அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் நேற்று 2017.10.17ம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு எட்டு மணி முதல் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.
இரவு பத்து மணி வரை நீடித்த இக்கலந்துரையாடலில்
- வட, கிழக்கு எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்குள் ஒன்று பட்டு செயற்படுதல்.
- ஊடகங்களில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சகோதர முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய வீணான விமர்சனங்கள் மற்றும் தவறான செய்திகளை பரப்புவதில் இருந்து தவிர்ந்து கொள்ளல்.
- முஸ்லிம் அமைச்சர்கள் தமது கட்சிகளின் அலுவல்களை பார்க்கும் அதே நேரம் தமக்குள் ஒரு தலைமைத்துவத்தை உருவாக்கி ஒற்றுமையாக சேரந்து போக முடியுமான கட்டங்களில் ஒத்துழைத்தல்.
போன்ற விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்ட அதே நேரம் கௌரவ அமைச்சர் பௌசி அவர்களின் ஒருங்கிணைப்பில் முஸ்லிம்கள் சார்ந்த விடயங்களை கவனிப்பதாகவும் அக்கலந்துரையாடலில் உறுதியளித்தனர்.
இக்கலந்துரையாடலிற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் ரிஸ்வி முப்தி அவர்கள் தலைமை தாங்கி தேவையான வழிகாட்டல்களை வழங்கிய அதே நேரம் ஒற்றுமையின் அவசியம் பற்றி வலியுருத்தினார். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு சார்பாக அதன் உபதலைவர்கள் அடங்களாக 13 பேர் கலந்து கொண்டனர்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா