்பை முன்வைத்து ஜனநாயக ரீதியில் காலி முகத்திடலிலும் அலரி மாளிகைக்கு முன்னிலும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டவர்கள் மீது இன்று தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமையானது மிகவும் கவலையையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகத்திற்கு எதிரான இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இத்தாக்குதல் தொடர்பில் நியாயமான மற்றும் வெளிப்படையான ஒரு விசாரணை நடாத்தப்பட்டு, இதனை மேற்கொண்டவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டுமென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நாம் கேட்டுக் கொள்கின்றோம். அத்துடன் சகல தரப்பினரும் வன்முறையை தவிர்ந்து அமைதியான முறையில் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.

அஷ்-ஷைக் எம். எஸ். எம். தாஸீம்
பதில் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Last modified onதிங்கட்கிழமை, 09 மே 2022 14:37

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.