ACJU/FTW/2021/003-418

 

1442.06.26

2021.02.09

பதில் : எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும் ஸலாமும் அவனது இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

 

கணவன் மனைவிக்கிடையில் பிணக்கு ஏற்பட்டு விவாகரத்துச் செய்வதற்கான முடிவுக்கு வருவதற்குமுன் அவர்களைச் சமாதானம் செய்துவைப்பது குடும்ப உறவினர்களின் கடமையாகும்.

இதன் அடிப்படையில், இரு தரப்பினர்; சார்பாகவும் இரண்டு நபர்கள், அந்தக் கணவன் மனைவிக்கிடையில் உள்ள பிணக்கை நல்லுபதேசம், ஆலோசனைகள் மூலம் தீர்த்துவைக்க முயற்சி செய்தல் வேண்டும்.

இதுபற்றி அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளான் :

وَاِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوْا حَكَمًا مِّنْ اَهْلِهٖ وَحَكَمًا مِّنْ اَهْلِهَا‌ ۚ اِنْ يُّرِيْدَاۤ اِصْلَاحًا يُّوَفِّـقِ اللّٰهُ بَيْنَهُمَا‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا خَبِيْرًا‏ ( سورة النساء -35 )

(கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால், கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள். அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும் படி செய்துவிடுவான் நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்குணர்கிறவனாகவும் இருக்கின்றான்.  (அந்நிஸா : 35).

அத்துடன், தலாக்கின் மூலம் ஏற்படும் பின்விளைவுகளைத் தெளிவுபடுத்தி அவ்விருவரும் சேர்ந்து வாழ்வதற்குரிய ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

இவ்வாறு கணவன் மனைவியின் பிணக்கைத் தீர்த்து வைப்பதற்காக இரண்டு நபர்களை அனுப்புவது கட்டாயமாகும் என பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அவர்களின் முயற்சி கைகூடவில்லை என்றால், இறுதித் தீர்மானமாக அவர்கள் தலாக், பஸ்கு மற்றும் குல்உ ஆகியவற்றில் மிகப்பொருத்தமான ஏதாவது ஒன்றின் மூலம் விவாக ஒப்பந்தத்தை முறிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

وَاِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوْا حَكَمًا مِّنْ اَهْلِهٖ وَحَكَمًا مِّنْ اَهْلِهَا‌ ۚ اِنْ يُّرِيْدَاۤ اِصْلَاحًا يُّوَفِّـقِ اللّٰهُ بَيْنَهُمَا‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا خَبِيْرًا‏ ( سورة النساء -35 )

(فإن اشتد الشقاق) بكسر الشين أي الخلاف والعداوة بينهما مأخوذ من الشق، وهو الناحية، إذ كل واحد صار في ناحية، وذلك بأن دام بينهما التساب والتضارب وفحش ذلك (بعث) القاضي (حكما من أهله وحكما من أهلها) لينظر في أمرهما بعد اختلاء حكمه به وحكمها بها ومعرفة ما عندهما في ذلك،

ولا يخفي حكم عن حكم شيئا إذا اجتمعا ويصلحا بينهما أو يفرقا بطلقة إن عسر الإصلاح على ما يأتي لآية: {وإن خفتم شقاق بينهما} [النساء: 35] والخطاب فيها للحكام، وقيل: للأولياء والبعث واجب كما صححه في زيادة الروضة، وجزم به الماوردي وإن صحح في المهمات الاستحباب لنقل البحر له عن نص الشافعي. وقال الأذرعي: بل ظاهر نص الأم الوجوب، وأما كونهما من أهلهما فمستحب غير مستحق إجماعا كما في النهاية؛ لأن القرابة لا تشترط في الحاكم ولا في الوكيل. (مغنى المحتاج - كتاب النكاح - فصل في حكم الشقاق بالتعدي بين الزوجين)

உடலுறவு நடைபெற்றதன் பின்னர், எம்முறையில் விவாகரத்து நடைபெற்றாலும் நிர்ணயிக்கப்பட்ட முழு மஹ்ரும் மனைவிக்குச் சொந்தமாகிவிடும்.

 

இதனைப் பின்வரும் அல்குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகின்றது :

 

وَإِنْ أَرَدْتُمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَكَانَ زَوْجٍ وَآتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنْطَارًا فَلَا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا أَتَأْخُذُونَهُ بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا  وَكَيْفَ تَأْخُذُونَهُ وَقَدْ أَفْضَى بَعْضُكُمْ إِلَى بَعْضٍ وَأَخَذْنَ مِنْكُمْ مِيثَاقًا غَلِيظًا. وَكَيْفَ تَاْخُذُوْنَهٗ. وَقَدْ اَفْضٰى بَعْضُكُمْ اِلٰى بَعْضٍ وَّاَخَذْنَ مِنْكُمْ مِّيْثَاقًا غَلِيْظًا‏. (النساء: 20، 21)

 

நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால், முந்தைய மனைவிக்கு ஒரு பொற் குவியலையே கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் - அபாண்டமாகவும், பகிரங்கமாகப் பாவகரமாகவும், அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா? அதனை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் உறவு கொண்டு விட்டீர்களே!   (அந்நிஸா : 20-21).

அதே வேளை, உடலுறவு கொள்வதற்கு முன்னர் தலாக் மூலம் பிரிவு ஏற்பட்டால், நிர்ணயிக்கப்பட்ட மஹ்;ரில் அரைவாசி மனைவிக்குக் கொடுப்பது கடமையாகும்.

இதுபற்றி அல்லாஹு தஆலா பின்வருமாறு குறிப்பிடுகின்றான் :

 

وَاِنْ طَلَّقْتُمُوْهُنَّ مِنْ قَبْلِ اَنْ تَمَسُّوْهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيْضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ اِلَّاۤ اَنْ يَّعْفُوْنَ اَوْ يَعْفُوَا الَّذِىْ بِيَدِهٖ عُقْدَةُ النِّكَاحِ‌ؕ وَاَنْ تَعْفُوْٓا اَقْرَبُ لِلتَّقْوٰى‌ؕ وَلَا تَنْسَوُا الْفَضْلَ بَيْنَكُمْ‌ؕ اِنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏ (البقرة - 237 )

 

மேலும், மஹ்ரை நிர்ணயித்து விட்டு அவர்களுடன் நீங்கள் தாம்பத்திய உறவில் ஈடுபட முன்னர் தலாக் சொல்லி விட்டால், நீங்கள் நிர்ணயித்த மஹ்ரில் பாதியை அவர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். ஆனால் அப்பெண்கள் (மஹ்ரை வாங்காமல்) விட்டுக் கொடுத்தாலே தவிர. அல்லது திருமண ஒப்பந்தம் யாருடைய பொறுப்பில் உள்ளதோ அவர் (முழு மஹ்ரையும்) விட்டுக் கொடுத்தாலே தவிர; மேலும் நீங்கள் (கணவர்கள்) விட்டுக் கொடுப்பதுதான் இறையச்சத்திற்கு மிக இணக்கமானதாகும். நீங்கள் உங்களுக்கிடையில் தயாள குணத்துடன் நடந்துகொள்ள மறந்துவிட வேண்டாம்! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதனைத்தையும் உற்று நோக்கியவனாக இருக்கின்றான்.         (அல்பகரா : 237).

“குல்உ” முறையில் ஏற்படும் பிரிவும் “தலாக்” ஆகவே கணிக்கப்படும். இதுவே ஷாபிஈ மத்ஹப் உட்பட பெரும்பாலான அறிஞர்களின் நிலைப்பாடாகும்.

 

( وهو ) في الشرع ( فرقة ) بين الزوجين ( بعوض ) مقصود راجع لجهة الزوج ( بلفظ طلاق أو خلع ) كقوله طلقتك أو خالعتك على كذا فتقبل (كتاب الخلع – مغني المحتاج )

 

“குல்உ” முறையில் பிரிவது என்பது தலாக் அல்லது “குல்உ” வுடைய வார்த்தையின் மூலம் கணவன் மனைவி இருவரும் இணங்கும் குறிப்பிட்ட ஒரு தொகையை மனைவி கணவருக்குக் கொடுத்து விவாகரத்தைப் பெற்றுக் கொள்வதாகும். இத்தொகை கணவன் கொடுத்த மஹ்ராகவோ அல்லது வேறு ஏதாவது சொத்தாகவோ இருக்கலாம்.

இதற்கு பின்வரும் ஹதீஸினை ஆதரமாகக் கூறுகின்றனர் :

இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஸாபித் இப்னு கைஸ் இப்னு ஷம்மாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் துணைவியர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, “இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) ஸாபித் இப்னு கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறைகூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்து கொண்டே இறை நிராகரிப்புக்குரிய செயல்களைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்” என்று கூறினார். அப்போது, 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஸாபித் உனக்கு வழங்கிய தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் கொடுத்து விடுகிறாயா? என்று கேட்டார்கள். அவர், “ஆம் (கொடுத்து விடுகிறேன்)”என்று கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), 'தோட்டத்தை ஏற்றுக்கொண்டு அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள்! என்று கூறினார்கள்.             (சஹீஹுல் புகாரி : 5273)

 

عن ابن عباس أن امرأة ثابت بن قيس: أتت النبي صلى الله عليه وسلم فقالت: يا رسول الله، ثابت بن قيس ما أعتب عليه في خلق ولا دين، ولكني أكره الكفر في الإسلام، فقال رسول الله صلى الله عليه وسلم: أتردين عليه حديقته، قالت: نعم، قال رسول الله صلى الله عليه وسلم: أقبل الحديقة وطلقها تطليقة.  (بَابُ الخُلْعِ وَكَيْفَ الطَّلاَقُ فِيهِ - صحيح البخاري – 5273)  وجاء في عمدة القاري للعيني: قوله (حديقة) أي بستانه الذي أعطاها.

 

அதேவேளை கணவனிடமுள்ள ஏதாவது குறையை வைத்து மனைவி பஸ்கு முறையில் பிரிந்தால் அல்லது மனைவியின் ஏதாவது குறையை வைத்து கணவன் பிரிந்தால், அப்பிரிவு உடலுறவுக்கு முன்னர் நடைபெற்றால் மனைவிக்கு எந்த மஹ்ரும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

 

الفرقة قبل وطء منها أو بسببها كفسخه بعيبها تسقط المهر. وما لا كطلاق وإسلامه وردته ولعانه وإرضاع أمه أو أمها يشطره. (كتاب الصداق - منهاج الطالبين)

 

என்றாலும், கணவன் மதம்மாறுதல் போன்ற கணவனின் புறத்தில் உள்ள காரணமாக கணவனே பிரிவை ஏற்படுத்தி அது உடலுறவுக்கு முன்னால் நடைபெற்றால் அரைவாசி மஹ்ரினை திருப்பிக் கொடுப்பது கட்டாயமாகும்.

மேலும், திருமண ஒப்பந்தத்திற்கு முன்னர் இரு தரப்பாலும் பரிமாறிக் கொண்ட நன்கொடைகள், திருமண ஒப்பந்தம் நடைபெறாமல் நின்றுவிட்டால், அந்நன்கொடைகளை ஒரு தரப்பு மீளக்கேட்டால் திருப்பிக் கொடுக்க வேண்டும். அதேவேளை, திருமண ஒப்பந்தம் நடைபெற்றதன் பின் விவாகரத்து ஏற்பட்டால் நன்கொடையாகக் கொடுத்த எதையும் மறு தரப்பின் மனவிருப்பமின்றி திரும்பப் பெற்றுக்கொள்வது ஹராமாகும் என்று மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர்.

 

خَطَبَ امْرَأَةً ثُمَّ أَرْسَلَ أَوْ دَفَعَ بِلَا لَفْظِ إلَيْهَا مَالًا قَبْلَ الْعَقْدِ أَيْ وَلَمْ يَقْصِدْ التَّبَرُّعَ ثُمَّ وَقَعَ الْإِعْرَاضُ مِنْهَا أَوْ مِنْهُ رَجَعَ بِمَا وَصَلَهَا مِنْهُ كَمَا أَفَادَهُ كَلَامُ الْبَغَوِيّ وَاعْتَمَدَهُ الْأَذْرَعِيُّ وَنَقَلَهُ الزَّرْكَشِيُّ وَغَيْرُهُ عَنْ الرَّافِعِيِّ أَيْ اقْتِضَاءً يَقْرُبُ مِنْ الصَّرِيحِ وَعِبَارَةُ قَوَاعِدِهِ خَطَبَ امْرَأَةً فَأَجَابَتْهُ فَحَمَلَ إلَيْهِمْ هَدِيَّةً ثُمَّ لَمْ يَنْكِحْهَا رَجَعَ بِمَا سَاقَهُ إلَيْهَا لِأَنَّهُ سَاقَهُ بِنَاءً عَلَى إنْكَاحِهِ وَلَمْ يَحْصُلْ. وَلَوْ طَلَّقَ فِي مَسْأَلَتِنَا بَعْدَ الْعَقْدِ لَمْ يَرْجِعْ بِشَيْءٍ كَمَا رَجَّحَهُ الْأَذْرَعِيُّ خِلَافًا لِلْبَغَوِيِّ لِأَنَّهُ إنَّمَا أَعْطَى لِأَجْلِ الْعَقْدِ وَقَدْ وُجِدَ ( تحفة المحتاج في شرح المنهاج – فَرْعٌ خَطَبَ امْرَأَةً ثُمَّ أَرْسَلَ أَوْ دَفَعَ بِلَا لَفْظِ إلَيْهَا مَالًا قَبْلَ الْعَقْدِ )

 

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

 

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்                

செயலாளர், பத்வாக் குழு                        

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா  

 

 

அஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி

மேற்பார்வையாளர் - பத்வாக் குழு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்                         

பதில் பொதுச் செயலாளர்,                       

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

         

 

அஷ்-ஷைக் ஏ. ஜே. அப்துல் ஹாலிக்

பதில் தலைவர்,     

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Additional Info

  • பத்வா எண் ACJU/FTW/2021/003-418
  • கேள்வி

    ஒருவர் திருமணம்செய்து, பலவருடங்கள் அப்பெண்ணுடன் வாழ்ந்து ஒரு குழந்தையும் பெற்றுக்கொண்ட பின்னர், அவர்களுக்கிடையில் ஏற்பட்ட மணமுறிவின் காரணமாக விவாகரத்து செய்து கொள்ளும் போது, கணவனால் மனைவிக்கு வழங்கப்பட்ட மஹ்ரை திருப்பிக் கேட்கும் போது அதனைக் கொடுப்பது சம்பந்தமான மார்க்கத் தெளிவை மிக விரைவாக எழுத்து மூலம் அனுப்பி வைக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

    எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களது சேவைகளைப் பொருந்திக் கொள்வானாக.

  • Fatwa Summary கணவன் மனைவிக்கிடையில் பிணக்கு ஏற்பட்டு விவாகரத்துச் செய்வதற்கான முடிவுக்கு வருவதற்குமுன் அவர்களைச் சமாதானம் செய்துவைப்பது குடும்ப உறவினர்களின் கடமையாகும். இதன் அடிப்படையில், இரு தரப்பினர்; சார்பாகவும் இரண்டு நபர்கள், அந்தக் கணவன் மனைவிக்கிடையில் உள்ள பிணக்கை நல்லுபதேசம், ஆலோசனைகள் மூலம் தீர்த்துவைக்க முயற்சி செய்தல் வேண்டும். அத்துடன், தலாக்கின் மூலம் ஏற்படும் பின்விளைவுகளைத் தெளிவுபடுத்தி அவ்விருவரும் சேர்ந்து வாழ்வதற்குரிய ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். இவ்வாறு கணவன் மனைவியின் பிணக்கைத் தீர்த்து வைப்பதற்காக இரண்டு நபர்களை அனுப்புவது கட்டாயமாகும் என பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அவர்களின் முயற்சி கைகூடவில்லை என்றால், இறுதித் தீர்மானமாக அவர்கள் தலாக், பஸ்கு மற்றும் குல்உ ஆகியவற்றில் மிகப்பொருத்தமான ஏதாவது ஒன்றின் மூலம் விவாக ஒப்பந்தத்தை முறிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.