அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரசாரக் குழுவினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டு வரும் தற்கால பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் எனும் தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி இம்முறை அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஜும்ஆ மஸ்ஜிதில் 05.11.2017ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணியளவில் இடம்பெற இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
மேற்படி நிகழ்வில் பின்வரும் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றது.
- சமூகத்தை கட்டியெழுப்புவதில் மஸ்ஜித் நிருவாகிகளின் பங்களிப்பு - அஷ்-ஷைக் உமர்தீன் (ரஹ்மானி), செயலாளர் பிரசாரக்குழு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
- பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் - அஷ்-ஷைக் ரிஸ்வி முப்தி தலைவர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.
- உலமாக்களுக்கான குத்பா கருத்தரங்கு மற்றும் ஆன்மீக வழிகாட்டல் -அஷ்-ஷைக் அலியார் ரியாழி. நிறைவேற்றுக் குழு உறுப்பினர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.
- காளிமார்கள் மற்றும் விவாக பதிவாளர்களுக்கான கலந்துரையாடல் - அஷ்-ஷைக் ஹலீல். பொருளாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.
- தற்கால பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் அஷ்-ஷைக் ரிஸ்வி முப்தி தலைவர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.
- சமூகங்களுக்கிடையான கலந்துரையாடல் சம்பந்தமான (ஆறு புத்தகங்கள் பற்றியுண்டான தெளிவு) - PPT - அஷ்-ஷைக் அப்துர் ரஹ்மான் இணைப்பாளர், ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.
எனவே இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற உங்களுடைய துஆக்களை எதிர்பார்ப்பதோடு முடியுமானவர்கள் கலந்து கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா