எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், சலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
ஹஜ் மற்றும் உம்ரா தனித்தனிக் கடமையாகும். இது வாழ் நாளில் ஒரு முறை கடமையாகும் என்பதே, இமாம் ஷாபிஈ, இமாம் அஹ்மத் உட்பட அதிகமான மார்க்க அறிஞர்களின் கருத்தாகும். இதற்கு ஆதாரமாக وأتموا الحج والعمرة لله எனும் திருவசனத்தில் ஹஜ்ஜையும் உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்' என்று ஹஜ்ஜையும் உம்ராவையும் இணைத்து கூறும் குர்ஆன் வசனத்தையும் இன்னும் பல ஹதீஸ்களையும் ஆதாரமாக எடுத்துள்ளனர்.
அவ்வாறு உம்ராவுக்கோ அல்லது ஹஜ்ஜுக்கோ வசதி இருந்தும் நிறைவேற்றாமல் மரணித்துவிட்டால், அவரது அனந்தர சொத்திலிருந்து, அவரது வாரிஸ்கள் அவருக்குப் பகரமாக இக்கடமையை நிறைவேற்றுவது அவசியமாகும்.
உம்ரா செய்வது கடமையான ஒருவர் ஹஜ்ஜையும் சேர்த்து செய்வதற்கு வசதி வரும்வரை எதிர்பார்த்திருக்காமல் உம்ராவை நிறைவேற்றுவது கட்டாயமாகும். கடமையான உம்ராவை நிறைவேற்றியவர் மீண்டும் மீண்டும் உம்ராவை மாத்திரம் செய்து கொண்டிருக்காமல் ஹஜ் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தல் வேண்டும். மேலும் சுன்னத்தான உம்ராவைச் செய்வதன் மூலம்
( هُوَ (الحج) فَرْضٌ ) مَعْلُومٌ مِنْ الدِّينِ بِالضَّرُورَةِ فَيَكْفُرُ مُنْكِرُهُ إلَّا إنْ أَمْكَنَ خَفَاؤُهُ عَلَيْهِ ( وَكَذَا الْعُمْرَةُ ، وَهِيَ ) بِضَمٍّ فَسُكُونٍ أَوْ ضَمٍّ وَبِفَتْحِ فَسُكُونٍ لُغَةً زِيَارَةُ مَكَان عَامِرٍ وَشَرْعًا قَصْدُ الْكَعْبَةِ لِلنُّسُكِ الْآتِي أَوْ نَفْسِ الْأَفْعَالِ الْآتِيَةِ ( فِي الْأَظْهَرِ ) لِلْخَبَرِ الصَّحِيحِ { حُجَّ عَنْ أَبِيك وَاعْتَمِرْ } وَصَحَّ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا { هَلْ عَلَى النِّسَاءِ جِهَادٌ قَالَ جِهَادٌ لَا قِتَالَ فِيهِ الْحَجُّ وَالْعُمْرَةُ } 'تحفة المحتاج'
وَهُمَا عَلَى التَّرَاخِي بِشَرْطِ الْعَزْمِ عَلَى الْفِعْلِ بَعْدُ وَأَنْ لَا يَتَضَيَّقَا بِنَذْرٍ أَوْ خَوْفِ عَضْبٍ أَوْ تَلَفِ مَالٍ بِقَرِينَةٍ وَلَوْ ضَعِيفَةً كَمَا يُفْهِمُهُ قَوْلُهُمْ لَا يَجُوزُ تَأْخِيرُ الْمُوَسَّعِ إلَّا إنْ غَلَبَ عَلَى الظَّنِّ تَمَكُّنُهُ مِنْهُ. 'تحفة المحتاج'