(Gஙாஇப்) ஜனாஸா தொழமுடியும் என்ற ஷாபிஈ மத்ஹபின் அடிப்படையில், வெளியூரில் மரணித்த ஒருவருக்காகவோ அல்லது ஊரில் மரணித்திருந்திருந்தாலும் நோய் அல்லது முடக்கம் போன்ற நிர்ப்பந்தமான காரணங்களினாலோ அந்த ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள், அதற்காக மறைவான ஜனாஸாத் தொழுகையை தொழுதுகொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.
நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பலர், இக்கட்டான இச்சூழ்நிலையில் ஜுமுஆ தொழுகையை நிறைவேற்றும் விடயத்தில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டலை கோரிய வண்ணம் உள்ளனர்.
ஜுமுஆத் தொழுகை ஏனைய பர்ளான தொழுகைகளை விட்டும் சிறப்பாலும் சட்டத்தாலும், அதனை விடும் பொழுது எச்சரிக்கையாலும் வித்தியாசப்பட்ட ஒரு தொழுகையாகும். ஏனைய தொழுகைகளைப் போன்றல்லாது மக்கள் அனைவரும் ஓர் இடத்தில் ஒன்று சேர்ந்து தொழ வேண்டும் என்பதே ஜுமுஆத் தொழுகை விடயத்தில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலாகும்.
ஜுமுஆ நிறைவேறுவதற்கு பல ஒழுக்கங்களும் நிபந்தனைகளும் உள்ளன. அந்நிபந்தனைகளில் ஊரில் வசிக்கும் நிரந்தரக் குடியிருப்பாளர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையினர் அங்கு சமுகமளித்திருப்பதும் ஒன்றாகும். என்றாலும், குறித்த எண்ணிக்கை விடயத்தில் ஆதாரங்களின் அடிப்படையில் மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்ற போதிலும், ஷாபிஈ மற்றும் ஹன்பலி மத்ஹப்களைச் சேர்ந்த அறிஞர்கள் உட்பட இன்னும் பல அறிஞர்கள் 40 நபர்கள் சமுகமளித்திருப்பது கட்டாயம் என்றும் ஹனபி மற்றும் மாலிகி மத்ஹப்களில் அதைவிட குறைவான எண்ணிக்கையுடையோர் சமுகமளித்திருப்பதைக் கொண்டும் ஜுமுஆ நிறைவுறும் என்றும் கூறுகின்றனர்.
ஜுமுஆ மார்க்கக் கடமைகளில் ஒன்றாகும். இது ஓர் ஊரில் உள்ள மக்கள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்று கூடி, மார்க்க உபதேசங்களைக் கேட்பதற்கும், சகோதரத்துவத்தைப் பேணுவதற்கும், அல்லாஹ்வின் கடமையை நிறைவேற்றுவதற்கும் உள்ள வணக்கமாகும். மேலும், அதை நிறைவேற்றுவதற்கு சில நிபந்தனைகளும் ஓழுக்கங்களும் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒரு நிபந்தனை, அவ்வூரில் நிரந்தரமாகக் குடியிருப்பவர்களில் சிலரும் அங்கு கட்டாயம் சமுகமளித்து இருக்க வேண்டும் என்பதாகும்.
ஜமாஅத் தொழுகைக்காக முன்வரிசையைப் பூர்த்தி செய்யும் போது மார்க்க விளக்கம் உள்ளவர்கள், வயது வந்தவர்கள், சிறார்கள் என அனைவரும் ஒரே நேரத்தில் சமுகமளித்திருப்பின் மேற்கூறப்பட்ட ஒழுங்கு முறைகளைப் பேணி வரிசைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். ஜமாஅத் தொழுகை ஆரம்பமாகும் சந்தர்ப்பத்தில் சிறுவர்கள் முன்வரிசையில் முன்னதாகவே நின்று விட்டால் அவர்களைப் பின்னுள்ள வரிசைகளுக்கு அனுப்புவது கூடாது.
இந்த குனூத்துன் நாஸிலாவை மிக நீளமாக ஓதி மஃமூம்களைச் சலிப்படைய வைக்காமல் மிகவும் சுருக்கமாக ஓதுதல் வேண்டும். பர்ளான தொழுகைகளைக்கூட சுருக்கமாக அமைத்துக்கொள்ளுதல் வேண்டும் என்பது நபிவழியாகும். நபியவர்களது குனூத்துன் நாஸிலாவும் மிகவும் சுருக்கமாக இருந்துள்ளது.
நிரந்தரக் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை விடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேற்றுமை இருந்த போதிலும், அவ்வெண்ணிக்ககையினர்; நிரந்தரக் குடியிருப்பாளர்களாக இருப்பது அவசியம் என்ற விடயத்தில் பெரும்பாலான அறிஞர்கள் கருத்தொற்றுமைப்படுகின்றனர்.
ஷரீஆவின் உட்பிரிவுகளில் காணப்படும் கருத்து முரண்பாடுகளுக்காக எவ்விதத்திலும் ஓர் ஊரில் இன்னுமொரு ஜுமுஆவை ஆரம்பிக்கலாகாது. அத்துடன், மஸ்ஜித் நிர்வாகிகள் தமது ஊரிலுள்ள மாற்றுக் கருத்துள்ளவர்களையும் மார்க்க வரையறைக்கு உட்பட்ட வகையில் அரவணைத்துக் கருமமாற்ற முயற்சி செய்தல் வேண்டும்.
ஸலபுஸ் சாலிஹீன்களில் அதிகமானவர்கள் இந்தத் தொழுகையை நிரந்தரமாகக் கடைபிடித்து வந்தி ருப்பதுடன், பிறருக்கு ஆர்வமூட்டியும் உள்ளார்கள். மேலும் மத்ஹபுகளுடைய பெரும்பாலான அறிஞர்கள் அந்தத் தொழுகை ஸுன்னத் எனவும் தீர்ப்பு வழங்களியுள்ளனர்.
உங்களது மர்க்கஸின் பொருட்களின் பாதுகாப்புக்காக ஜுமுஆவுடைய நேரத்தில் சிலரை நியமிக்க வேண்டிய அவசியம் இருந்தால், அவ்வாறு நியமிக்க மார்க்கத்தில் அனுமதியுண்டு. அவர்களுக்கு ஜுமுஆ கடமையாகாது. அவர்கள் ழுஹ்ர் தொழுதால் போதுமாகும்.
ஸுன்னத்தான இரவுத் தொழுகைகளைக் கூட்டாகத்; தொழுவதற்கு மாதத்தில் பிரத்தியேகமாக ஒரு நாளை ஒதுக்கி, அந்நாளில் பொதுமக்களை ஒன்று சேர்த்து, தொடராகத் தொழும் வழமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்திலோ அல்லது சஹாபாக்கள் காலத்திலோ இருக்கவில்லை.
பெண்கள் மஸ்ஜிதுக்கு சென்று ஜுமுஆ மற்றும் பர்ளான தொழுகைகளைத் தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இருந்தாலும், அவ்விடயம் ஹதீஸ்களில் ஆர்வமூட்டப்படவில்லை என்பது ஆண்களைப் போன்று பெண்களும், இவ்வாறு சிரமத்துடன் மஸ்ஜிதுக்கு சென்று தொழவேண்டிய அவசியம் இல்லை என்பதையே உணர்த்துகின்றது.
இருபது றக்அத்துக்களை விட அதிகமாகவோ குறைவாகவோ தன் வசதிக்கேற்ப தொழுதுகொள்வதில் எவ்விதத் தவறும் இல்லை. கூடுதலாகத் தொழுபவர் குறைவாகத் தொழுபவரையோ, குறைவாகத் தொழுபவர் கூடுதலாகத் தொழுபவரையோ குறை காண்பதும், அவரை அதைவிட்டும் தடுப்பதும் முற்றாகத் தடை செய்யப்பட வேண்டும்.
இக்கருத்து வேற்றுமை சமூகத்தைப் பிளவு படுத்தி ஒற்றுமையைச் சீர்குலைக்குமளவு பாரிய ஒரு பிரச்சினை என கருத முடியாதென்றும், மேற்கூறப்பட்ட ஆய்வுக் கேற்ப கருத்துக்களை தேர்ந்தெடுத்து செயற்படுவதில் எத்தவருமில்லையெனவும் கூறிக் கொள்வதோடு,
மழை, வெள்ளம் போன்ற தகுந்த காரணங்களுக்காக ஜுமுஆ கடமையாகாதவர்கள் பிறிதோரிடத்தில் ஜுமுஆ நடாத்த வேண்டிய அவசியமில்லை. ளுஹ்ருடைய தொழுகையைத் தொழுதால் போதுமானது. அவ்வாறு ஜுமுஆ நடாத்துவதிலும் தவறில்லை.
தற்காலத்தில் பொதுவாக பெண்கள் பாதைகளில் நடமாடுவதற்குரிய பாதுகாப்பான சூழல் காணப்படாமையாலும், மஸ்ஜித்களில் ஆண் பெண் கலப்பு ஏற்பட்டு அதன் மூலம் பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புக்கள் இருப்பதாலும்,
குத்பாப் பிரசங்கத்தை நிகழ்த்தியவரே தொழுவித்தலையும் ஏற்பது அடிப்படையும் நபி வழியுமாகும். பேருரை நிகழ்த்தியவருக்கு ஏதேனும் தங்கடம் ஏற்படின் இன்னும் ஒருவரை தனக்குப் பதிலாக்கிக் கொள்வதில் எவ்வித கருத்து வேறுபாடும் அறிஞர் பெருமக்களுக்கிடையில் இல்லை.
மக்களை ஜுமுஆவிற்கு உரிய நேரத்தில் வருவதற்காகத் தயாராக்குதல் போன்ற தேவை இருப்பின், இமாம் மிம்பருக்கு ஏறுமுன் இன்று அமுலில் இருக்கும் அதான் வேண்டத்தக்கதாகும்.
குத்பா பிரசங்கம் நிகழ்த்தும் பொழுது இமாம் ஊன்று கோல் (“அசா”) பயன்படுத்துவது விடயமாக இமாம்களிடம் கருத்து வேறுபாடு இருந்தாலும் இமாம்களான ஷாபிஈ, அஹ்மத், மாலிக் போன்றவர்களிடம் இவ்விடயம் சுன்னத்தான காரியமெனவும் விரும்பதக்கதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.