2018.12.11 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின்  சமூக சேவைப் பிரிவின் மாதாந்த ஒன்று கூடல் பிரிவின் தலைவர் அஷ்-ஷைக் அஜ்மல்  அவர்களின் தலைமையில் கிளையின் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன் போது 2019 ஆம் ஆண்டிற்கான  திட்டமிடல்கள் திட்டமிடப்பட்டு செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

10.12.2018 அன்று பலஸ்தீன் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஸுஹைர் முஹம்மத் ஹமதல்லாஹ் ஸைத் மற்றும் பலஸ்தீன் நாட்டின் பாதரிகளில் ஒருவரான தாலாத் ஸஹீன் ஆகியோர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தனர். இதன் போது பல்ஸதீன் நாட்டினதும், பைத்துல் மக்திஸினதும் நிலமைகளை விவரித்ததுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் கலந்துரையாடினார்கள். இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

11.12.2018 அன்று பிரிகேடியர் அஸாட் இஸ்ஸடீன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உமலாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் அடுத்த வருடத்திற்கான செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடியதுடன், போதைப் பொருள் பாவனை விழிப்புணர்வு சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக், உப தலைவர்களான அஷ்-ஷைக் எஸ்.எச் ஆதம் பாவா, அஷ்-ஷைக் ஐ.எல்.எம் ஹாஷிம் ஷூரி மற்றும் இளைஞர் விவகாரப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் அர்க்கம் நூரமீத் ஆகியோரும், இளைஞர் விவகாரப் பிரிவின் தலைமையக செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

10.12.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சம்மாந்துறைக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் கிளையின் காரியாலயத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கிளையின் உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

07.12.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் கிளையின் கல்விப் பிரிவின் தலைவர் அஷ்-ஷைக் அமீர் அலி அவர்களின் தலைமையில் கல்விப் பிரிவின் ஒன்று கூடல் இடம் பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

02.12.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டக் கிளையின் மாதாந்த  ஒன்று கூடல் வவுனியா புதிய சாளம்பைக்குளம் அல்- அக்‌ஷா ஜுமுஆப் பள்ளிவாசலில்  கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஜுனைத் தலைமையில் நடைபெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

02.12.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கந்தளாய் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் இன்ஷாப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய வலயமைப்புத் திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

01.12.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நடவடிக்கைகள், அதன் பிரிவுகளின் செயற்பாடுகள் மற்றும் பத்வா வழங்குவதற்கு கையாளும் அணுகுமுறைகள் எனும் தலைப்புகளில் தெளிவூட்டல் நிகழ்ச்சி ஒன்று வெள்ளவத்தை நிமல் ரோட் ஜுமுஆ பள்ளிவாசலில் நடாத்தப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

01.12.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை மாவட்டம்  உக்குவலை, வறக்காமுறை கிளையின் மாதாந்த ஒன்று கூடல் கிளையின் காரியாலயத்தில் இடம் பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

29.11.2018 அன்று அகில இலங்கை   ஜம்இய்யதுல்  உலமாவின் வவுனியா மாவட்டம் பட்டானிச்சூர்  கிளையின் ஏற்பாட்டில்  சர்வமத குழு LOCAL INTER RELIGIOUS COMMITTEE   ( LLRC) அமைப்பின் அனுசரணையின்  ஊடாக  உலமாக்களுக்கான " மத சக வாழ்விற்கான கூட்டு  ஈடுபாடு " எனும் தொனிப்பொருளில்  விஷேட  கலந்துரையாடல் ஒன்று பட்டானிச்சூர்  மன்பஉல் உலூம் அரபுக்கல்லூரியில்  நடைபெற்றது .

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா