Subject : 2019.04.21 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படும் ஸஹ்ரான் ஹாஷி்

FATWA # ACJU/FTW/2020/31-415

டிச 25, 2021

வெளியிடப்பட்ட

ஆய்வு செய்யப்பட்ட பத்வா

கீழ் வகைகள்

Easter Attack , Terrorist Zahran , ACJU Fatwa , ACJU Fatwa Division

2019.04.21 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படும் ஸஹ்ரான் ஹாஷிமின் கருத்துக்கள், பேச்சுக்கள், செயற்பாடுகள் மற்றும் அவற்றினால் கவரப்பட்டோரின் நிலை குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பத்வா

1442.05.09

2020.12.25

அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹூ


எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!


இஸ்லாமிய மார்க்கம் என்பது அன்பு, மனித நேயம், ஐக்கியம், சமாதானம், சகவாழ்வு, சகோதரத்துவம் போன்ற உயர்ந்த ஒழுக்க விழுமியங்களை போதிக்கும் மார்க்கமாகும். ஒரு முஸ்லிம் சிறந்த மனிதநேய பண்புகளை உலகில் மலரச் செய்து தானும் தன்னைச் சூழவுள்ளவர்களும் அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழ வழியமைத்துக் கொடுப்பதையே இஸ்லாம் விரும்புகின்றது.


அல்லாஹூ தஆலா அல் குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.


وَمَا أَرْسَلْنَاكَ إِلا رَحْمَةً لِلْعَالَمِينَ (الأنبياء :107)


'(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை." (அல்-அன்பியா : 107)


அல்லாஹூ தஆலா நபி முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை அகிலத்தாருக்கு அருளாகவும், கருணை காட்டக்கூடியவராகவுமே அனுப்பியுள்ளான்.


وَكَذَٰلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا ( البقرة : 143)


மேலும், இவ்வாறே (முஸ்லிம்களான) உங்களை நாம் ‘உம்மத்தன் வஸத்தன்’ சமநிலையுடைய சமுதாயமாக ஆக்கினோம். (அல்-பகரா : 143).


நடுநிலைக் கொள்கை என்பது இஸ்லாம் போதிக்கும் மிக முக்கிய கோட்பாடுகளில் ஒன்றாகும். மார்க்கத்தை அது வகுத்திருக்கும் எல்லையை மீறி கடைபிடிக்கவும் கூடாது. அதில் அலட்சியம் காட்டுதலும் கூடாது. மேலும், இஸ்லாம் இவ்வுலக மற்றும் மறுஉலகம் சார்ந்த அனைத்து விடயங்களிலும் நடுநிலையை பேணும்படியே வழிகாட்டியுள்ளது. சார்புநிலை பேணாத சமநிலையுடன் நீதமாக அனைவரையும் மதித்து, அவரவர் உணர்வுகளை புரிந்து நடத்தல் என்பது இங்கு உணர்த்தப்படுகின்றது.


لَا تَغْلُوا فِي دِينِكُمْ. ) النساء : 171)


நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவுகடந்து செல்ல வேண்டாம். (அன்னிஸாஉ : 171).


இஸ்லாம் மார்க்கத்தில் அளவு கடந்து செல்வதை தடைசெய்துள்ளது. அல்லாஹ்வுடைய விடயமாயினும் அல்லது இறைத்தூதரின் விடயமாயினும் மார்க்கம் வகுத்த எல்லையையும் வரம்பினையும் கடந்துவிடாது நிதானமாக நடந்துகொள்ளுங்கள் என்பது இதன் கருத்தாகும்.


عن عائشة رضي الله عنها: أَن النبيَّ ﷺ قَالَ: إِنَّ اللَّهَ رَفِيقٌ يُحِبُّ الرِّفقَ، وَيُعْطِي على الرِّفق ما لا يُعطي عَلى العُنفِ، وَما لا يُعْطِي عَلى مَا سِوَاهُ. (رواه مسلم: 2593)


நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன்; மென்மையான போக்கையே அவன் விரும்புகின்றான். வன்மைக்கும் பிறவற்றுக்கும் வழங்காததையெல்லாம் அவன் மென்மைக்கு வழங்குகின்றான் என நபி ஸல்லல்லாஸூஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா றழியல்லாஸூ அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம் : 2593).
வன்முறைகளில் ஈடுபடுவதை வன்மையாகக் கண்டிக்கும் நபிகளாரின் இந்தப் போதனை, மென்மையையும் நளினத்தையும் கடைபிடிக்கும்படி போதிக்கின்றது.


وَلَا تَسُبُّوا الَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ فَيَسُبُّوا اللّٰهَ عَدْوًاۢ بِغَيْرِ عِلْمٍ. (الأنعام : 108)


அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பு மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள். (அல்-அன்ஆம்: 108).


ஏனையோரது மத உணர்வுகளை மதித்து நடத்தல் வேண்டும் என்பதையே இவ்வசனம் உணர்த்துகின்றது.


لَاۤ اِكْرَاهَ فِى الدِّيْنِ‌ۙ (سورة البقرة : 256)


“மார்க்கத்தில் வற்புறுத்தல் இல்லை”. (அல்-பகறா 256).


மதீனாவின் காலப்பகுதியில் இறக்கப்பட்ட இத்திருவசனம், மனிதனுக்கு மதச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்துவதற்கு ஓரு பிரதானமான சான்றாகும் என்பதுடன், சுதந்திரமாக ஒருவர் சிந்தித்து முடிவெடுத்து, செயற்படத் தூண்டப்பட வேண்டும் என்பது இங்கு உணர்த்தப்படுகின்றது.
இக்கருத்தை உறுதிப்படுத்தும் மற்றுமோர் திருமறை வசனம் பின்வருமாறு.


لَـكُمْ دِيْنُكُمْ وَلِىَ دِيْنِ (سورة الكافرون : 06)


(நபியே நீர் கூறுவீராக!) உங்களுக்கு உங்களுடைய மார்க்கமாகும், எனக்கு என்னுடைய மார்க்கமாகும். (அல் காபிரூன்: 06).


وَاللّٰهُ لَا يُحِبُّ الظّٰلِمِيْنَ‏ (آل عمران : 57)


அல்லாஹ் அநியாயம் புரியக்கூடியவர்களை நேசிக்கமாட்டான். (ஆலு இம்ரான் : 57).


முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்கள், மற்றைய உயிரினங்கள் என யாருக்கும் எவற்றிற்கும் எந்தவகையிலும் அநியாயம் செய்வதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை.


عَنْ أَبِي ذَرٍّ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِيمَا رَوَى عَنِ اللَّهِ، تَبَارَكَ وَتَعَالَى أَنَّهُ قَالَ ‏ "‏ يَا عِبَادِي إِنِّي حَرَّمْتُ الظُّلْمَ عَلَى نَفْسِي وَجَعَلْتُهُ بَيْنَكُمْ مُحَرَّمًا فَلاَ تَظَالَمُوا. (رواه مسلم : 2577)


என் அடியார்களே! அநீதியிழைப்பதை எனக்கு நானே தடை செய்து கொண்டேன்; அதை உங்களுக்கு மத்தியிலும் தடை செய்யப்பட்டதாக ஆக்கிவிட்டேன். ஆகவே, நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதியிழைக்காதீர்கள் என்று வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் அறிவித்ததாக, நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை அபூதர் றழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல் : முஸ்லிம், 2577).


عن أبي سعيدٍ الخدري رضي الله عنه: أن رسول الله صلى الله عليه وسلم قال: لا ضرر ولا ضرار. ، (مستدرك الحاكم: 2345)


ஒருவர் தனக்கு தீங்கிழைப்பதும் கூடாது; மற்றவர்களுக்கும் தீங்கிழைப்பதும் கூடாது என நபி ஸல்லல்லாஸூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஸஈத் அல்குத்ரீ றழியல்லாஸூ அன்ஸூ அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல் : முஸ்தத்ரகுல் ஹாகிம்-2345).


أَنَّهُ مَن قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا ۚ )المائدة : 32)


“நிச்சயமாக எவர் ஒருவர் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறாரோ, அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ, அவர் மனிதர்கள் யாவரையும் வாழவைப்பவரைப் போலாவார்” (அல்-மாஇதா : 32)


புனித அல்-குர்ஆன் எந்த சூழ்நிலையிலும் ஒரு அப்பாவியின் உயிரை பறிக்க முடியாது என்று வெளிப்படையாகக் கூறுகிறது.

மேற்கண்ட அல் குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள், அல்லாஸூ தஆலா நபி முஹம்மத் ஸல்லல்லாஸூ அலைஹி வஸல்லம் அவர்களை கருணை காட்டுபவராக இவ்வையகத்துக்கு அனுப்பியுள்ளான் என்பதையும், இஸ்லாம் தீவிரவாதத்தை வன்மையாகக் கண்டிக்கிறது என்பதையும், எந்நிலையிலும் நடுநிலையாகவும், நிதானமாகவும், மிதமாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் பிறருக்கு அநியாயம் இழைக்கக்கூடாது என்பதையும் வலியுறுத்துகின்றன. தற்கொலையை பெரும்பாவமென கூறி முற்றிலும் அதை தடைசெய்துள்ள இஸ்லாம், அந்தப் பாவச் செயலில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை மறுமையில் உண்டு எனவும் எச்சரித்துள்ளது. இவ்விடயம் நாற்பதுக்கும் மேற்பட்ட ஹதீஸ்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தாம் வசிக்கும் நாட்டின் சட்டத்தை பின்பற்றி நடப்பது முஸ்லிம்களின் பொறுப்பாகும் என்பதுடன், தனிநபர்கள் சட்டத்தை கையில் எடுத்து செயல்படுத்துவதை ஒருபோதும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
தற்காலத்தில் “மூளைச் சலவை செய்யப்பட்ட” முஸ்லிம் பெயர்தாங்கிகள் சிலர் இஸ்லாத்தின் போதனைகளுக்கு முற்றிலும் மாற்றமான தீவிரவாத சிந்தனையுடன் உலகளவில் செயல்பட்டுவருவதை பார்க்க முடிகிறது. அதனால், உலகம் முழுவதும் இஸ்லாம் பற்றிய அச்சம் ஏற்படுத்தப்படுகின்றது.
2015.07.23 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் ஏனைய முஸ்லிம் அமைப்புக்கள் இணைந்து இவ்வாறான தீவிரவாத சிந்தனைகளுக்கும் இஸ்லாத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்ற பிரகடனத்தை வெளியிட்டது. இதே அடிப்படையிலேயே சர்வதேச பத்வா அமைப்புக்களின் பத்வாக்களும் அமைந்திருக்கின்றன.
ஸஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவனது சகாக்களால் உயிர்த்த ஞாயிறு 2019.04.21 அன்று மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டித்தோம். இம்மிலேச்சத்தனமான தாக்குதலால், அப்பாவி மக்கள் பரிதாபமாக கொல்லப்பட்டு இன்னும் பலர் காயங்களுக்குள்ளாக்கப்பட்டதோடு, தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களும் சேதப்படுத்தப்பட்டன.


இஸ்லாமிய போதனைகளுக்கு மாற்றமாக மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான இந்த தாக்குதலை நடாத்திய ஸஹ்ரான் ஹாஷிமின் செயற்பாடுகள், இஸ்லாத்திற்கு முரணானது என்ற காரணத்தினால் தான், அந்த கொடூர தாக்குதலை மேற்கொண்டோரின் உயிர்களை முஸ்லிம் சமூகம் பொறுப்பேற்க வேண்டாம் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பத்வா வெளியிட்டது.
இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை நடாத்திய ஸஹ்ரான் ஹாஷிமும், அவனது சகாக்களும் அல் குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் பிழையாக வியாக்கியானம் செய்துள்ளனர். அவர்களது செயற்பாடுகளை நியாயப்படுத்த அல்குர்ஆனிலோ ஹதீஸிலோ எந்தவொரு அனுமதியும் கிடையாது. இது தொடர்பான பூரணமான விளக்கம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள “மதத்தின் பெயரால் தீவிரவாதம் வேண்டாம்” என்ற புத்தகத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


இவ்வாறான நெறி தவறிய தீவிரவாத சிந்தனைகளிலிருந்து முழு சமூகத்தையும் தேசத்தையும் பாதுகாத்துக் கொள்ள இவ்விடயத்தில் அவதானமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு அனைத்து முஸ்லிம்களையும் கேட்டுக் கொள்கின்றோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே யாவற்றையும் நன்கு அறிந்தவன்.

 

 

அஷ்-ஷைக் ஏ.சீ. அகார் முஹம்மத்
கௌரவ பிரதித் தலைவர்


அஷ்-ஷைக் எச். உமர்தீன்
கௌரவ உப தலைவர்

 

அஷ்-ஷைக் ஏ.எல்.எம். றிழா
கௌரவ உப தலைவர்


அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக்
கௌரவ உப தலைவர்


அஷ்-ஷைக் எஸ்.எச். ஆதம்பாவா
கௌரவ உப தலைவர்

 

அஷ்-ஷைக் ஏ.எல்.எம். கலீல்
கௌரவ பொருளாளர்


அஷ்-ஷைக் அர்கம் நூராமித்
கௌரவ உதவிச் செயலாளர்

அஷ்ஷைக் எம்.டி.எம் ஸல்மான்
கௌரவ உதவிச் செயலாளர், பத்வாக் குழு


அஷ்-ஷைக் ஏ.எம். அஸாத் (ஆயு)
கௌரவ உதவிச் செயலாளர், பத்வாக் குழு


அஷ்-ஷைக் எம்.எப்.எம். பாழில்
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்


அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித்
கௌரவ நிறைவேற்றுக் குழு மற்றும் பத்வாக் குழு உறுப்பினர்


 அஷ்-ஷைக் கே.எம். அப்துல் முக்ஸித்
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்


அஷ்-ஷைக் எம்.எம் ஹஸன் பரீத்
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்


அஷ்-ஷைக் முப்தி எம்.எச்.எம். யூஸூப்
கௌரவ நிறைவேற்றுக் குழு மற்றும் பத்வாக் குழு உறுப்பினர்


அஷ்-ஷைக் ஏ.ஸி.எம். பாழில்
கௌரவ நிறைவேற்றுக் குழு மற்றும் பத்வாக் குழு உறுப்பினர்

அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர்
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்


அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான்
கௌரவ நிறைவேற்றுக் குழு மற்றும் பத்வாக் குழு உறுப்பினர்

அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம். ஜஃபர்
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்


அஷ்-ஷைக் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம்
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

அஷ்-ஷைக் ஏ.ஆர். அப்துர் ரஹ்மான்
கௌரவ நிறைவேற்றுக் குழு மற்றும் பத்வாக் குழு உறுப்பினர்


அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான்
கௌரவ நிறைவேற்றுக் குழு மற்றும் பத்வாக் குழு உறுப்பினர்


அஷ்-ஷைக் ஸகீ அஹ்மத்
கௌரவ நிறைவேற்றுக் குழு மற்றும் பத்வாக் குழு உறுப்பினர்


கலாநிதி அஷ்-ஷைக் அஹ்மத் அஸ்வர்
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்


கலாநிதி அஷ்-ஷைக் எம்.எல்.எம். முபாரக்
கௌரவ நிறைவேற்றுக் குழு மற்றும் பத்வாக் குழு உறுப்பினர்


அஷ்-ஷைக் எம்.இஸட்.எம். நுஃமான்
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்


அஷ்-ஷைக் எம்.எப்.எம். பரூத்
கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்


அஷ்-ஷைக் எம்.ஏ.ஏ.எம். பிஷ்ர்
கௌரவ நிறைவேற்றுக் குழு மற்றும் பத்வாக் குழ உறுப்பினர்


அஷ்-ஷைக் எம்.எச்.எம். யஹ்யா
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்


அஷ்-ஷைக் முப்தி கே.எச்.எம்.ஏ மபாஸ்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்

 

அஷ்-ஷைக் எம்.ஐ. அப்துல் காதர்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்


அஷ்-ஷைக் முப்தி எம்.எப்.எம் ரியாழ்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்


அஷ்-ஷைக் முப்தி ஏ.எம். நஜ்முதீன்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்


அஷ்-ஷைக் ஏ.ஜி ஹாமித் ஸதகா
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்


அஷ்-ஷைக் எம்.இஸட்.எம் அமீனுத்தீன்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்


அஷ்-ஷைக் எஸ்.எச்.எம் இஸ்மாஈல்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்


கலாநிதி அஷ்-ஷைக் எம்.இஸட்.எம் முபீர்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்


 அஷ்-ஷைக் முப்தி ஏ.ஆர் அமானுல்லாஹ்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்


அஷ்-ஷைக் எம்.ஏ.எம். ழபர்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்


அஷ்-ஷைக் முப்தி என்.எம். இர்ஸான்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்


அஷ்-ஷைக் ஏ.எம் ஹாரூன்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்


அஷ்-ஷைக் முப்தி ஜாவித் இக்பால்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்


அஷ்-ஷைக் எம்.என்.எம் இர்ஷாத்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்


அஷ்-ஷைக் நாகூர் ளரீப்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்

 

அஷ்-ஷைக் எம்.என் அப்ராஸ்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்


அஷ்-ஷைக் எம்.எப்.எம் ரம்ஸி
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்


அஷ்-ஷைக் எம்.ஐ. ஹஜ்ஜி முஹம்மத்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்


அஷ்-ஷைக் எம்.ஐ. கலீல் ரஹீம்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்


அஷ்-ஷைக் முப்தி எம்.எம் ழியாஉத்தீன்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்


அஷ்-ஷைக் முப்தி எம்.ஏ.எம் அன்பாஸ்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்


அஷ்-ஷைக் எம். ஸவ்மி கரீம்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்


அஷ்-ஷைக் ஏ.எச்.எம் அக்ரம் (ஆயு)
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்


அஷ்-ஷைக் ஏ.ஜே.எம் மக்தூம்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்


அஷ்-ஷைக் எம்.எம்.ஏ இம்தியாஸ்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்


அஷ்-ஷைக் எஸ்.எஸ்.எம் ரூமி
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்


அஷ்-ஷைக் எம்.எச்.எம் ஹூதைபா
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்


அஷ்-ஷைக் ஏ.ஆர். றமீன்
கௌரவ பத்வாக் குழு உறுப்பினர்