21.10.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திருகோணமலை மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல் மாவட்ட  காரியாலயத்தில்  தலைவர் அஷ்-ஷைக் நஸார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பின்வரும் விடயங்கள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.

 • அக்குரனை பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
 • முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட திருத்தம் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.
 • திருகோணமலை மாவட்டத்தை மையப்படுத்தி NNP - தேசிய வலையமைப்புத் திட்டத்தின் நிகழ்ச்சியை நடாத்த திட்டமிடப்பட்டது.
 • தமது மாவட்டத்தில் உள்ள அரபுக் கல்லூரி விடுகை வருட மாணவர்களுக்கான வழி காட்டல் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.
 • தமது மாவட்டத்தை சோர்ந்த முக்கிய பிரமுவர்களை KOL சந்தித்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக கல்ந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

21.10.2018ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒத்துழைப்பிற்கும் ஒருங்கிணைப்பிற்குமான குழு மற்றும் பிரச்சாரக் குழுவின் தேசிய மட்டத்திலான வலையமைப்புத் திட்டத்தின் மாத்தளை மாவட்ட உறுப்பினர்களின் ஒன்று கூடல் இடம் பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

2018.10.18 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டம் மாஹோ கல்கமுவக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் இடம் பெற்றது. இவ்வொன்று கூடலில் சமூக நலன் கருதி பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

14.10.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல் மாவட்ட  காரியாலயத்தில்  தலைவர் அஷ்-ஷைக் சுஹைப் தீனி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதேசக் கிளைகளை ஊக்குவிக்கும் செயற்திட்டத்தின் முதற்கட்டமாக பம்மன்ன கிளையின் பதவி தாங்குனர்கள் அழைக்கப்பட்டு கிளைத் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மேலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் அறிமுகப்படுத்தப்பட்டு செயற்படுத்தப்பட்டு வரும் தேசிய வலயமைப்புத் திட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

 

ஊடகப்பிரிவு 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

14.10.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் கிளையின் ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் நளீம் நுழாரி அவர்களின் தலைமையில் தோப்பூர் நூரிய்யா அரபிக்கல்லூரியில் நடைபெற்றது. இதில் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பாகவும், தற்போது விண்ணப்பம் கோரப்பட்டுள்ள சமய ஆசிரியர் நியமனத்திலுள்ள குறைபாடுகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

14.10.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாரை மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் மாவட்டக் கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் ஆதம்பாவா மதனி அவர்களின் தலைமையில் பாலமுனை ஜம்இய்யதுஸ் ஸஹ்வாவில் நடைபெற்றது. இவ்வொன்று கூடலில் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பாகவும், தற்போது விண்ணப்பம் கோரப்பட்டுள்ள சமய ஆசிரியர் நியமனத்திலுள்ள குறைபாடுகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

2018.10.10 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமைக் காரியாலயத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதித் தலைவர் அஷ்-ஷைக் அகார் முஹம்மத் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்த கலந்துரையாடலின் வரவேற்புரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச்செயலளர் அஷ்-ஷைக் முபாறக் அவர்கள் நிகழ்த்தினார்கள். பொதுப்பணிகளில் தம்மை ஈடுபடுத்த சந்தர்ப்பம் கிடைத்திருப்பது அல்லாஹ்வின் அருள் எனவும், எமது பாதுகாப்புக்களை இஸ்லாம் கூறுகின்ற துஆக்களை ஒதுவதின் மூலமாக உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டு வருகை தந்தவர்களை வரவேற்றுக் கொண்டார்.

தொடர்ந்தும் தலைமை உரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதித் தலைவர் அஷ்-ஷைக் அகார் முஹம்மத் அவர்கள் வழங்கினார்கள். அவர் தனதுரையில் இந்நாட்டு முஸ்லிம்கள் பல  உரிமைகளையும் சலுகைகளையும் பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.இவற்றைப் பெற்றுத்தந்த நமது முன்னோருக்கும் நாட்டுக்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும்.

முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் தொடர்பான விவகாரம் ஷரீஆ துறை அறிஞர் மட்டத்திலும் துறை சார்ந்தோர் மட்டத்திலும் பேசப்பட்டு தீர்வுகள் பெறப்பட வேண்டிய  ஒன்று இது பற்றி பொது வெளியில் அலச வேண்டிய அவசியம் இல்லை என்பதே எமது நிலைப்பாடாக  இருந்து வந்தது.

சட்டத் திருத்தம் தொடர்பில் மிகப் பெரும்பாலான விடயங்களில் அனைவர் மத்தியிலும் உடன்பாடே காணப்படுகின்றது. காலத்துக்கு தேவையான நடைமுறைக் கேற்ற பல சீர்திருத்தங்களிலும் கருத்தொற்றமை நிலவுகின்றது. சில விடயங்களில் நிலவும் கருத்து வேறுபாடுகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் அமர்ந்து தீர்த்துக் கொள்ள முடியும் என நாம் நம்புகின்றோம். அந்த வகையில் தொடர்ந்து கலந்துரையாடல்களை நடாத்தி வருகின்றோம்.

 ஷரீஆவை அணுக ஒரு மன்ஹஜ்-வழிமுறை இன்றியமையாததாகும்.இல்லாத போது பெரும் குழப்ப நிலையே உருவாகும்.இந்த வகையில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஷரீஆ, பிக்ஹு சார்ந்த விவகாரங்களுக்கான மன்ஹஜாக ஷாபிஈ மத்ஹப் அமைவதே  ஏற்புடையதும்  நடைமுறை சாத்தியமானதுமாகும்.முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளிலும் அங்கீகரிக்கப்பட்ட  ஒரு மத்ஹபின் அடிப்படையிலேயே முஸ்லிம் தனியார் சட்டம் அமைந்திருப்பதை காணமுடியும்.

இறுதி நபித்துவத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் சக்திகள் விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் கரிசனை கொள்ள வேண்டும்  என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் முஸ்லிம் விவாக விவாகரத்து சம்பந்தமான தெளிவு ஒன்றை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிச் செயலாளர் அஷ்-ஷைக் முர்ஷித் அவர்கள் வழங்கினார்கள். அவர் தனதுரையில் பின்வரும் நான்கு விடயங்கள் கட்டாயமாக இந்த திருத்தத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

 • காழி நீதி மன்றங்களினதும் காழி நீதிபதிகளினதும் தரம் அதிகரிக்கப்பட வேண்டும்.
 • காழி நீதி மன்ற மேல் சபைகளில் பெண்களின் பிரதி நிதித்துவம் இடம் பெற வேண்டும்.
 • மதா கொடுப்பனவு சட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும்.
 • பெண்களின் திருமண வயது 12 இலிருந்து 16 ஆகவும், ஆண்களின் திருமண வயது 12 இலிருந்து 18 ஆகவும் அதிகரிக்கப்பட வேண்டும்.

அதே போன்று பின்வரும் விடயங்களின் மார்க்க தெளிவுகளையும் முன்வைத்தார்.

 • காழிக்கு முன்னால் தலாக் கூறுவது.
 • பதியப்படாத நிகாஹ்கள் செல்லுபடியற்றவை .
 • திருமண வயதெல்லை.
 • பஸ்கு விவாகரத்திற்கு மதா கொடுப்பனவு கொடுத்தல்.
 • வலியின் அவசியம்.

அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமது கருத்துக்களை  தெரிவிக்க நேரம் வழங்கப்பட்டது. தன் போது பலரும் தமது சந்தேகங்களை கேட்டறிந்து கொண்டதோடு உரிய முறையில் இந்த சட்ட திருத்தம் இடம் பெற வேண்டுமெனவும் குறிப்பிட்டனர்.

இறுதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் ஹாஷிம் ஷூரி அவர்களின் நன்றியுரையுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

 

 

05.10.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளை மற்றும் நிந்தவூர் ஜூம்மா பள்ளிவாயல் ஆகியவற்றின் தலைமையில் இயங்கும் புகைத்தல் மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான செயலணியினால் அப்பிரதேசத்தின் 07 பள்ளிகளை சேர்ந்த கடை உரிமையாளர்களுடனான விழிப்புணர்வு நிகழ்வொன்று அட்டப்பள்ளம் ஹுதா ஜும்ஆப் பள்ளிவாயலில் அஸர் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

05.10.2108 ஆம் திகதி  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் அக்கிளையில்  புதிதாக இணைக்கப்பட்ட உலமாக்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வொன்று நிந்தவூர் ஜுமுஆ பள்ளிவாசலில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச மக்கள் கலந்து சிறப்பித்தனர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

2018.10.09

 

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

தனது வாழ்வை கல்வி மற்றும் சமூகப் பணிகளில் அமைத்துக் கொண்ட முன்னாள் சட்டமா அதிபரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான  முஹம்மத் ஷிப்லி அஸீஸ் அவர்கள் 2018.10.08 அன்று காலமானதையிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது.

முஹம்மத் ஷிப்லி அஸீஸ் அவர்கள் ஜனாதிபதி சட்டத்தரணியாகவும், இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் (BASL) முன்னாள் தலைவராகவும், அரசியலமைப்பு குழுவின் உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார். இலங்கை நீதித்துறை வரலாற்றில் இரண்டாவது முஸ்லிம்  சட்டமா அதிபர் என்ற கௌரவமும் இவருக்குண்டு.

பல சந்தர்ப்பங்களில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் இணைந்து செயற்பட்ட இவர் இன்னும் பல சமூக நலச் செயற்பாடுகளில் தன்னை அட்பணித்து செயற்பட்டு வந்துள்ளார். இலங்கை அஹதிய்யா அமைப்பின் தலைவராக பணியாற்றிய இவர் முஸ்ஸிம் விவாவக விவாகரத்து சட்ட திருத்தக் குழுவின் உறுப்பினராக இருந்து இந்நாட்டு முஸ்லிம்களுக்கு பாரிய சேவையாற்றினார்.

அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஜம்இய்யா தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றது. அல்லாஹுத்தஆலா அன்னாரின் பாவங்களை மன்னித்து அன்னாரது நற்கருமங்களைப் பொருந்திக் கொள்வானாக.

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்

பொதுச் செயலாளர்,

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா