ஷஃபான் மாதம் 15ம் நாளில் விஷேடமாக நோன்பு நேற்பது பற்றி பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ் ஆதார பூர்வமான ஹதீஸாக இல்லாவிட்டாலும், அந்நாளில், மேற்குறிப்பிட்டதன் பிரகாரம், ஷஃபான் மாதத்தின் பொதுவான சுன்னத்தான நோன்பு என்ற அடிப்படையிலோ அல்லது 13,14,15 ஆகிய ஐயாமுல் பீழ் உடைய நாட்கள் என்ற அடிப்படையிலோ அல்லது வழமையாக திங்கள் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் நோன்பு நோற்பவர் என்ற அடிப்படையிலோ நோன்பு நோற்கலாம்.