எமது ஊர் ஓரு சிறிய கிராமம். வயது வந்த ஆண்கன் சுமார் 20 பேர்கள் இருக்கின்றார்கள. சில ஜுமுஆ தினங்களில் 10 நபர்களுக்கும் குறைவாக கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில் ஜுமுஆவை எப்படி செய்து கொள்வது. ஜுமுஆ மட்டும் தொழ வேண்டுமா? ஆல்லது ஜுமுஆவும் ழுஹ்ரும் தொழ வேண்டுமா?  அல்லது இந்த ஜுமுஆ கூடுமா? கூடாதா? என்பதை பற்றி அவசரமாகவும் தெளிவாகவும் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்குமாறு வேண்டுகின்றோம்.


எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும் ஸலாமும் அவனது இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!


ஜுமுஆ மார்க்கக் கடமைகளில் ஒன்றாகும். இது ஓர் ஊரில் உள்ள மக்கள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்று கூடி, மார்க்க உபதேசங்களைக் கேட்பதற்கும், சகோதரத்துவத்தைப் பேணுவதற்கும், அல்லாஹ்வின் கடமையை நிறைவேற்றுவதற்கும் உள்ள வணக்கமாகும். மேலும், அதை நிறைவேற்றுவதற்கு சில நிபந்தனைகளும் ஓழுக்கங்களும் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒரு நிபந்தனை, அவ்வூரில் நிரந்தரமாகக் குடியிருப்பவர்களில் சிலரும் அங்கு கட்டாயம் சமுகமளித்து இருக்க வேண்டும் என்பதாகும்.


அவ்வாறு ஜுமுஆ நிறைவேறுவதற்கு நிரந்தரமாகக் குடியிருப்பவர்களில் ஆகக்குறைந்தது எத்தனை பேர் சமுகமளித்திருக்க வேண்டும் என்ற விடயத்தில் மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.


இமாம் மாலிக் றஹிமஹ{ல்லாஹ், பன்னிரண்டு நபர்கள் இருந்தாலும் ஜுமுஆ ஆரம்பிக்கலாம் என்றும், இமாம் அபூ ஹனீபா றஹிமஹ{ல்லாஹ் அவர்கள், ஜுமுஆ ஆரம்பிக்கும் இடம் நகரமாக இருப்பது அவசியம் என்பதுடன், இமாமுடன் நான்கு நபர்கள் இருந்தால் ஜுமுஆ ஆரம்பிக்கலாம் என்றும் கூறுகின்றார்கள்.

என்றாலும், இமாம் ஷாபிஈ மற்றும் அவர்களைச் சார்ந்த அறிஞர்கள் நிரந்தரக் குடியிருப்பாளர்களில் பருவ வயதை அடைந்த 40 ஆண்கள் சமுகமளிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். இதுவே இமாம் அஹ்மத் றஹிமஹ{ல்லாஹ் அவர்களின் நிலைப்பாடுமாகும்.


இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸைக் கூறுகின்றனர் :


கஅப் இப்னு மாலிக் றழியல்லாஹ அன்ஹ அவர்கள் அறிவிக்கின்றார்கள், “முதலாவது எங்களுக்கு ஜுமுஆ செய்தவர் அஸ்அத் இப்னு ஸ{ராரா றழியல்லாஹ அன்ஹ அவர்களாகும். அவர் மதீனாவின் நகீஃ அல்-கழ்மாத் எனும் இடத்தில் ஜுமுஆ நடாத்தினார். அப்பொழுது நாங்கள் நாற்பது பேர்கள் இருந்தோம்.” (அபூ-தாவூத், இப்னு ஹிப்பான், அல்-பைஹகி, அல்-ஹாகிம்)

عن عبد الرحمن بن كعب بن مالك وكان قائد أبيه بعدما ذهب بصره عن أبيه كعب بن مالك أنه كان إذا سمع النداء يوم الجمعة ترحم لأسعد بن زرارة فقلت له إذا سمعت النداء ترحمت لأسعد بن زرارة قال لأنه أول من جمع بنا في هزم النبيت من حرة بني بياضة في نقيع يقال له نقيع الخضمات قلت كم أنتم يومئذ ؟ قال أربعون. رواه أبو داود – 1069 )


இது பற்றி இமாம் நவவி றஹிமஹல்லாஹ் கூறுவதன் சாரம் பின்வருமாறு:


“ஜுமுஆவுக்குக் குறிப்பிட்ட எண்ணிக்கை இருக்க வேண்டும் என்பது இஜ்மாஃ வாகும். என்றாலும், எத்தனை பேர் இருக்க வேண்டும் என்பதில் அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு உள்ளது. நபி ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்களது காலத்தில் நடைபெற்ற ஜுமுஆவில் குறைந்தது நாற்பது பேர் தொழுதுள்ளார்கள் என்பது ஸஹீஹான ஹதீஸில் பதிவாகியுள்ளது.


வேறொரு சந்தர்ப்பத்தில் அதற்குக் குறைவான எண்ணிக்கையினரும் சமுகமளித்திருந்ததாக ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தில், எழுந்து சென்றவர்களோ அல்லது வேறு நபர்களோ நபி ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஜுமுஆவுடைய தொழுகையிலும், குத்பாவுடைய கடமைகளிலும் மீண்டும் வந்து இணைந்திருக்க இடம்பாடு உள்ளது.”

قد ذكرنا أن مذهبنا اشتراط أربعين وبه قال عبيد الله بن عبد الله بن عتبة واحمد واسحق وهو رواية عن عمر بن عبد العزيز وعنه رواية باشتراط خمسين وقال ربيعة تنعقد باثني عشر وقال أبو حنيفة والثوري والليث ومحمد تنعقد بأربعة أحدهم الإمام وحكاه ابن المنذر عن الأوزاعي وأبي ثور واختاره وحكى غيره عن الأوزاعي وأبي يوسف انعقادها بثلاثة أحدهم الإمام وقال الحسن بن صالح وداود تنعقد باثنين أحدهما الإمام وهو معنى ما حكاه ابن المنذر عن مكحول وقال مالك لا يشترط عدد معين بل يشترط جماعة تسكن بهم قرية ويقع بينهم البيع والشراء ولا يحصل بثلاثة وأربعة ونحوهم وحكى الدارمي عن الفاسانى انها تنعقد بواحد منفرد والفاساني لا يعتد به في الإجماع وقد نقلوا الاجماع انه لابد من عدد واختلفوا في قدره كما ذكرنا....( المجموع شرح المهذب – الباب : باب صلاة الجمعة ) 

واحتج أصحابنا بحديث جابر المذكور في الكتاب ولكنه ضعيف كما سبق وبأحاديث بمعناه لكنها ضعيفة وأقرب ما يحتج به ما احتج به البيهقي والأصحاب عن عبد الرحمن بن كعب بن مالك عن أبيه قال " أول من جمع بنا في المدينة سعد بن زرارة قبل مقدم النبي صلى الله عليه وسلم المدينة في نقيع الخضمات قلت كم كنتم قال أربعون رجلا " حديث حسن رواه أبو داود والبيهقي وغيرهما بأسانيد صحيحة قال البيهقي وغيره وهو صحيح والنقيع هنا بالنون ذكره الخطابي والحازمي وغيرهما والخضمات - بفتح الخاء وكسر الضاد المعجمتين - قال الشيخ أبو حامد في تعليقه قال أحمد بن حنبل نقيع الخضمات قرية لبني بياضة بقرب المدينة على ميل من منازل بني سلمة قال أصحابنا وجه الدلالة منه أن يقال أجمعت الأمة على اشتراط العدد والأصل الظهر فلا تصح الجمعة إلا بعدد ثبت فيه التوقيف وقد ثبت جوازها بأربعين فلا يجوز بأقل منه إلا بدليل صريح وثبت إن النبي صلى الله عليه وسلم قال " وصلوا كما رأيتموني أصلي " ولم تثبت صلاته لها بأقل من أربعين. وأما حديث انفضاضهم فلم يبق الا اثنا عشر وليس فيه انه ابتداء الصلاة باثني عشر بل يحتمل أنهم عادوا هم أو غيرهم فحضروا أركان الخطبة والصلاة (المجموع شرح المهذب – الباب : باب صلاة الجمعة)

 


மேலும், ஹன்பலி அறிஞர்களில் மிக முக்கியமான ஒருவரான, அலாஉத் தீன் அல்-மர்தாவி றஹிமஹ ல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:


ஜுமுஆ ஆரம்பிப்பதற்கான நிபந்தனைகளில் ஒன்று, ஜுமுஆக் கடமையானவர்கள் நாற்பது பேர் இருக்கவேண்டும் என்பது. அத்தொகையினர் இல்லாமல் ஜுமுஆ ஆரம்பிக்க முடியாது. இக்கருத்திலேயே பெரும்பாலான ஹன்பலி அறிஞர்கள் இருக்கின்றார்கள்.

ويقول الإمام المرداوي رحمه الله في الإنصاف عند استعراضه لشروط الجمعة: (الثاني: أن يكون بقرية يستوطنها أربعون من أهل وجوبها، فلا يجوز إقامتها في غير ذلك) وهو المذهب، وعليه جماهير الأصحاب، وقطع به كثير منهم)


இதனடிப்படையில் உங்களுடைய ஊரில் நிரந்தரக் குடியிருப்பாளர்களில் வயது வந்த ஆண்கள் நாற்பது நபர்களுக்குக் குறைவாக இருந்தால், அவர்கள் மீது ஜுமுஆ கடமையாக மாட்டாது. மாறாக அவர்கள் ழுஹ்ர் தொழுகையையே நிறைவேற்ற வேண்டும்.


எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.


வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹ