ACJU/FTW/2022/07-450

1443.09.09
2022.04.11

 

அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு



அடக்கஸ்தளங்களைத் தரிசிப்பது சுன்னத்தான ஓர் அமலாகும். அடகஸ்தளங்களைத் தரிசிப்பது மரண சிந்தனையை ஏற்படுத்தி மறுமை வாழ்வை ஞாபகமூட்டி உள்ளத்தை மிருதுவாக்கி இறை உணர்வை அதிகப்படுத்திக் கொள்ள சந்தர்ப்பமாக அமைகின்றது.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆரம்பத்தில் அடக்கஸ்தலங்களைத் தரிசிப்பதைத் தடுத்தாலும் பின்னர் அடக்கஸ்தலங்களைத் தரிசிப்பதற்கு அனுமதியளித்து அது மரண சிந்தனையை ஏற்படுத்தும் என்றும் கூறினார்கள்.


عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ القُبُورِ، فَقَدْ أُذِنَ لِمُحَمَّدٍ فِي زِيَارَةِ قَبْرِ أُمِّهِ، فَزُورُوهَا فَإِنَّهَا تُذَكِّرُ الآخِرَةَ» وَفِي البَاب عَنْ أَبِي سَعِيدٍ، وَابْنِ مَسْعُودٍ، وَأَنَسٍ، وَأَبِي هُرَيْرَةَ، وَأُمِّ سَلَمَةَ. حَدِيثُ بُرَيْدَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ، (سنن الترمذي – 1054)


'அடக்கஸ்தலங்களைத் தரிசிப்பதை விட்டும் நான் உங்களைத் தடுத்திருந்தேன். எனது தாயின் அடக்கஸ்தலங்களைத் தரிசிப்பதற்கு எனக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் அடக்கஸ்தலங்களைத் தரிசனம் செய்யுங்கள். நிச்சயமாக அடக்கஸ்தலங்களை தரிசனம் செய்வது மறுமையை ஞாபகமூட்டும்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல் : சுனன் அத்-திர்மிதி : 1054)


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இரவின் கடைசிப் பகுதிகளில் பகீஃ என்றழைக்கப்படும் இடத்திற்குச் சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு ஸலாம் சொல்லி அவர்களுக்காக துஆ செய்வார்கள் என ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


அதே போன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உஹுத் யுத்தத்தில் ஷஹீதாக்கப்பட்டவர்களை தரிசிக்க செல்லும் வழமையுடையவர்களாக இருந்துள்ளார்கள்.


பொதுவாக அடக்கஸ்தலங்களை எல்லா நாட்களிலும் எல்லா நேரங்களிலும் தரிசிப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதோடு அதற்கென குறிப்பான நாட்களோ, நேரமோ கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


அவ்லியாக்கள், ஸாலிஹீன்கள் என நம்பப்படுபவர்களின் அடக்கஸ்தலங்களைத் தரிசிப்பதன் சட்டம்


அவ்லியாக்கள், ஸாலிஹீன்கள் என நம்பப்படுபவர்களின் அடக்கஸ்தலங்களைத் தரிசிப்பது ஏனைய அடக்கஸ்தலங்களைத் தரிசிப்பதைப் போன்ற ஒரு சுன்னத்தான அமலாகும்.


பொது அடக்கஸ்தலங்கள் மற்றும் அவ்லியாக்கள் ஸாலிஹீன்களின் ஸியாரங்களைத் தரிசிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விடயங்கள்:

 

1. தரிசிக்கச் செல்லும் போது ஷரீஅத்துக்கு உட்பட்ட ஒழுக்கமான ஆடை அணிந்திருத்தல்.

2. உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாதவர்கள் அடக்கஸ்தலங்களைத் தரிசிக்கச் செல்வதைத் தவிர்த்தல்.

3. தரிசிக்கும் பொழுது ஒப்பாரி வைத்து அழுவதைத் தவிர்த்தல்.

4. தரிசிக்கும் பொழுது வீணான பேச்சுக்களைத் தவிர்த்தல்.

5. அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு ஸலாம் சொல்லி அவர்களுக்காக துஆச் செய்தல்.


ஸலாம் சொல்லும் போதும் துஆ கேட்கும் போதும் ஹதீஸ்களில் வந்துள்ளவற்றைக் கூறுதல்.


புரைதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ருகளைத் தரிசிக்கும் போது பின்வருமாறு கூறுவார்கள். (நூல் ஸஹீஹு முஸ்லிம்)


'السَّلامُ عَلَيْكُمْ أهْلَ الدّيارِ مِنَ المؤْمِنِينَ، وإنَّا إنْ شاءَ اللَّهُ بِكُمْ لَلَاحِقُونَ، أسألُ اللَّهُ لَنَا ولَكُمُ العافيَةَ'


'அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத்தியார் மினல் முஃமினீன வல் முஸ்லிமீன்ளூ வஇன்னா இன்ஷா அல்லாஹு பிகும் லலாஹிகூன்ளூ அஸ்அலுல்லாஹ லனா வலகும் அல்ஆபியா.'


கருத்து : இறை நம்பிக்கைக் கொண்ட மண்ணறை வாசிகளுக்கு அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். அல்லாஹ் நாடினால் நாமும் உங்களை சந்திக்கக்கூடியவர்களே! இன்னும் அல்லாஹ்விடத்தில் உங்களுக்கும் எங்களுக்கும் பாவமன்னிப்பை வேண்டுகிறோம்.


6. தரிசிக்கும் பொழுது அல்குர்ஆனின் சில பகுதிகளை ஓதி அடக்கம் செய்யப்பட்டவர்களுக்காக துஆச் செய்தல்;ளூ அவ்வாறு செய்வது மார்க்கத்தில் விரும்பத்தக்கதாகும்.

 

7. அவ்லியாக்கள், ஸாலிஹீன்கள் என நம்பப்படுபவர்களைத் தரிசிக்கும் பொழுது அல்லாஹ்விடத்தில் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்தில் மாத்திரம் அவர்களைத் தரிசித்தல். மேலும், அவர்களுக்கு ஸலாம் கூறல்.

 

8. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சங்கையான அடக்கஸ்தலத்தைத் தரிசிக்கும் பொழுது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உயிருடன் சந்திக்கும் போது கண்ணியமாக எவ்வாறு தூர நின்று சந்திப்போமோ அவ்வாறே அவர்களது அடக்கஸ்தலத்திலும் கண்ணியமான முறையில் தூர நின்று தரிசிக்க வேண்டும் என இமாம் நவவி றஹிமஹுல்லாஹ் அவர்கள் மஜ்மூஃ எனும் தனது கிரந்தத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். இதன் அடிப்படையிலே அவ்லியாக்கள், ஸாலிஹீன்கள் என நம்பப்படுபவர்களின் அடக்கஸ்தலங்களைத் தரிசிக்கும் போதும் நடந்து கொள்வது முறையாகும்.

 

9. அடக்கஸ்தலங்களைத் தரிசிக்கும் பொழுது அதனை சுற்றி வலம்வராமல் அடக்கப்பட்டவரை முன்னோக்கி, நின்ற நிலையிலோ அல்லது உட்கார்ந்த நிலையிலோ தரிசித்தல்.


இமாம் நவவி றஹிமஹுல்லாஹ் அவர்கள் அல்-மஜ்மூஃ எனும் தனது நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள். 'ஒருவர் மரணித்த தனது சகோதரரைத் தரிசிக்கும் போது, உயிருடன் இருக்கும் போது அவரை சந்திப்பதைப் போன்று நின்ற நிலையிலோ அல்லது உட்கார்ந்த நிலையிலோ அல்லது (அவ்வழியால்) கடந்து செல்லும் போதோ தரிசிப்பார்'


10. அடக்கஸ்தலங்களைத் தரிசிக்கும் பொழுது கப்ருகளை மிதிக்காமல் இருத்தல். அவ்வாறு கப்ருகளை மிதிப்பது வெறுக்கத்தக்கதாகும்.

 

11. பெண்கள் அடக்கஸ்தலங்களைத் தரிசிக்க நேரிட்டால் ஷரீஅத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள ஒழுக்கமான ஆடைகளை அணிந்து செல்லல், ஆண் பெண் கலப்பைத் தவிர்த்தல் என்பவற்றுடன் மேற்கூறப்பட்ட ஒழுங்கு முறைகளைப் பேணுவதும் அவசியமாகும். அவ்வாறு பெண்கள் அடக்கஸ்தலங்களைத் தரிசிக்கும் பொழுது ஃபித்னா ஏற்படும் என அஞ்சப்படுமாயின், பெண்கள் அடக்கஸ்தலங்களைத் தரிசிப்பதைத் தவிர்ந்து கொள்வது அவசியமாகும்.


ஆகவே, அடக்கஸ்தலங்களைத் தரிசிக்கும் போது ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ள மேற்கூறப்பட்ட விடயங்களைக் கடைப்பிடித்துச் செயலாற்றுவதே மார்க்க முறையாகும்.


எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்               

செயலாளர், பத்வாக் குழு                          

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா           

      

அஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி

மேற்பார்வையாளர் - பத்வாப் பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி

தலைவர்,           

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா           

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்  

பொதுச் செயலாளர்,

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 


[1]عَنْ عَائِشَةَ رضي الله عنها، أَنَّهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - كُلَّمَا كَانَ لَيْلَتُهَا مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَخْرُجُ مِنْ آخِرِ اللَّيْلِ إِلَى الْبَقِيعِ، فَيَقُولُ: «السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ، وَأَتَاكُمْ مَا تُوعَدُونَ غَدًا، مُؤَجَّلُونَ، وَإِنَّا، إِنْ شَاءَ اللهُ، بِكُمْ لَاحِقُونَ، اللهُمَّ، اغْفِرْ لِأَهْلِ بَقِيعِ الْغَرْقَدِ» (صحيح مسلم - 974)

 

[1] ( وَتُكْرَهُ ) لِلْخَنَاثَى وَ ( لِلنِّسَاءِ ) مُطْلَقًا خَشْيَةَ الْفِتْنَةِ وَرَفْعِ أَصْوَاتِهِنَّ بِالْبُكَاءِ (فَصْلٌ فِي الدَّفْنِ وَمَا يَتْبَعُهُ - كتاب الجنائز - تحفة المحتاج في شرح المنهاج)

 

[1] ثَبَتَ فِي صَحِيحِ مُسْلِمٍ رَحِمَهُ اللَّهُ عَنْ بُرَيْدَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ " قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا " وَزَادَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ وَالنَّسَائِيُّ فِي رِوَايَتِهِمَا فَزُورُوهَا وَلَا تَقُولُوا هُجْرًا وَالْهَجْرُ الْكَلَامُ الْبَاطِلُ وَكَانَ النَّهْيُ أَوَّلًا لِقُرْبِ عَهْدِهِمْ مِنْ الجاهلية فربما كانا يَتَكَلَّمُونَ بِكَلَامِ الْجَاهِلِيَّةِ الْبَاطِلِ فَلَمَّا اسْتَقَرَّتْ قَوَاعِدُ الْإِسْلَامِ وَتَمَهَّدَتْ أَحْكَامُهُ واستشهرت مَعَالِمُهُ أُبِيحَ لَهُمْ الزيارة واحتاط صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَوْلِهِ وَلَا تَقُولُوا هجرا.  (بَابُ التَّعْزِيَةِ وَالْبُكَاءِ عَلَى الْمَيِّتِ – كتاب الجنائز - المجموع شرح المهذب)

[1] وَيُسْتَحَبُّ لِلزَّائِرِ أَنْ يُسَلِّمَ عَلَى الْمَقَابِرِ وَيَدْعُوَ لِمَنْ يَزُورُهُ وَلِجَمِيعِ أَهْلِ الْمَقْبَرَةِ وَالْأَفْضَلُ أَنْ يَكُونَ السَّلَامُ وَالدُّعَاءُ بِمَا ثَبَتَ فِي الْحَدِيث (بَابُ التَّعْزِيَةِ وَالْبُكَاءِ عَلَى الْمَيِّتِ – كتاب الجنائز - المجموع شرح المهذب)

[1] وَالسُّنَّةُ أَنْ يَقُولَ الزَّائِرُ: سَلَامٌ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ، وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ عَنْ قَرِيبٍ بِكُمْ لَاحِقُونَ، اللَّهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُمْ، وَلَا تَفْتِنَّا بَعْدَهُمْ. )كتاب الجنائز - روضة الطالبين وعمدة المفتين)

[1] عن سليمان بن بريدة عن أبيه قال كان رسول الله صلى الله عليه وسلم يعلمهم إذا خرجوا إلى المقابر فكان قائلهم يقول في رواية أبي بكر السلام على أهل الديار وفي رواية زهير السلام عليكم أهل الديار من المؤمنين والمسلمين وإنا إن شاء الله للاحقون أسأل الله لنا ولكم العافية رواه مسلم في صحيحه:1620­­- 975­(

 

[1] وَيُسْتَحَبُّ أَنْ يَقْرَأَ مِنْ الْقُرْآنِ مَا تَيَسَّرَ وَيَدْعُوَ لَهُمْ عَقِبَهَا نَصَّ عَلَيْهِ الشَّافِعِيُّ وَاتَّفَقَ عَلَيْهِ الْأَصْحَابُ  (بَابُ التَّعْزِيَةِ وَالْبُكَاءِ عَلَى الْمَيِّتِ – كتاب الجنائز - المجموع شرح المهذب)

[1]  لَا يَجُوزُ أَنْ يُطَافَ بِقَبْرِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيُكْرَهُ إلْصَاقُ الظُّهْرِ وَالْبَطْنِ بِجِدَارِ الْقَبْرِ قَالَهُ أَبُو عُبَيْدِ اللَّهِ الْحَلِيمِيُّ وَغَيْرُهُ قَالُوا وَيُكْرَهُ مَسْحُهُ بِالْيَدِ وَتَقْبِيلُهُ بَلْ الْأَدَبُ أَنْ يَبْعُدَ مِنْهُ كَمَا يَبْعُدُ مِنْهُ لَوْ حَضَرَهُ فِي حَيَاتِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذَا هُوَ الصَّوَابُ الَّذِي قَالَهُ الْعُلَمَاءُ وَأَطْبَقُوا عَلَيْهِ وَلَا يُغْتَرُّ بِمُخَالَفَةِ كَثِيرِينَ مِنْ الْعَوَامّ وَفِعْلِهِمْ ذَلِكَ. (باب صفة الحج - المجموع شرح المهذب)

 

[1] قَالَ الْحَافِظُ أَبُو مُوسَى الْأَصْفَهَانِيُّ رَحِمَهُ اللَّهُ فِي كِتَابِهِ آدَابِ زِيَارَةِ الْقُبُورِ الزَّائِرُ بِالْخِيَارِ إنْ شاء زار قَائِمًا وَإِنْ شَاءَ قَعَدَ كَمَا يَزُورُ الرَّجُلُ أَخَاهُ فِي الْحَيَاةِ فَرُبَّمَا جَلَسَ عِنْدَهُ وَرُبَّمَا زاره قائما أومارا……  وَقَالَ الْفُقَهَاءُ الْمُتَبَحِّرُونَ الْخُرَاسَانِيُّونَ الْمُسْتَحَبُّ فِي زِيَارَةِ الْقُبُورِ أَنْ يَقِفَ مُسْتَدْبِرَ الْقِبْلَةِ مُسْتَقْبِلًا وَجْهَ الْمَيِّتِ . (بَابُ التَّعْزِيَةِ وَالْبُكَاءِ عَلَى الْمَيِّتِ – كتاب الجنائز - المجموع شرح المهذب)

[1] «وكره جلوس ووطء عليه» للنهي عنها رَواهُ فِي الأوَّلِ مُسْلِمٌ وفِي الثّانِي التِّرْمِذِيُّ وقالَ حَسَنٌ صَحِيحٌ وفِي مَعْناهُما الِاتِّكاءُ عَلَيْهِ والِاسْتِنادُ إلَيْهِ وبِهِما صَرَّحَ فِي الرَّوْضَةِ.  (فَصْلٌ: فِي دَفْنِ الْمَيِّتِ وَمَا يَتَعَلَّقُ بِهِ - فتح الوهاب بشرح منهج الطلاب لزكريا الأنصاري)

Additional Info

  • பத்வா எண் ACJU/FTW/2022/07-450
  • உட்பட்டது மரணித்தவர்கள் அடக்கஸ்தலங்களைத் தரிசிப்பது
  • கேள்வி

    மரணித்தவர்கள் அடக்கஸ்தலங்களைத் தரிசிப்பது மற்றும் அதன் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள் என்ன?

  • Fatwa Summary அடக்கஸ்தளங்களைத் தரிசிப்பது சுன்னத்தான ஓர் அமலாகும். அடகஸ்தளங்களைத் தரிசிப்பது மரண சிந்தனையை ஏற்படுத்தி மறுமை வாழ்வை ஞாபகமூட்டி உள்ளத்தை மிருதுவாக்கி இறை உணர்வை அதிகப்படுத்திக் கொள்ள சந்தர்ப்பமாக அமைகின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆரம்பத்தில் அடக்கஸ்தலங்களைத் தரிசிப்பதைத் தடுத்தாலும் பின்னர் அடக்கஸ்தலங்களைத் தரிசிப்பதற்கு அனுமதியளித்து அது மரண சிந்தனையை ஏற்படுத்தும் என்றும் கூறினார்கள். عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ القُبُورِ، فَقَدْ أُذِنَ لِمُحَمَّدٍ فِي زِيَارَةِ قَبْرِ أُمِّهِ، فَزُورُوهَا فَإِنَّهَا تُذَكِّرُ الآخِرَةَ» وَفِي البَاب عَنْ أَبِي سَعِيدٍ، وَابْنِ مَسْعُودٍ، وَأَنَسٍ، وَأَبِي هُرَيْرَةَ، وَأُمِّ سَلَمَةَ. حَدِيثُ بُرَيْدَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ، (سنن الترمذي – 1054) 'அடக்கஸ்தலங்களைத் தரிசிப்பதை விட்டும் நான் உங்களைத் தடுத்திருந்தேன். எனது தாயின் அடக்கஸ்தலங்களைத் தரிசிப்பதற்கு எனக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் அடக்கஸ்தலங்களைத் தரிசனம் செய்யுங்கள். நிச்சயமாக அடக்கஸ்தலங்களை தரிசனம் செய்வது மறுமையை ஞாபகமூட்டும்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல் : சுனன் அத்-திர்மிதி : 1054) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இரவின் கடைசிப் பகுதிகளில் பகீஃ என்றழைக்கப்படும் இடத்திற்குச் சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு ஸலாம் சொல்லி அவர்களுக்காக துஆ செய்வார்கள் என ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். அதே போன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உஹுத் யுத்தத்தில் ஷஹீதாக்கப்பட்டவர்களை தரிசிக்க செல்லும் வழமையுடையவர்களாக இருந்துள்ளார்கள். பொதுவாக அடக்கஸ்தலங்களை எல்லா நாட்களிலும் எல்லா நேரங்களிலும் தரிசிப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதோடு அதற்கென குறிப்பான நாட்களோ, நேரமோ கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அவ்லியாக்கள், ஸாலிஹீன்கள் என நம்பப்படுபவர்களின் அடக்கஸ்தலங்களைத் தரிசிப்பதன் சட்டம் அவ்லியாக்கள், ஸாலிஹீன்கள் என நம்பப்படுபவர்களின் அடக்கஸ்தலங்களைத் தரிசிப்பது ஏனைய அடக்கஸ்தலங்களைத் தரிசிப்பதைப் போன்ற ஒரு சுன்னத்தான அமலாகும்.