பத்வா பற்றி

The All Ceylon Jamiyyathul Ulama (ACJU), as the only authorized body to deliver Islamic Shari'ah based guidance and rulings (Fatwa) on socio-religious issues faced by people, carries out this unique project with consensus of opinion among Aalims of different schools of thought. The aim of Fatwa is to simplify and present religious rules that may cause confusion for the people and to create a lifestyle of peace and harmony. It is notable that the majority of the Fatwa issued by the committee has been related to social, economic, and inheritance related guidelines.

The public are able to request Fatwa via phone, email, post or by visiting the ACJU. All queries are handled by dedicated lay staff and scholars; with common fundamental issues being responded to immediately. More complicated queries requiring deliberation are taken up by the committee during the monthly Fatwa meeting with key scholars. The intention is to deliver clear and accurate solutions to issues of a religious nature, and documenting and compiling such discussions for future references.

The Fatwa committee currently handles 30-50 inquiries per day, and has also made a compilation of over 250 documented cases of Fatwas handed down.

 

பத்வாக் குழு

அன்றாடம் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு மார்க்கத் தீர்ப்;பினை வழங்கும் அங்கீகாரம் பெற்ற ஒரே நிறுவனமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இயங்கி வருகின்றது. இஸ்லாத்துடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்ப்பளிக்க நீதிமன்றங்களும் ஜம்இய்யாவின் பத்வாவை வேண்டி நிற்கின்றன. நாளாந்தம் உள்நாடு, வெளிநாடுகளிலிருந்து  தொலை பேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும், எழுத்து மூலமும் பத்வாக்கள் கேட்கப்படுகின்றன. அது மாத்திரமின்றி ஜம்இய்யாவின் தலைமைக் காரியாலயத்துக்கு நேரடியாகவும் பத்வாக்களைக் கேட்டு வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் பத்வாக்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மாதாந்தம் பத்வாக் குழுக் கூட்டம் நடைபெற்று வருகின்றது. அக்குழுவில் அங்கம் வகிக்கும் நாட்டின் பல பகுதிகளையும், அமைப்புக்களையும் சேர்ந்த உலமாக்கள் அன்றைய தினம் தலைமையகத்தில் ஒன்று கூடி சிக்கலான மற்றும் சர்ச்சைக்குரிய விடயங்களை மிகத் தெளிவாக ஆய்வு செய்து பத்வாக்களை எழுத்து மூலம் வெளியிடுகின்றனர். அவ்வாறு எழுதப்பட்டு வெளியிடப்பட்ட பத்வாக்கள் தற்போது 250 பத்வாக்களைத் தாண்டி உள்ளன.