கடந்த 2022.06.18 ஆம் திகதி ஜம்இய்யாவின் மத்திய சபைக் கூட்டத்தில் நடந்தது என்ன?
ஜம்இய்யாவின் தலைவர் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் எவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றனர்?
ஜம்இய்யாவுடைய யாப்பின் அடிப்படையில் நிறைவேற்று அதிகாரம் தெரிவு செய்யப்பட்டிருக்கும் நிறைவேற்றுக் குழுவுக்குரியதாகும். தலைவர், செயலாளர், பொருளாளர், உட்பட அனைத்து பதவி தாங்குனர்களும் நிறைவேற்றுக் குழுவுடைய கடமைகளையும் தீர்மானங்களையும் நடைமுறைப்படுத்தக் கூடியவர்களாகவும் நிறைவேற்றக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். அதன் அடிப்படியில் 100 வருடத்தை அடையக்கூடிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலாமா அழகிய, தெளிவான ஜனநாயக முறையையும் மஷூராவையும் அடிப்படையாகக் கொண்டு - செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.