ACJU/FTW/2021/017-432

 

17.08.2021

07.01.1443

 

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே; ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

 

முஹர்ரம் மாதம் இஸ்லாமிய மாதங்களில் முதல் மாதமாகும். இது அல்-குர்ஆனில் குறிப்பிடப்பட்ட புனித நான்கு மாதங்களில் ஒன்றாகும்.

 

இதுபற்றி அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

 

إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِندَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ۚ ذَٰلِكَ الدِّينُ الْقَيِّمُ ۚ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنفُسَكُمْ ۚ    (التوبة : 36)

 

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில், அல்லாஹ்வுடைய (பதிவு) ஏட்டில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை. இதுதான் நேரான மார்க்கமாகும். ஆகவே அம்மாதங்களில் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள். (9:36)

 

முஹர்ரம் மாதம் என்பது அல்லாஹ்வின் மாதம் என்பதுடன் அதில் நோன்பு நோற்பது மிகவும் சிறப்புக்குரியதாகும். 

 

இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْضَلُ الصِّيَامِ، بَعْدَ رَمَضَانَ، شَهْرُ اللهِ الْمُحَرَّمُ، وَأَفْضَلُ الصَّلَاةِ، بَعْدَ الْفَرِيضَةِ، صَلَاةُ اللَّيْلِ. (صحيح مسلم : 1163)

 

அபூ ஹுரைரா றழியல்லாஹு  அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். ரமழான் மாதத்தின் பின்னர் (நோற்கப்படும் நோன்புகளில்) மிகச் சிறந்த நோன்பு அல்லாஹ்வின் மாதம் முஹர்ரம் மாதத்தில் (நோற்கப்படும்) நோன்பாகும் எனவும் பர்ழான தொழுகைக்குப் பின்னர் மிகச் சிறந்த தொழுகை இரவுத் தொழுகை எனவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.  (நூல்: ஸஹீஹு முஸ்லிம் - 1163)

 

முஹர்ரம் மாதத்தின் 10 ஆவது நாளுக்கு ஆஷுரா என்று சொல்லப்படும். இந்த நாளிலேதான் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை (அநியாயம், அட்டூளியம் புரிந்து கொண்டிருந்த) பிர்அவ்ன் மற்றும் அவனுடைய படையினரிடத்திலிருந்து அல்லாஹுதஆலா பாதுகாத்தான். நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு இந்நாளில் நோன்பு நோற்றுள்ளார்கள்.

 

இத்தினத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நோன்பு நோற்றதோடு, சஹாபாக்களுக்கும் நோன்பு நோற்கும்படி ஏவியுள்ளார்கள். ஆகவே, ஆஷுராவுடைய தினத்தில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.

 

இதனைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.

 

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ فَرَأَى اليَهُودَ تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ، فَقَالَ: «مَا هَذَا؟»، قَالُوا: هَذَا يَوْمٌ صَالِحٌ هَذَا يَوْمٌ نَجَّى اللَّهُ بَنِي إِسْرَائِيلَ مِنْ عَدُوِّهِمْ، فَصَامَهُ مُوسَى، قَالَ: «فَأَنَا أَحَقُّ بِمُوسَى مِنْكُمْ»، فَصَامَهُ، وَأَمَرَ بِصِيَامِهِ . (صحيح البخاري: 2004)

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷுரா நாளில் நோன்பு நோற்றதைக் கண்டார்கள். ‘‘இது என்ன நாள்?” என்று கேட்டார்கள். யூதர்கள், ‘‘இது நல்ல நாள். (மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப்) பின்பற்றியவர்களை,  அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹு தஆலா காப்பாற்றிய நாளாகும். இதற்காக இறைத்தூதர் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நோன்பு நோற்றார்கள்” என்று கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘‘உங்களைவிட மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு மிகவும் தகுதியானவன் நான்” என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள் என இப்னு அப்பாஸ் றழியல்லாஹு  அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹுல் புகாரி : 2004)

 

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صِيَامَ يَوْمٍ فَضَّلَهُ عَلَى غَيْرِهِ إِلَّا هَذَا اليَوْمَ، يَوْمَ عَاشُورَاءَ، وَهَذَا الشَّهْرَ يَعْنِي شَهْرَ رَمَضَانَ» (رواه البخاري: 2006 )

 

ஆஷுரா எனும் இந்த (முஹர்ரம் பத்தாம்) நாளையும் ரமழான் எனும் இந்த மாதத்தையும் தவிர, வேறெதனையும் சிறப்பாகத் தேர்ந் தெடுத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை என இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹுல் புகாரி : 2006)

 

ஆஷுராவுடைய நோன்பின் கூலியைப் பொருத்தவரையில் இந்நோன்பு கடந்த ஒரு வருடத்தில் செய்யப்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாக அமைகின்றது.

 

இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

 

عَنْ أَبِي قَتَادَةَ رضي الله عنه، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: صِيَامُ يَوْمِ عَاشُورَاءَ، إِنِّي أَحْتَسِبُ عَلَى اللهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ. (سنن الترمذي : 752)

 

ஆஷுரா தினத்தில் நோற்கப்படும் நோன்பை அல்லாஹஹு தஆலா கடந்த ஒரு வருடத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாக்கி விடுவதை நான் ஆதரவு வைக்கின்றேன் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ கதாதா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸுனன் அத்திர்மிதி : 752)

 

முஹர்ரம் மாதத்தின் 10 ஆவது நாளுடன் சேர்த்து 09 ஆவது நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.

 

(وَ) يُسْتَحَبُّ (صَوْمُ عَاشُورَاءَ) وَهُوَ عَاشِرُ الْمُحَرَّمِ (مَعَ تَاسُوعَاءَ) وَهُوَ تَاسِعُهُ «قَالَ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - صِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَقَالَ لَئِنْ عِشْت إلَى قَابِلٍ لَأَصُومَنَّ التَّاسِعَ فَمَاتَ قَبْلَهُ» رَوَاهُمَا مُسْلِمٌ وَإِنَّمَا لَمْ يُحِبَّ صَوْمَ عَاشُورَاءَ لِخَبَرِ الصَّحِيحَيْنِ «إنَّ هَذَا الْيَوْمَ يَوْمُ عَاشُورَاءَ وَلَمْ يُكْتَبْ عَلَيْكُمْ صِيَامُهُ فَمَنْ شَاءَ فَلْيَصُمْ وَمَنْ شَاءَ فَلْيُفْطِرْ» (أسنى المطالب في شرح روض الطالب)

 

இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

 

عن عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، قال: حِينَ صَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وآله وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا: يَا رَسُولَ اللهِ، إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وآلِهِ وَسَلَّمَ: «فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ إِنْ شَاءَ اللهُ صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ» قَالَ: فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وآلِهِ وَسَلَّمَ. (صحيح مسلم : 1134)

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆஷுரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?" என்று வினவினர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்" என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்துவிட்டார்கள். (ஸஹீஹு முஸ்லிம் : 1134)

 

10 ஆவது நாளுடன் சேர்த்து 09 ஆவது நாளில் நோன்பு நோற்றுக் கொள்ள சந்தர்ப்பம் கிடைக்காதவர்களுக்கு 10 ஆவது நாளுடன் சேர்த்து 11 வது நாளில் நோன்பு நோற்றுக் கொள்ளவது சுன்னத்தாகும்.

 

(وَ) صَوْمُ (عَاشُورَاءَ) وَهُوَ تَاسِعُ الْمُحَرَّمِ لِقَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - «لَئِنْ بَقِيتُ إلَى قَابِلٍ لَأَصُومَنَّ الْيَوْمَ التَّاسِعَ» فَمَاتَ قَبْلَهُ رَوَاهُ مُسْلِمٌ.

وَحِكْمَةُ صَوْمِ يَوْمِ تَاسُوعَاءَ مَعَ عَاشُورَاءَ الِاحْتِيَاطُ لَهُ لِاحْتِمَالِ الْغَلَطِ فِي أَوَّلِ الشَّهْرِ، وَلِمُخَالَفَةِ الْيَهُودِ فَإِنَّهُمْ يَصُومُونَ الْعَاشِرَ، وَالِاحْتِرَازُ مِنْ إفْرَادِهِ بِالصَّوْمِ كَمَا فِي يَوْمِ الْجُمُعَةِ، فَإِنْ لَمْ يَصُمْ مَعَهُ تَاسُوعَاءَ سُنَّ أَنْ يَصُومَ مَعَهُ الْحَادِيَ عَشَرَ. (بَابُ صَوْمِ التَّطَوُّعِ يُسَنُّ صَوْمُ الِاثْنَيْنِ، وَالْخَمِيسِ.- مغني المحتاج إلى معرفة معاني ألفاظ المنهاج)

 

இம்மூன்று தினங்களிலும் நோன்பு நோற்றுக் கொள்வது விரும்பத்தக்கதாகும் என இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

 

بَلْ نَصَّ الشَّافِعِيُّ فِي الْأُمِّ وَالْإِمْلَاءِ عَلَى اسْتِحْبَابِ صَوْمِ الثَّلَاثَةِ. (بَابُ صَوْمِ التَّطَوُّعِ يُسَنُّ صَوْمُ الِاثْنَيْنِ، وَالْخَمِيسِ.- مغني المحتاج إلى معرفة معاني ألفاظ المنهاج)

 

ஆகவே, முஹர்ரம் மாதம் 10 ஆவது நாளுடன் சேர்த்து 09 ஆவது நாளில் அல்லது 11 ஆவது நாளில் நோன்பு நோற்றுக் கொள்வது சுன்னத்தாகும். இன்னும், 09, 10, 11 ஆகிய மூன்று தினங்களிலும் நோன்பு நோற்றுக் கொள்வது விரும்பத்தக்கதாகும். அதேவேளை ஒருவர் 10ஆவது நாளில் மாத்திரம் நோன்பு நோற்றுக் கொள்வதாயின் அதற்கும் அனுமதியுள்ளது. 

 

(وَعَاشُورَاءُ) وَلَا بَأْسَ بِإِفْرَادِهِ. (حاشية الشرواني)

 

(قَوْلُهُ أَوْ نَذْرًا إلَخْ) وَكَذَا إذَا وَافَقَ يَوْمًا طَلَبَ صَوْمَهُ فِي نَفْسِهِ كَعَاشُورَاءَ أَوْ عَرَفَةَ وَنِصْفِ شَعْبَانَ نِهَايَةٌ وَسَمِّ. (حاشية الشرواني)

 

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

 

 

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்        

செயலாளர், பத்வாக் குழு                       

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா         

 

 

அஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி

மேற்பார்வையாளர் - பத்வாப் பிரிவு   

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் 

பொதுச் செயலாளர்,                              

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா          

 

 

அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ரிஸ்வி (முஃப்தி)

தலைவர்,           

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Additional Info

  • பத்வா எண் ACJU/FTW/2021/017-432
  • கேள்வி

    முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் ஆஷுரா மற்றும் தாஸுஆ நோன்புகள் தொடர்பான மார்க்க விளக்கம்

  • Fatwa Summary முஹர்ரம் மாதம் 10 ஆவது நாளுடன் சேர்த்து 09 ஆவது நாளில் அல்லது 11 ஆவது நாளில் நோன்பு நோற்றுக் கொள்வது சுன்னத்தாகும். இன்னும், 09, 10, 11 ஆகிய மூன்று தினங்களிலும் நோன்பு நோற்றுக் கொள்வது விரும்பத்தக்கதாகும். அதேவேளை ஒருவர் 10 ஆவது நாளில் மாத்திரம் நோன்பு நோற்றுக் கொள்வதாயின் அதற்கும் அனுமதியுள்ளது.