கனஹல ஷான்த ஸ்ரீ தேர அவர்கள் 2017.11.30 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்து அதன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.அதன் போது ஜம்இய்யாவின் நடவடிக்கைகள் பற்றி கேட்டரிந்து கொண்டதோடு அவருக்கு எமது வெளியீடுகளின் ஒன்றான சமாஜ சங்வாத எனும் சிங்கள மொழியிலான புத்தகமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக் செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, அஷ்-ஷைக் எம்.எஸ்.எம் தாஸீம் உப செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, அஷ்-ஷைக் அப்துர்ரஹ்மான் இணைப்பாளர் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆகியோரும் இன்னும் சிலரும் கலந்து கொண்டனர்.

ஊடகப்பிரிவு 

அகில இலங்கை ஜம்இய்யத்துல ்உலமா

 

அகில இலங்கை ஜம்இய்யாவின் அகுறனை கிளையின் ஏற்பாட்டில் " சகவாழ்வு " எனும் மகுடத்தின் கீழ் நிகழ்ச்சி ஒன்று அகுறனை அஸ்னா பள்ளியில் 2017.12.03 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வை அகில இலங்கை ஜம்இய்யாவின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவால் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

ஊடகப்பிரிவு 

அகில இலங்கை ஜம்இய்யத்துல ்உலமா

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பேருவளை கிளையின் ஒன்று கூடல் 2017.12.03 அன்று மருதானை பலகை பள்ளியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாட்டில்    ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக பேருவலை பகுதியில் பாதிக்கப்பட்டவர்களின் தரவுகளை சேகரிப்பது சம்பந்தமாக கலந்தாலோசிக்கப்பட்டது.இந்நிகழ்வில் அஷ்-ஷைக் அப்துர்ரஹ்மான் பஹ்ஜி கலந்து கொண்டார்.

ஊடகப்பிரிவு 

அகில இலங்கை ஜம்இய்யத்துல ்உலமா

    அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் கண்டி மாவட்ட அரபு மத்ரஸாக்களில் இவ்வருடம் (2017)  க.பொ.த சாதாரன தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான ஒருநாள் விஷேட கருத்தரங்கு ஒன்று மாவட்ட கிளையின் தலைமையகத்தில் 2017.12.03  அன்று காலை முதல் மாலை வரை இடம்பெற்றது. இக்கருத்தரங்கில் அரபு, அரபிலக்கணம், இஸ்லாம் ஆகிய பாடங்களுக்கான பரீட்சை வழிகாட்டல்கள் வழங்கப்பட்டது.

ஊடகப்பிரிவு 

அகில இலங்கை ஜம்இய்யத்துல ்உலமா

 

 

 

 

          அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளை மாவட்ட கிளையின்  ஒன்று கூடல்  02/12/2017 அன்று  சனிக்கிழமை  நடைபெற்றது. இக்கூட்டத்தில் வளர்ந்து வரும் எமது வாலிபர்களுக்கான ஒரு நிக்ழ்சியை ஒழுங்கு செய்ய ஆலோசனை செய்யப்பட்டது.

 

ஊடகப்பிரிவு 

அகில இலங்கை ஜம்இய்யத்துல ்உலமா

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துரை மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல் அட்டுளுகம ஜாமிஆ இன்ஆமில் ஹஸன் அரபுக்கல்லூரியில் தலைவர் அஷ் ஷேக் அப்துர்ரஹ்மான் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் 26/11/2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணிக்கு நடைபெற்றது.இக்கூட்டத்தில் சமூக நலன் கருதி முக்கியமான பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல் ஹொரம்பாவை மாவட்ட காரியாலயத்தில் உப தலைவர் அஷ் ஷேக் சித்தீக் (காஸிமி) அவர்களின் தலைமையில் 26/11/2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு நடைபெற்றது.இக்கூட்டத்தில் சமூக நலன் கருதி முக்கியமான பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

  அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின்  ஹொரவப்பொத்தானைக் கிளையினால் 2017.11.25 அன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று  சிறப்பானமுறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதேச பள்ளிவாசல்களின் நிருவாகிகள்,அதிபர்கள், ஆசிரியர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் வியாபாரிகள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.
மேற்படி நிகழ்ச்சியில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரச்சாரக் குழுச் செயலாளர் அஷ்ஷைக் உமர்தீன் கலந்து சிறப்பித்தார்.

 

ஊடகப்பிரிவு 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரசாரக் குழுவினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டு வரும் தற்கால பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் எனும் தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி இம்முறை கேகாலை மாவட்டம் மாவனல்லை, ஹிங்குலோயா மஸ்ஜிதுல் ஹுதா ஜுமுஆ பள்ளிவாசலில் 26.11.2017ம் திகதி ஞாயிற்றறுக் கிழமை காலை 8.30 மணியளவில் இடம்பெற இருக்கிறது.

மேற்படி நிகழ்வில் பின்வரும் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றது.
1.சமூகத்தை கட்டியெழுப்புவதில் மஸ்ஜித் நிருவாகிகளின் பங்களிப்பு- அஷ்-ஷைக் உமர்தீன் (ரஹ்மானி) பிரசாரக்குழு செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.

2. பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களுக்கான வழிகாட்டல் - அஷ்-ஷைக் A.C அகார் முஹம்மத்- பிரதித்தலைவர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.


3. உலமாக்களுக்கான  குத்பா கருத்தரங்கு மற்றும் ஆன்மீக வழிகாட்டல்- அஷ்-ஷைக்M.A.M ஹாரிஸ் (ரஷாதி) - இணைப்பாளர் பத்வாக் குழு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.

4. காளிமார்கள் மற்றும் விவாக பதிவாளர்களுடளான கலந்துரையாடல் அஷ்-ஷைக் K.M அப்துல் முக்ஸித் - செயலாளர் மகளிர் விவகாரக் குழு - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.


5. சமூகங்களுக்கிடையான கலந்துரையாடல் சம்பந்தமான (ஆறு புத்தகங்கள் பற்றியுண்டான தெளிவு) - அஷ்-ஷைக் அப்துர் ரஹ்மான் - இணைப்பாளர் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு - அகில இலங்கை ஜம்,ய்யத்துல் உலமா.

எனவே இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற உங்களுடைய துஆக்களை எதிர்பார்ப்பதோடு முடியுமானவர்கள் கலந்து கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

20.11.2017 (30.02.1439)

         ரபீஉனில் அவ்வல் மாதத்தின் தலைப் பிறையைத் தீர்மானிப்பதற்கான ஒன்றுகூடல் வழமைபோல் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அதன் பிறைக் குழுத் தலைவர் அஷ்-ஷைக் ஜே. அப்துல் ஹமீத் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் 19.11.2017 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. அவ்வொன்றுகூடலில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ரிழ்வி, உப தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ரிழா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிருவாகிகள்இ அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு உறுப்பினர்கள், மேமன் ஹனபிப் பள்ளிவாசல் நிருவாகிகள் உட்பட மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.


     இக் குழு நாடெங்கிலும் உள்ள தமது உப பிறைக் குழு உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டதோடு; அன்றைய தினம் பிறை தென்பட வாய்ப்புள்ள களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, யாழ்ப்பானம், கிளிநொச்சி, மன்னார், புத்தளம் ஆகிய மாவட்டங்களினதும் பொத்துவில், காத்தான்குடி, நிகவெரட்டி போன்ற பிரதேசங்களின் பிரதிநிதிகளையும் தொடர்பு கொண்டனர்.எவ்விடத்திலிருந்தும் பிறை தென்பட்டதற்கான தகவல் கிடைக்காமையால். அங்கு கூடியிருந்த உலமாக்கள் உள்ளிட்ட குழுவினர் ஸபர் மாதத்தை பூரணப்படுத்தி 21.11.2017 செவ்வாய்க்கிழமை ரபீஉனில் அவ்வல் மாதத்தை ஆரம்பிப்பதாக ஏகமனதாக முடிவு செய்தனர்.

 

அஷ்-ஷைக் கே.எம். முக்ஸித் அஹ்மத்
பிறைக் குழு செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா