30.10.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நற்பிட்டிமுனை கிளை மற்றும் நற்பிட்டிமுனை நம்பிக்கையாளர் சபை ஆகியன இணைந்து போதைப் பொருள் பாவனை எதிர்ப்புப் பேரணி, மாநாடு ஆகியவற்றை  நடாத்தியது. இதில் வர்த்தக சங்க உறுப்பினர்கள், சமூக சேவை அமைப்புக்கள், பாடசாலை மாணவர்கள, பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

31.10.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய  கிளையின் மாதாந்த ஒன்று கூடல் மருதானை சின்ன பள்ளியில்  இடம் பெற்றது. இந்நிகழ்வில் தமது கிளையினால் மாதாந்தம் ஏற்பாடு செய்யப்படும் பயான் நிகழ்வு சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டு நவம்பர் மாதத்திற்கான நிகழ்சியை புதுக்கடை ஸஃத் இப்னு அபீ வக்காஸ் பள்ளிவாசலில் உலமாக்களின் சேவையும் பொதுமக்களின் பங்களிப்பும் எனும் தலைப்பில் நடாத்த முடிவு செய்யப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முள்ளிப்பொத்தானை கிளையின் மாதாந்த ஒன்று கூடல் 29.10.2018 அன்று மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஷபீக் (ஸஹ்ரி) அவர்களின் தலைமையில் கிளையின் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சமூக நலன் கருதி பல விடயங்கள் ஆலோசனை செய்யப்பட்டதோடு பின்வரும் விடயங்கள் தீர்மானிக்கப்பட்டது.

✒ மஸ்ஜித் நிருவாகிகள், துறைசார்ந்தவர், பாடசாலை அதிபர்களை அழைத்து முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட திருத்தம் தொடர்பான விழிப்புனர்வு நிகழ்ச்சியொன்றை நடாத்துதல்

✒ எதிர்வரும் மாதம் 25ம் திகதி நடைபெற இருக்கும் ஜம்இய்யாவின் NNP - தேசிய வலையமைப்புத் திட்ட அறிமுக நிகழ்விற்கு எமது பிரதேச ரீதியாக 30 பேர்களை கலந்து கொள்ள ஏற்பாடு செய்தல்.

✒ கிளையின் பொருளாலரின் ராஜினாமா பற்றி சபையோர் கவனத்திற் கொண்டு வரப்பட்டு அது தொடர்பாக சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

✒ எமது பிரதேசத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களை (KOL) சந்திப்பது பற்றி கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாரை மாவட்டக் கிளை மற்றும் அம்பாரை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஆகிய இணைந்து 28.10.2018 அன்று முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட திருத்தம் தொடர்பாக உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் நிருவாகிகள் ஆகியோருக்கு தெளிவூட்டும் கருத்தரங்கு ஒன்று நிந்தவூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் இடம் பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல் 28.10.2018 அன்று மாவட்ட  காரியாலயத்தில்  தலைவர் அஷ் ஷேக் சுஹைப் (தீனி) அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் எதிர்வரும் 06/11/2018 ஆம் திகதி நடைபெறவுள்ள மத்திய நிருவாக சபைக் கூட்டம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் மாவட்ட ஜம்இய்யாவின் 15 உப குழுக்களின் செயலாளர்களும் அழைக்கப்பட்டு அவர்களுடனான விஷேட கலந்துரையாடலும் இடம்பெற்றது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா  

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் 2018.10.27 அன்று நிந்தவூரில் இயங்கி வரும் இரண்டு ஜனாஸா நலன்புரி அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்று நிந்தவூர் ஜுமுஆ மஸ்ஜிதில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான சில விடயங்களும் கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் 20.10.2018 அன்று இடம் பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் நிந்தவூரில் இயங்கி வரும் ஸக்காத் சபையுடனான சந்திப்பு  2018.10.23 அன்று இடம் பெற்றது. இந்நிகழ்வின் போது ஸக்காத் சபையின் செயற்பாடுகள் சம்பந்தமாக கிளையின் உறுப்பினர்கள் கேட்டறிந்து கொண்டதுடன், இன்னும் பல விடயங்கள் சம்பந்தமான அபிப்பிராயங்களும், ஆலோசனைகளும் கிளையின் உறுப்பினர்களினால்  முன்வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நிந்தவூர் கிளை சார்பாக பல உலமாக்களும், ஸக்காத் சபையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுள்ளை மாவட்டம் பதுள்ளை நகரக்கிளையின் தற்போதைய நிர்வாகத்தின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு விஷேட கலந்துரையாடல் ஒன்று 24.10.2018 அன்று இடம் பெற்றது. இந்நிகழ்வில் பதுள்ளை நகரக்கிளையின் கடந்த ஒரு வருடத்தில் மேற்கொண்ட செயற்பாடுகளும், கணக்கறிக்கையும் முன் வைக்கப்பட்டதுடன் அடுத்தாண்டிற்கான செயற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வில் பதுள்ளை மாவட்டக் கிளையின் சார்பாக அதன் தலைவர் அஷ்-ஷைக் மிர்ஷாத், உப தலைவர் அஷ்-ஷைக் மும்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பல ஆலோசனைகளையும் வழங்கினார்கள். 

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

 

24.10.2018ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒத்துழைப்பிற்கும் ஒருங்கிணைப்பிற்குமான குழு மற்றும் பிரச்சாரக் குழுவின் தேசிய மட்டத்திலான வலையமைப்புத் திட்டம் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் நிகழ்வு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனுராதபுர மாவட்டம் மதவச்சிக் கிளையின் ஏற்பாட்டில் மதவச்சி ஜும்மா மஸ்ஜிதில்  இடம் பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

2018.10.24 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு  வடக்குக் கிளையின் ஏற்பாட்டில் அப்பகுதியை சேர்ந்த மக்தப் அதிபர்கள் மற்றும் மக்தப் MR களுடனான ஒன்று கூடல் ஒன்று மாதம்பிட்டிய ஜும்மா மஸ்ஜிதில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வழிநாடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் மக்தப் பாடத்திட்டத்தை வெற்றிகரமாக  முன்னெடுப்பது எவ்வாறு எனும் தலைப்பில் கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா