2017.11.10 (1439.02.21)
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மேல்மட்ட உறுப்பினர்களுக்கும் சகோதரர் சிராஸ் நூர்தீன் சட்டத்தரணி தலைமையிலான RRT அமைப்பினருக்கும் இடையில் நேற்று (09.11.2017) விஷேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் சமகாலப் பிரச்சினைகள் பலவும் கலந்தாலோசிக்கப்பட்டன. அத்துடன் கடந்த காலங்களில் RRT அமைப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் புரிந்துணர்வுடனும், ஒத்துழைப்புடனும் நடந்து கொண்டது போலவே தொடர்ந்தும் சமூக நலன்களில் இணைந்து செயற்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் ஜம்இய்யாவின் கௌரவ தலைவர் அஷ்-ஷைக் ரிஸ்வி முப்தி உட்பட பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக், பிரதித் தலைவர் அஷ்-ஷைக் ஏ.சீ அகார் முஹம்மத், உதவிச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா