குறிப்பிட்ட நிதியத்தின் மூலம் எப்பொருளை வாங்கப் போகின்றீர்கள் அல்லது தாபிக்கப் போகின்றீர்கள் என்பதையும், அதன் வருமானத்தை எவ்வாறு செலவு செய்யப்போகின்றீர்கள், அதை யார் மூலம் நிர்வகிக்கப்போகின்றீர்கள், அவர்கள் மரணித்ததன் பின் அதை நிர்வகிப்பவர்கள் யார் என்பனவற்றையும், நிதியத்துக்கு பணம் அல்லது பொருள் வழங்குபவர்களிடம் தெளிவாகக் கூறி அவர்களது அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும். இது ஒரு பொறுப்பு வாய்ந்த அமானிதம் என்பதால், இவ்வமானிதத்தை முறையாகப் பாதுகாத்து அதன் நிபந்தனைகளைப் பேணி கருமம் ஆற்றுவதற்கு உங்களுக்குப் போதிய தகைமை இருந்தால் தான் இத்திட்டத்தைச் செய்வதற்கு நீங்கள் முன்வரவேண்டும்.